ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் வாழ்வாதார செலவுகளினால் ஸ்தம்பித்த துறைகள்!

ஜெர்மனி தொழிற்சங்கம் வேலை நிறுத்த போராட்டத்திற்கு அழைப்பு விடுத்து இருந்ததை அடுத்து வேலை நிறுத்தமும் ஆர்ப்பாட்டங்களும் நடைப்பெற்றுள்ளன.

நேற்று முன்தினம் ஜெர்மனியின் தொழிற்சங்கமான  way D என்ற தொழிற்சங்கமானது பல பணியாளர்களை பணி புறக்கணிப்பில் ஈடுப்படுமாறு வேண்டிருந்தது.

அதாவது ஜெர்மனியில் தற்போது வாழ்வாதார செலவுகள் அதிகரித்து காணப்படுவதால் தங்களது சம்பளம் பற்றாக்குறை ஏற்பட்டிருக்கின்றது.

இந்நிலையிலேயே இந்த பணியாளர்கள் சம்பள உயர்வையை வேண்டி இவ்வகையான பணி புறக்கணிப்பில் ஈடுப்பட்டிருந்தார்கள்.

குறிப்பாக பொது போக்குவரத்தில் பணியாற்றுபவர்கள் பணி புறக்கணிப்பில் ஈடுப்பட்டிருக்கின்றார்கள்.

இவ்வாறு பொது போக்குவரத்தில் பணியாற்றுபவர்கள் பணி புறக்கணிப்பதால் பொது மக்களுக்கு அசௌகரியத்தை ஏற்படுத்தியதாகவும் தெரிய வந்திருக்கின்றது.

இந்த தொழிற்சங்கத்தினால் நிர்வாகிக்கப்பட்ட இந்த ஆர்ப்பாட்டம் ஒன்று எஸன் நகரில் நடைபெற்றதாகவும் மொத்தமாக 2500 பேர் இந்த ஆர்பாட்டத்தில் பங்குபற்றியதாகவும் தெரிய வந்திருக்கின்றது.

இதேவேளை இவர்கள் தங்களது சம்பள உயர்வு 30 சதவீதமாக இருக்க வேண்டும் என்று கோரிக்கையை முன்வைத்துள்ளதாகவும் தெரிய வந்திருக்கின்றது.

இந்த தொழிற்சங்கத்தின் பணிப்புறக்கணிப்பு போராட்டத்தினால் ஜெர்மனியின் பல விமான நிலையங்களும் ஸ்தம்பித்த நிலை ஏற்பட்டதாக தெரியவந்திருக்கின்றது.

குறிப்பாக நோற்றின்பிஸ்பாலின் மாநிலத்தின் டிறிஸில்ன்டோ விமான நிலையம் கொலொன் பொன் விமான நிலையத்திலும் பாதுகாப்பு கடமைகளில் ஈடுப்படுகின்றவர்கள் பணிபுறக்கணிப்பில் ஈடுப்பட்ட காரணத்தினால்  பல விமான பரப்புக்கள் இடைநிறுத்தப்பட்டதாகவும் தெரிய வந்திருக்கின்றது.

 

(Visited 5 times, 1 visits today)

hinduja

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி