ஐரோப்பா

செவஸ்டோபோலில் ட்ரோன் தாக்குதல் பற்றி எரியும் எரிபொருள் தொட்டி!

கிரிமியாவின் துறைமுக நகரமான செவஸ்டோபோலில் ட்ரோன் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இந்த தாக்குதலுக்கு பிறகு குறித்த பகுதியில் இருந்து எரிபொருள் தொட்டி தீபிடித்து எரிந்ததாக மொஸ்கோவினால் நிறுவப்பட்ட கவர்னரான மைக்கேல் ரஸ்வோசேவ் தெரிவித்துள்ளார்.

குறித்த தீ விபத்தில் யாருக்கும் பாதுப்பு ஏற்படவில்லை என்றும், நிலைமை கட்டுப்பாட்டிற்குள் இருப்பதாகவும் அவர் கூறினார்.

அதேநேரம் எரிபொருளின் அளவு அதிகமாக இருப்பதால், தீயை கட்டுப்படுத்த நேரம் எடுக்கும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த தாக்குதலுக்கு உக்ரைன் மீது ரஷ்ய அதிகாரிகள் குற்றம் சாட்டியுள்ளனர். இருப்பினும் இது குறித்து உக்ரைன் பதில் எதுவும் அளிக்கவில்லை.

கிரிமியன் தீபகற்பத்தில் உள்ள செவஸ்டோபோல் நகரம் கடந்த 2014 ஆண்டு ரஷ்யா கைப்பற்றியது. தற்போது போர் நடைபெற்று வருகின்ற நிலையில், இந்த பகுதியை மீண்டும் கைப்பற்ற உக்ரைனும், தக்கவைத்துக்கொள்ள ரஷ்யாவும் போராடி வருகின்றன.

 

(Visited 5 times, 1 visits today)

VD

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்