இலங்கை செய்தி

கொலைச் சந்தேக நபர்களை கைது செய்ய பொதுமக்களின் உதவியை நாடியுள்ள பொலிசார்

மிதிகம பிரதேசத்தில் அண்மையில் இடம்பெற்ற கொலைச் சம்பவம் தொடர்பில் சந்தேகநபர்கள் மூவரை தேடும் நடவடிக்கையில் இலங்கை பொலிஸார் பொதுமக்களின் உதவியை கோரியுள்ளனர்.

இதன்படி, கடந்த மார்ச் மாதம் மிதிகம பிரதேசத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் உணவக உரிமையாளரைக் கொன்ற சம்பவத்துடன் தொடர்புடையதாகக் கூறப்படும் மூவரைத் தேடுவதற்கு உதவுமாறு பொதுமக்களிடம் பொலிஸார் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மார்ச் 29 அன்று வாகனத்தில் வந்த இனந்தெரியாத நபர்களால் உணவக உரிமையாளர் ஒருவர் அவரது உணவகத்திற்கு முன்னால் சுட்டுக் கொல்லப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

மாத்தறை குற்றப் புலனாய்வுத் திணைக்களப் பிரிவினரால் நால்வர் கைது செய்யப்பட்டிருந்த போதிலும், குற்றச் செயல்களுக்குப் பயன்படுத்தப்பட்ட வாகனமும் கைப்பற்றப்பட்டுள்ள நிலையில், மேலும் மூவர் துப்பாக்கிச் சூட்டில் ஈடுபட்டிருக்கக் கூடும் என மேலதிக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

இது தொடர்பில் அறிக்கையொன்றை வெளியிட்ட பொலிஸ் ஊடகப் பிரிவு, சந்தேகநபர்கள் மூவரின் படங்களையும் வெளியிட்டதுடன், மாத்தறை குற்றப் புலனாய்வுப் பிரிவின் உதவி பொலிஸ் அத்தியட்சகரை 071 859 2910 அல்லது கிளையின் பொறுப்பதிகாரி 071 859 6406 என்ற இலக்கத்திற்கு தொடர்பு கொள்ளுமாறு பொதுமக்களை கோரியுள்ளது.

(Visited 4 times, 1 visits today)

priya

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை