செய்தி வட அமெரிக்கா

கனேடியர்களை தாக்கும் மர்ம மூளை நோய்…!

கனடாவின் நியூபிரவுன்ஸ்விக் பகுதியைச் சேர்ந்த மக்களை ஒரு வகை மர்ம நோய் தாக்கி வருவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

தாம் மர்மமான மூளை சார் நோயினால் பாதிக்கப்பட்டுள்ளதாக நோயாளிகள் தெரிவிக்கின்றனர்.எனினும், இவ்வாறான ஓர் மர்ம மூளை நோய் எதுவும் கிடையாது மாகாண அரசாங்கம் தெரிவித்துள்ளது.புதிதாக எவ்வித நரம்பியல் நோய்களும் ஏற்படவில்லை என குறிப்பிட்டுள்ளது.

நோய் பாதிப்புக்கு உட்பட்டவர்கள் ஏற்கனவே அடையாளம் காணப்பட்ட நோய்களினால் பாதிக்கப்பட்டவர்கள் என தெரிவித்துள்ளது.எனினும், வித்தியாசமான நோய் அறிகுறிகள் தென்படுவதாக இந்த நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.

இவ்வாறான நோய் அறிகளைக் கொண்ட நோயாளிகள் அல்பர்ட்டா, கியூபெக் மற்றும் கியூபெக் மாகாணங்களிலும் பதிவாகியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.இந்த நோய்த் தொடர்பில் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட வேண்டுமென கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

 

(Visited 3 times, 1 visits today)

dhivyabharathy

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி