ஓட்டோமிக் ஹார்ட் கேமை கேமிங் தளங்களில் இருந்து நீக்குமாறு வலியுத்தல்!
ஓட்டோமிக் ஹார்ட் எனப்படும் புதிய வீடியோ கேமை கேமிங் தளங்களில் இருந்து தடுக்குமாறு வலியுத்தப்பட்டுள்ளது.
உக்ரைன் – ரஷ்யா இடையிலான போருக்கு மத்தியில் இந்த கேமானது, ரஷ்யா சார்பு நிலைக்கான பிரசாரமாக காணப்படுவதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
இது குறித்து உக்ரைனின் துணைப் பிரதமரும், டிஜிட்டல் மாற்றம் அமைச்சருமான மைக்கைலோ ஃபெடோரோவ் சோனி, மைக்ரோசாப்ட் மற்றும் வால்வ் ஆகியவற்றின் தலைவர்களுக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார். குறித்த கடிதத்திலேயே மேற்படி வலியுத்தப்பட்டுள்ளது.
அந்த கடிதத்தை ருவிட்டரில் பதிவிட்டுள்ள அவர், இந்த விளையாட்டின் மூலம் திரட்டப்பட்ட பணம் ரஷ்யாவின் பட்ஜெட்டுக்கு மாற்றப்படும் அபாயம் உள்ளதாக தெரிவித்தார். இது உக்ரைனுக்கு எதிரான போருக்கு ஆதரவாக நிதியளிக்கப்பயன்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்நிலையில், இது குறித்து பல்வேறு விமர்சனங்கள் எழுந்துள்ளன.
;,