இந்தியா செய்தி

ஒளிப்பதிவாளர் மீது தாக்குதல் பத்திரிகையாளர்கள் ஆர்ப்பாட்டம்

கோவை கிணத்துக்கடவு  நம்பர் 10.முத்தூர் பகுதியில் சட்டவிரோதமாக கல்குவாரி செயல்பட்டு வருகிறது.

இதனை கோவையைச் சேர்ந்த தனியார் தொலைக்காட்சி செய்தியாளர் அருண் மற்றும் ஒளிப்பதிவாளர் பாலாஜி ஆகியோர் படம் பிடித்து செய்தியாக்கச் சென்றனர்.

அப்போது, அவர்களைத் தடுத்த சட்டவிரோத கல் குவாரி உரிமையாளர், கல்வாரியை படம் பிடிக்கக் கூடாது என்று மிரட்டி உள்ளார். மேலும் குண்டர்களை வைத்து ஒளிப்பதிவாளர் பாலாஜி மீது கொடூர தாக்குதல் நடத்தியுள்ளார்.

இந்த சம்பவங்கள் அனைத்தும் சம்பந்தப்பட்ட தனியார் தொலைக்காட்சியிலேயே லைவ் செய்யப்பட்டுள்ளன. இருந்தபோதிலும், போலீசார் இதுவரை நடவடிக்கை மேற்கொள்ளவில்லை.

இதனிடையே செய்தி சேகரிக்கச் சென்ற  ஒளிப்பதிவாளர் மீது தாக்குதல் நடத்திய கல்காரி உரிமையாளர் மற்றும் குண்டர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரியும்,

பத்திரிகையாளர்களுக்கு பாதுகாப்பு வழங்க கோரியும் கோவை மாவட்ட பத்திரிகையாளர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு திடீர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனைத்தொடர்ந்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் வரை கோஷமிட்டபடி சென்று, மாவட்ட கண்காணிப்பாளரிடம் புகார் மனு அளித்தனர்.

 

(Visited 5 times, 1 visits today)

hinduja

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி