ஏப்ரல் முதல் அத்தியாவசிய மருந்துகளின் விலை 12 சதவீதத்தினால் அதிகரிக்கின்றது

அத்தியாவசிய மருந்துப் பொருட்களின் விலை வரும் ஏப்ரல் 1-ம் திகதி முதல் உயர்கிறது
அதன்படி 27 சிகிச்சைகளுக்காக 384 மூலக்கூறுகள் கொண்ட 900 மருந்துகளின் விலை எதிர்வரும் ஏப்ரல் முதலாம் திகதிமுதல் 12 சதவீதத்தினால் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
ஏற்கனவே பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு உள்ளிட்ட அனைத்து பொருட்களின் விலையும் உயர்ந்து வரும் நிலையில் தற்போது மருந்துகளின் விலையும் உயர்த்தப்பட்டதால் நடுத்தர மற்றும் வறுமைக்கோட்டின் கீழ் வாழும் மக்களின் பொருளாதாரத்தில் பாரிய பிரச்சனைகளை ஏற்படுத்தும் என பலரும் கருத்து தெரிவித்துள்ளனர்.
(Visited 6 times, 1 visits today)