உயர்தர பரீட்சையின் சில பாடங்களுக்கான விடைத்தாள் மதிப்பீட்டுப் பணிகள் இன்று ஆரம்பம

கல்வி பொதுத் தராதர உயர்தர பரீட்சையின் சில பாடங்களுக்கான விடைத்தாள் மதிப்பீட்டுப் பணிகள் இன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது .
கிறிஸ்தவம்இ நடனமும் நாடகமும் அரங்கியலும் ஆகிய பாடங்களுக்கான மதிப்பீட்டுப் பணிகள் இன்று ஆரம்பிக்கப்பட்டதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர குறிப்பிட்டார்.
மேலைத்தேய சங்கீதம், சித்திரம் உள்ளிட்ட சில பாடங்களுக்கான மதிப்பீட்டுப் பணிகள்
எதிர்வரும் திங்கட்கிழமை ஆரம்பிக்கப்படவுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் தெரிவித்தார்.
(Visited 13 times, 1 visits today)