இவருக்கு ஆன்லைனில் ரம்மி விளையாடும் பழக்கம் ஏற்பட்டது
திருச்சி மாவட்டம், மணப்பாறை அடுத்த வையம்பட்டி காந்திநகரில் வசித்து வந்தவர் வில்சன் (26). வையம்பட்டி காவல் நிலையம் எதிரே உள்ள தனியார் பேக்கரியில் பலகாரம் போடும் மாஸ்டராக வேலையில் இருந்து வந்துள்ளார் இவருக்கு ஆன்லைனில் ரம்மி விளையாடும் பழக்கம் ஏற்பட்டதாகவும். அதில் நண்பர்களிடமும் உறவினர்களிடமும் கடன் வாங்கி சுமார் மூன்று லட்சத்திற்கு மேலாக இழந்ததாகவும் கூறப்படுகிறது.
இதில் மன உளைச்சலுக்கு ஆளான வில்சன் கடந்த சில நாட்களாக வேலைக்கு செல்லவில்லையாம். இரு தினங்களுக்கு முன்பு மீண்டும் பேக்கரிக்கு வேலைக்கு சென்றுள்ளார். இந்நிலையில் நேற்று அஞ்சல்காரன்பட்டி சவேரியார்புரத்தில் உள்ள தனது தாயார் வீட்டிற்கு சென்ற வில்சன், வீட்டில் யாரும் இல்லாத நிலையில் தூக்கிட்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார்.
உறவினர்களால் மீட்கப்பட்டு மணப்பாறை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சையில் இருந்த வில்சன் இன்று அதிகாலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
தகவலறிந்து நிகழ்விடத்திற்கு சென்ற போலீஸார் வில்சன் உடலை கைப்பற்றி உடற்கூராய்விற்காக மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர் இச்சம்பவம் குறித்து வையம்பட்டி போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
திருச்சி மாவட்ட கண்காணிப்பாளர் சுஜித் குமார் தகவல்..
கடந்த 6 மாதத்துக்கு முன்பு ஆன்லைன் ரம்மி தொடர்ந்து விளையாடு கொண்டு இருந்திருக்கிறார். அதனால் பல கடன் பிரச்சினை ஏற்பட்டுள்ளது.
தற்போது சில மாதங்களாக அந்த கடன் பிரச்சனைக்கு பதில் கூற முடியாமல், கடன் சுமை அதிகமானாலும், தற்கொலை செய்து கொண்டதாக முதல் கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளதாக தெரிவித்தார்.