இந்தூரில் கிணற்றுக்குள் விழுந்து 35 பேர் உயிரிழப்பு!

மத்திய பிரதேச மாநிலம் இந்தூரில் உள்ள பாலேஷ்வர் மகாதேவ் கோவிலின் கிணற்று பகுதியில் உள்ள மேற்கூரை இடிந்து விழுந்ததில் குறைந்தது 35 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
படிக்கட்டுக் கிணற்றின் மேற்கூரை இடிந்து விழுந்ததில், ஆயிரக்கணக்கான மக்கள் கிணற்றுக்குள் விழுந்துள்ளதாக கூறப்படுகிறது.
இதில் 35 பேர் உயிரிழந்துள்ளதுடன், பலர் கிணற்றுக்குள் சிக்கியிருப்பதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் 18 மணி நேரமாக குறித்த பகுதியில் மீட்புப் பணிகள் நடைபெற்று வருவதாக மாநில அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
(Visited 4 times, 1 visits today)