இந்திய அரசாங்கத்தின் மொத்தக்கடன் 155.80 லட்சம் கோடி ரூபாவாக அதிகரிப்பு

நடப்பு ஆண்டில் இந்திய அரசாங்கத்தின் மொத்தக்கடன் 155.80 லட்சம் கோடி ரூபாவாக அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது
இந்தக் கடன்களில் 148.8 லட்சம் கோடி ரூபாய் உள்நாட்டுக் கடனாகவும், 7 லட்சம் கோடி ரூபாய் வெளிநாட்டுக் கடனாகவும் உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கொரோனா வைரஸ் தொற்றுக்கு முன்பே நாட்டின் கடன் உயரத் தொடங்கியது என்பது புள்ளி விவரங்களிலிருந்து தெரிவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
2017-18 இல் கடன்களானது 82.9 லட்சம் கோடி ரூபாவாக இருந்ததாகவும், 2018-19 இல் 92.5 லட்சம் கோடி ரூபாவாகவும், 2019-20 இல் 105.2 லட்சம் கோடியாகவும், 2020-21இல் 122.1 லட்சம் கோடியாகவும் கடன் பட்டியல் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
2021-22 இல் கடன் 138.9 லட்சம் கோடியாகவும் அதிகரித்துள்ளது. இந்த ஆண்டு மொத்தமுள்ள 45 லட்சம் கோடி ரூபாய் ஒன்றிய வரவு செலவு திட்டத்தில் 27 லட்சம் கோடி கடன்களாகும். அதில் 9.4 லட்சம் கோடி ரூபாய் வட்டிக்கு ஒதுக்க வேண்டும் என தெரிவிக்கப்படுகின்றது.