அமெரிக்காவில் பசியோடு மருத்துவமனைக்குள் நுழைந்து பரபரப்பை ஏற்படுத்திய மான்
Òஅமெரிக்காவில் பசியோடு இருந்த மான் ஒன்று உணவைத் தேடி மருத்துவமனைக்குள் நுழைந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்காவின் அலாஸ்கா (Alaska) மாநிலத்திலுள்ள Providence Health Parkஇல் நுழைந்த மான் அங்கிருந்த செடிகளைத் தின்றுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
சுற்றி இருந்தவர்களைக் கண்டுகொள்ளாமல் அந்த இளம் மான் தன் செயலில் குறியாய் இருந்ததாகக் கூறப்படுகிறது.
மானை மருத்துவமனையிலிருந்து வெளியேற்ற சிலர் அதனைச் சுற்றி வளைத்தனர்.
அதன் பின்னர் அதனை மருத்துவமனையின் தானியக்கக் கதவுகளை நோக்கிச் செல்ல வைத்தனர்.
இது போன்று மான் மருத்துவமனையில் நுழைவதைப் பார்ப்பது அரிது. ஆகையால் அருகில் இருந்தவர்கள் உற்சாகமாக நிழற்படங்களையும் காணொளிகளையும் எடுத்தனர், என மருத்துவமனையின் பாதுகாப்பு இயக்குநர் குறிப்பிட்டுள்ளார்.
(Visited 11 times, 1 visits today)





