ஆசியா செய்தி

அதிகரிக்கும் பதற்றம் : தைவானுக்கு ஆயுதங்களை வழங்கும் அமெரிக்கா

தைவானுக்கு மேலும் ஆயுதங்களை விநியோகம் செய்ய அமெரிக்கா ஒப்புதல் வழங்கியுள்ளது.

இதன்படி 619 மில்லியன் மதிப்புள்ள எஃப்-16 போர் விமானங்களும், வெடிமருந்துகள், ஏஜிஎம்-88 கதிர்வீச்சி எதிர்ப்பு ஏவுகணைகள், ஆகியவை உள்ளடங்குவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்காவின் இந்த நடவடிக்கை சீனாவிற்கும் அமெரிக்காவிற்கும் இடையில் இருக்கும் பதற்றத்தை மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

முன்னதாக தைவான் எல்லை பகுதியில் சீனா போர் பயிற்சிகளை  மேற்கொண்டும், போர்க்கப்பல்கள் மற்றும் விமானங்களை நிலைநிறுத்தியும் அச்சுறுத்தி வருகிறது.

இந்நிலையில் தைவான் எல்லைக்குள் நேற்று சீனாவின் 25 போர் விமானங்கள் மற்றும் மூன்று போர் கப்பல்கள் நுழைந்திருந்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

(Visited 9 times, 1 visits today)

priya

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி