தென்னிலங்கையில் நடந்த கோர விபத்து!!! 300 மீட்டர் தூரம் இழுத்துச் செல்லப்பட்ட கார்
கண்டியில் இருந்து மாத்தறை நோக்கி பயணித்த சியான் குமாரி ரயிலுடன் கார் மோதியதில் இருவர் உயிரிழந்துள்ளனர்.
அஹங்கம – வல்ஹெங்கொட பகுதியைச் சேர்ந்த 80 வயதுடைய பெண் ஒருவரும் 35 வயதுடைய இளைஞருமே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.
அந்த இடத்தில் ரயில்வே கேட் இல்லை, மணி மற்றும் லைட் சமிக்ஞைகள் ஒளிரும் போது கார் கடவைகை்குள் நுழைந்ததுடன் ரயிலில் மோதி சுமார் 300 மீட்டர் தூரம் இழுத்துச் சென்றது.
விபத்தில் உயிரிழந்த இருவரும் உறவினர்கள் எனவும், குறித்த பெண் காலி பிரதேசத்தில் உள்ள தனியார் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பும் வேளையில் விபத்துக்குள்ளாகியுள்ளார்.
இந்த இடத்தில் கடந்த காலங்களில் பல விபத்துகள் நடந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
(Visited 10 times, 1 visits today)





