சீனாவில் வாடகைக்குக் காதலி நடைமுறை – இளைஞர்கள் மத்தியில் அதிகரித்துவரும் போக்கு
சீனாவில் திருமணம் செய்துகொள்வதில் விருப்பமில்லாத இளைஞர்கள் சிலர் காதலியை வாடகைக்கு எடுக்கும்போக்கு அதிகரித்துள்ளது.
இன்னும் திருமணமாகாத ஆண்களும் ஓரினச் சேர்க்கையாளர்களும் அந்தச் சேவையை அதிகம் நாடுவதாக தெரியவந்துள்ளது.
திருமணம் செய்துகொள்ளுமாறு கூறும் பெற்றோரிடமிருந்து தப்பிக்க அவர்கள் அவ்வாறு செய்வதாகக் கூறப்பட்டது.
இதற்காகச் சில பெண்கள் முழுநேர வேலை இருந்தும் பகுதிநேரத்தில் வாடகைக் காதலியாக இருக்க ஒப்புக்கொள்கின்றனர்.
அதற்கான ஒருநாள் கட்டணம் 1,000 யுவான் (195 வெள்ளி) ஆகும். முன்பணமாக 500 யுவான் (97 வெள்ளி) செலுத்தவேண்டும். காதலியோடு பயணம் செய்ய வேண்டுமென்றால் கூடுதலாக 350 யுவான் (68 வெள்ளி) கொடுக்க வேண்டும். முன்கூட்டியே நிழற்படத்தைப் பார்க்க வேண்டுமென்றால் அதற்கு 20 யுவான் (4 வெள்ளி) கட்டணமும் உண்டு.
வாடகைக் காதலியை முன்பதிவுசெய்ய சில இணையத்தளங்கள் உள்ளன. தலைநிலத்திலிருந்து பெண் செய்தி நிருபர் ஒருவர் இதைச் சோதித்துப் பார்க்கும் முயற்சியில் இறங்கினார்.
தம்மை ஆண் எனக் காட்டிக்கொண்டு காதலியை வாடகைக்கு எடுக்க அவர் விண்ணப்பம் செய்தார்.
அந்தச் சோதனையின் மூலம் இந்தத் தகவல்கள் கிடைத்ததாக Chao News செய்தி நிறுவனம் கூறியது.
பொதுவிடுமுறை நாள்களில் வாடகைக் காதலிக்கான சேவைக்குப் பலரும் முன்கூட்டியே பதிவுசெய்வது வழக்கமாம்.
அதனால் அந்தக் காலக்கட்டத்தில் அவர்களின் சேவையைப் பெறுவது கடினம் என்றும் கூறப்ப