Site icon Tamil News

சாமியோ சரணம்

1】வருடம்:~ ஸ்ரீ சோபகிருது:
( சோபகிருது-நாம சம்வத்ஸரம் )

2】அயனம்:~ உத்தராயணம்.

3 】ருது:~ வஸந்த- ருதெள.

4】மாதம்; ~ சித்திரை:-
( மேஷம்- மாஸே. )

5】பக்ஷம்:~ சுக்ல- பக்ஷம்:
– வளர்- பிறை.

6】திதி:~ நவமி:-
மாலை: 06.44. வரை, பின்பு தசமி.

7】ஸ்ரார்த்த திதி:~ சுக்ல- நவமி.

8】நேத்திரம்: 2. – ஜீவன்: 1/2.

9】நாள் :~ சனிக்கிழமை { ஸ்திரவாஸரம் },
கீழ்- நோக்கு நாள்.

10】நக்ஷத்திரம்:~
ஆயில்யம்:- பிற்பகல்: 01.08 வரை, பின்பு மகம்.

11】நாம யோகம்:-
கண்டம்:- காலை: 10.02. வரை, பின்பு விருத்தி.

12】அமிர்தாதி- யோகம்:-
பிற்பகல்: 01.08 வரை யோகம் சரியில்லை, பிறகு அமிர்த யோகம்.

13】கரணம்: ~ ( 12-00 – 01-30 )
பாலவம்:- அதிகாலை: 05.45 வரை, பின்பு கௌலவம், மாலை: 06.44. வரை, பிறகு  தைதுலம்.

நல்ல நேரம்:
காலை: ~ 07.30 – 08.30 AM.
மாலை: ~ 04.30 – 05.30 PM.

கௌரி நல்ல நேரம்:
காலை:  ~ 10.30 – 11.30 AM.
இரவு     : ~ 09.30 – 10.30 PM.

ராகு- காலம்:
காலை: ~ 09.00 – 10.30 AM.

எமகண்டம்:
பிற்பகல்: ~ 01.30 – 03.00 PM.

குளிகை:
காலை: ~ 06.00 – 07.30 AM.

( குளிகை காலத்தில் ஒரு காரியம் செய்தால் மீண்டும் அதேபோன்று நடைபெறும் என்பதால் செய்கின்ற காரியங்களை சிந்தித்து அனுசரித்து செய்யவும்.)

சூரிய- உதயம்:
காலை: 05.58 AM.

சூரிய- அஸ்தமனம்:
மாலை: 06.20. PM.

சந்திராஷ்டம நட்சத்திரம்:
பூராடம், & உத்திராடம்.

சூலம்: கிழக்கு.

பரிகாரம்:  தயிர் .

இன்றைய- நன்நாளில்:-

பாவேந்தர் பாரதிதாசன் பிறந்த தினம்.
ஓவியர் ரவிவர்மா பிறந்த தினம்.
உலக நடன தினம்.
உலக கால்நடை தினம்.
இரசாயன ஆயுதங்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கான உலக தினம் .

தின- சிறப்புக்கள்:

சித்திரை :- 16:
29- 04- 2023 சனிக்கிழமை

சந்திராஷ்டம ராசி:

பிற்பகல்: 12.46. வரை தனுசு, பிறகு மகரம் ராசி.

ஸ்தல- விசேஷங்கள்:

திருவெற்றியூர் ஸ்ரீபாகம்பிரியாள் அம்மன் திருக்கோவில் சித்திரை திருவிழா ஐந்தாம் நாள் உற்சவம் இரவு திருக்கல்யாணம், பிறகு யானை வாகனம் புஷ்ப பல்லக்கில் சுவாமி அம்பாள் திருவீதியுலா.

திருவையாறு ஸ்ரீசிவபெருமான் தன்னை தானே பூஜித்தல் விருஷப சேவை.

கள்ளக்குறிச்சி ஸ்ரீகலியபெருமாள் உற்சவம் ஆரம்பம்.

மதுரை ஸ்ரீ மீனாட்சி சொக்கநாதர் நந்தீஸ்வர யாளி வாகனத்தில் பவனி வரும் காட்சி.

இன்றைய தின வழிபாடு:-
ஸ்ரீ ராமரை வழிபட குடும்ப ஒற்றுமை மேம்படும்.

இன்று எதற்கெல்லாம் சிறப்பு:

விதை விதைப்பதற்கு சிறந்த நாள்.

மந்திர உபதேசம் பெறுவதற்கு நல்ல நாள்.

தொழிலுக்கு தேவையான இயந்திரங்களை வாங்குவதற்கு உகந்த நாள்.

தற்காப்பு கலை சார்ந்த ஆலோசனை பெறுவதற்கு ஏற்ற நாள்.

தினம் ஒரு சாஸ்திர தகவல்:

ஆண்களுக்கு திருமணம் நடப்பதில் தாமதமா அல்லது தொழில் சரியாக அமையவில்லையா அல்லது நல்லதொரு வேலை வாய்ப்பு அமையவில்லையா. கவலையே படாதீங்க நல்லதொரு வரனும் நல்லதொரு வருமானமும் கிடைக்கும் நீங்கள் பண்ண வேண்டியது தங்களது வீட்டில் வடகிழக்கு மூலையில் உள்ள பாரங்களை எடுத்து விட்டு காலியாக வைத்துக்கொள்ளுங்கள் மற்றும் வடகிழக்கு மூலையில் உள்ள வடக்கு மற்றும் கிழக்கு ஜன்னல்களை திறந்தே வைத்திருங்கள் மாற்றங்களை முப்பது நாட்களுக்குள் பாருங்க.

லக்ன நேரம்:

( திருக்கணித பஞ்சாங்கத்தின் அடிப்படையில் அதிகாலை முதல் நள்ளிரவு வரை  கொடுக்கப்பட்டுள்ளது.)

கும்ப லக்னம்:-
காலை: 01.42- 03.22 AM வரை

மீன லக்னம்:-
காலை: 03.23- 05.02 AM வரை

மேஷ லக்னம்:-
காலை: 05.03- 06.50 AM வரை

ரிஷப லக்னம்:-
காலை: 06.51 -08.52 AM வரை

மிதுன லக்னம்:-
காலை: 08.53- 11.04 AM வரை

கடக லக்னம்:-
பகல்: 11.05- 01.13 PM வரை

சிம்ம லக்னம்:-
பகல்: 01.14- 03.16 PM வரை

கன்னி லக்னம்:-
மாலை: 03.17- 05.18 PM வரை

துலாம் லக்னம்:-
மாலை: 05.19- 07.24 PM வரை

விருச்சிகம் லக்னம்:-
இரவு: 07.25 – 09.36 PM வரை

தனுசு –  லக்னம்:-
இரவு: 09.37- 11.43 AM வரை

மகர லக்னம்:-
இரவு: 11.44 – 01.37 AM வரை

சனிக்கிழமை ஹோரை.
ஓரைகளின் பலன்கள்.

காலை:

6-7.   சனி.. அசுபம்
7-8. குரு.சுபம்
8-9. செவ்வா.அசுபம்
9-10. .சூரியன்.அசுபம்
10-11. சுக்கிரன்.சுபம்
11-12. புதன்.சுபம்

பிற்பகல்:

12-1. சந்திரன்.சுபம்
1-2. சனி..அசுபம்
2-3. குரு.சுபம்

மாலை:

3-4. செவ்வா.அசுபம்
4-5. சூரியன்.அசுபம்
5-6. சுக்கிரன்.சுபம்
6-7. புதன்.சுபம்

நல்ல நேரம் பார்த்து , நல்ல ஓரை பார்த்து செய்யும் காரியங்கள் – மிக மோசமான தசை , புக்தி காலங்களிலும் உங்களுக்கு ஒரு அரு மருந்தாக அமையும்..

ஓரை என்றால் என்ன..?

ஓரை என்பதற்கு ஆதிக்கம் எனப் பொருள்.

ஒரு குறிப்பிட்ட  நேரத்தில் ஒரு கிரகத்தின் ஆதிக்கம் மிகுந்து காணப்படும்.

Exit mobile version