அதிகரிக்கும் கொலை சம்பவங்கள் : பாதுகாப்பிற்காக முப்படைகளையும் களமிறக்கிய ஜனாதிபதி!
பொது மக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்காகவும், அமைதியைப் பேணுவதற்காகவும் 25 நிர்வாக மாவட்டங்களிலும் முப்படையினரையும் களமிறக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இது குறித்து வர்த்தமானி அறிவித்தல் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவால் வெளியிடப்பட்டுள்ளது.
பொது மக்கள் பாதுகாப்பு கட்டளை சட்டத்தின் 12ஆம் பிரிவினால் ஜனாதிபதிக்கு உரித்தாக்கப்பட்டுள்ள அதிகாரங்களுக்கமைய குறித்த வர்த்தமானி அறிவித்தல் பிரசூரிக்கப்பட்டுள்ளது.
அதற்கமைய தரைப்படை, கடற்படை மற்றும் வான்படை என்பன கொழும்பு, கம்பஹா, களுத்துறை, கண்டி, மாத்தளை, நுவரெலியா, காலி, மாத்தறை, அம்பாந்தோட்டை, யாழ்ப்பாணம், கிளிநொச்சி, மன்னார், வவுனியா, முல்லைத்தீவு, மட்டக்களப்பு, அம்பாறை உள்ளிட்ட 25 மாவட்டங்களிலும், பணியமர்த்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
(Visited 1 times, 1 visits today)