பொழுதுபோக்கு

Leo இன்று போஸ்டர் கிடையாது… ஆனால் ஒரு சப்ரைஸ் இருக்கு….

விஜய் நடித்துள்ள லியோ படத்தில் இருந்து கடந்த 4 நாட்களாக போஸ்டர்கள் வெளியாகி வருகின்றன. லியோ ரிலீஸாகும் வரை கடைசி 30 நாட்களில் தினமும் அப்டேட் வெளியாகும் என லோகேஷ் கூறியிருந்தார்.

அதன்படி, இதுவரை விஜய்யின் போஸ்டர்களை வெளியிட்ட படக்குழு, இன்று இன்னும் மாஸ்ஸான அப்டேட்டை வெளியிட உள்ளதாம்.

லியோ படத்தில் இருந்து தினமும் ஒரு அப்டேட் வெளியாகும் என லோகேஷ் கனகராஜ் கூறியிருந்தார். அதாவது படம் வெளியாவதற்கு 30 நாட்கள் முன்பாக தினமும் அப்டேட் வெளியாகும் என லீட் கொடுத்திருந்தார்.

அதன்படி, லியோ படத்தில் இருந்து விஜய்யின் வித்தியாசமான போஸ்டர்கள் வெளியாகின. இந்த போஸ்டர்கள் “KEEP CALM AND PREPARE FOR BATTLE” என்ற கேப்ஷனுடன் வெளியானது.

இதனால், இன்று என்ன போஸ்டர் வெளியாகும் என ரசிகர்கள் எதிர்பார்த்துள்ளனர். அல்லது லியோ படத்தில் இருந்து வேறு அப்டேட் ஏதும் வெளியாகுமா என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில், இன்றைய லியோ அப்டேட் குறித்து சில தகவல்கள் கிடைத்துள்ளன. அதன்படி, லியோ இசை வெளியீட்டு விழா அல்லது அது நடைபெறும் தேதி அறிவிக்கப்பட உள்ளதாம். பல நாட்களாகவே லியோ இசை வெளியீட்டு விழா பற்றி செய்திகள் வெளியாகி வருகின்றன.

See also  'மகாராஜா" விஜய் சேதுபதி கொடுக்கப் போகும் இன்ப அதிர்ச்சி

அதன்படி, வரும் 30ம் தேதி சென்னை நேரு விளையாட்டு அரங்கில் லியோ இசை வெளியீட்டு விழா நடைபெறும் என சொல்லப்படுகிறது.

இதனை கன்ஃபார்ம் செய்வதோடு, இசை வெளியீட்டு விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்துகொள்ள உள்ளது யார் என்பது பற்றிய அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

(Visited 6 times, 1 visits today)
Avatar

MP

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

பொழுதுபோக்கு

ஆஸ்கர் விருதை தட்டிச் சென்ற நாட்டு நாட்டு பாடல் – ரசிகர்கள் மகிழ்ச்சி

ஆர்.ஆர்.ஆர் திரைப்படத்தில் இடம்பெற்ற நாட்டு நாட்டு பாடலுக்கு ஆஸ்கார் விருது கிடைத்துள்ளது. சிறந்த பாடல் பிரிவில் அந்த பாடல் ஆஸ்கார் விருது வென்றுள்ளது. சினிமா உலகின் மிக
பொழுதுபோக்கு

பாண்டியர்களின் ஆட்டம் ஆரம்பம் : யாத்திசை படத்தின் முதல் நாள் வசூல் விபரம்!

  • April 23, 2023
பாண்டியர்களின் வீரவரலாற்றை சொல்லும் யாத்திசை திரைப்படம் நேற்று திரையறங்குகளில் வெளியாகி நல்ல விமர்சனத்தை பெற்று வருகிறது. அறிமுக இயக்குனர் தரணி ராசேந்திரன் இயக்கத்தில் புது முகங்களான சேயோன்

You cannot copy content of this page

Skip to content