மத்திய கிழக்கு

சூடானில் மருத்துவமனைகளை குறிவைத்து தாக்குதல்!

  • May 29, 2023
  • 0 Comments

சூடானில் மோதலில் ஈடுபட்டுள்ள இரு தரப்பினரும் மருத்துவமனைகள் மற்றும் மருத்துவ பணியாளர்களிற்கு எதிராக யுத்த குற்றங்களில் ஈடுபட்டுள்ளனர் என்பதற்கான ஆதாரங்கள் வெளியாகியுள்ளதாக பிபிசி தெரிவித்துள்ளது. செய்மதி படங்கள் உட்பட பல விடயங்களை பயன்படுத்தி பிபிசியின் குழுவினர் மருத்துவமனைகள் இலக்குவைக்கப்படுகின்றன என்ற முடிவிற்கு வந்துள்ளனர். மருத்துவமனைகளில் நோயாளர்கள் காணப்படும் வேளையில் மருத்துவமனைகள் ஆட்டிலறி ரொக்கட் தாக்குதல்களுக்குள்ளாகின்றன எனவும்,  வைத்தியர்கள் வேண்டுமென்றே இலக்குவைக்கப்படுகின்றனர் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. சூடான் தலைநகர் கார்ட்டோமில் உள்ள 88 மருத்துவமனைகளில் ஒரு சில மருத்துவமனைகள் மாத்திரமே […]

இலங்கை

843 வகையான பொருட்களுக்கு இறக்குமதி கட்டுப்பாட்டில் தளர்வு

  • May 29, 2023
  • 0 Comments

இறக்குமதிக்கு விதிக்கப்பட்ட வரம்பை இலங்கை மத்திய வங்கி தளர்த்தியதுடன், 843 வகையான பொருட்களுக்கு அந்த பொருட்களை இறக்குமதி செய்யும் போது பொருட்களின் மொத்த மதிப்புக்கு சமமான பண வரம்பு தேவையை நீக்கியுள்ளது. இந்த 843 பொருட்களில் கையடக்கத் தொலைபேசிகள், குளிர்சாதனப்பெட்டிகள், மின் விசிறிகள், பழங்கள் உள்ளிட்ட பல அத்தியாவசியப் பொருட்கள் உள்ளடங்குவதாகவும், இந்த தீர்மானத்தினால் எதிர்காலத்தில் பல அத்தியாவசியப் பொருட்களின் விலை குறைவடையும் எனவும் இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.

ஐரோப்பா

இங்கிலாந்தில் குத்திக்கொல்லப்பட்ட இந்திய வம்சாவளிச் சிறுவன்- சம்பவம் தொடர்பில் வெளியான காரணம்

  • May 29, 2023
  • 0 Comments

இங்கிலாந்தில் இந்திய வம்சாவளிச் சிறுவன் ஒருவன் வாளால் குத்திக் கொல்லப்பட்ட வழக்கில் அவன் எதற்காக கொலை செய்யப்பட்டான் என்னும் காரணம் தற்போது வெளியாகியுள்ளது. கடந்த ஆண்டு, ஜூன் மாதம், 29ஆம் திகதி, ரோனன் கந்தா (16) என்ற பதின்ம வயது சிறுவன் இங்கிலாந்திலுள்ள Lanesfield என்ற இடத்தில் வைத்து வாளால் குத்தப்பட்டான்.தகவலறிந்து வந்த மருத்துவ உதவிக் குழுவினரால் அவனைக் காப்பாற்ற முடியவில்லை. அவன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துவிட்டான்.இந்த துயர சம்பவம் தொடர்பாக நான்கு பேர் கைது செய்யப்பட்டார்கள். […]

உலகம்

வானில் நட்சத்திரங்கள் மறைந்துவிடும் அபாயம்!

  • May 29, 2023
  • 0 Comments

நட்சத்திரங்களை இன்னும் 20 ஆண்டுகளில் காண முடியாமல் போகும் அபாயம் உள்ளதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. வெளிச்சத்தினால் ஏற்படக்கூடிய தூய்மைக்கேடு அதற்கு காரணம் என குறிப்பிடப்படுகின்றது. LED வகை விளக்குகளின் பயன்பாடு, சாலையில் அதிகமான விளக்குகள், விளம்பரங்கள், இரவில் ஒளியூட்டப்படும் விளையாட்டுத் தளங்கள் ஆகியவற்றால் அதிகமான நட்சத்திரங்களைப் பார்க்க முடிவதில்லை. இரவு வானமும் சுற்றுச்சூழலில் ஓர் அங்கம் என்றும் அடுத்த தலைமுறையினரால் அதைக் காண முடியவில்லை என்றால் அது மிகப்பெரிய இழப்பு என்றும் விண்வெளி ஆய்வாளர் ஒருவர் கூறினார். […]

பொழுதுபோக்கு

கமலின் புதிய அவதாரம்!! எப்படி இருக்கின்றார் பாருங்கள்…

  • May 29, 2023
  • 0 Comments

உலகநாயகன் கமல்ஹாசன் இந்திய சினிமாவின் மிகப் பெரிய தலைகளில் ஒருவர். ஆடவும், பாடவும், எழுதவும், இயக்கவும், என்னவோ பல பரிமாணக் கலைஞராவார். தற்போது, பிரபல இயக்குனரான ஷங்கருடன் இணைந்து ‘இந்தியன் 2’ படத்தில் நடித்து வருகிறார். இதற்கிடையில், கமல்ஹாசனின் சமீபத்திய அவதாரம் ஒரு புகைப்படக்காரர். இந்த நாட்களில் சமூக ஊடகங்களில் சுறுசுறுப்பாக இருக்கும் அவர் தனது கேமராவில் தன்னைப் பற்றிய படங்களை அடிக்கடி பகிர்ந்து கொள்கிறார். வெள்ளிக்கிழமை, கமல் ஒரு வனவிலங்கு புகைப்படக் கலைஞர் தோற்றத்தில் காணப்பட்ட […]

வட அமெரிக்கா

அமெரிக்காவில் 54 ஆண்டுகள் கழித்து பட்டப்படிப்பை முடித்து வியக்க வைத்த நபர்

  • May 29, 2023
  • 0 Comments

அமெரிக்காவின் பிரிட்டிஷ் கொலம்பியா பல்கலைக்கழகத்தில் 54 ஆண்டுகள் கழித்து பட்டப்படிப்பை முடித்த நபர் தொடர்பில் செய்தி வெளியாகியுள்ளது. குறித்த நபர் 1969ஆம் ஆண்டு சேர்ந்த Arthur Ross இந்த ஆண்டு ஒரு வழியாகப் பட்டப் படிப்பை வெற்றிகரமாக முடித்திருக்கிறார். கலையியல் இளங்கலை பட்டம் பெற்றிருக்கும் 71 வயது ராஸ் அந்தப் பல்கலையின் ஆக மெதுவான மாணவர் என்று கூறப்படுகிறது. பல்கலையில் சேர்ந்த இரு ஆண்டுகளுக்குப் பின், நடிப்புக் கலையில் தேர்ச்சி பெற அவர் முடிவெடுத்தார். அதை முடித்துச் […]

இலங்கை

இலங்கையில் பழைய சாரதி அனுமதிப்பத்திரங்கள் தொடர்பில் எடுக்கப்படவுள்ள தீர்மானம்

  • May 29, 2023
  • 0 Comments

இலங்கையில் காலாவதி திகதி குறிப்பிடாமல் வழங்கப்பட்ட அனைத்து கனரக போக்குவரத்து சாரதி உரிமங்களையும் உடனடியாக இரத்து செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மோட்டார் போக்குவரத்து திணைக்களம் இந்த விடயத்தை தெரிவித்துள்ளது. மோட்டார் போக்குவரத்து ஆணையாளர் நாயகம் நிஷாந்த அனுருத்த, இவ்வாறான சுமார் 11 இலட்சம் கனரக போக்குவரத்து சாரதி அனுமதிப்பத்திரங்கள் தற்போது பாவனையில் உள்ளதாக தெரிவித்தார். தற்சமயம் அனுமதிப்பத்திரத்தை கொண்டு அதிக வயதான சாரதிகள் அந்த அனுமதிப்பத்திரத்துடன் வாகனங்களை செலுத்துவதே சாரதி அனுமதிப்பத்திரம் இரத்து செய்யப்படுவதற்கு […]

வாழ்வியல்

பெண்களின் கவனத்திற்கு..! மாதவிடாய் சமயத்தில் அவதானம்

  • May 29, 2023
  • 0 Comments

மாதவிடாய் சமயங்களில் என்னென்ன உணவுகள் சாப்பிடலாம்,சாப்பிடக் கூடாது என்பது பற்றி பார்ப்போம். பொதுவாகவே பெண்கள் மாதவிடாய் சமயங்களில் பல்வேறு விதமான உடல் ரீதியான பிரச்சனைகளை மேற்கொள்வதுண்டு. மாதவிடாய் சமயங்களில் கை கால் வலி, முதுகு வலி, வயிற்றில் வலி போன்ற பிரச்சனைகள் பொதுவாக ஏற்படும். இதனால் பெண்கள் அந்த சமயங்களில் மிகவும் சோர்வாக இருப்பதுண்டு. இருப்பினும், மாதவிடாய் சமயங்களில் பெண்கள் என்னென்ன உணவை சாப்பிட வேண்டும், என்னென்ன சாப்பிட கூடாது என்பதில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். […]

ஐரோப்பா

இத்தாலியில் படகு கவிழ்ந்து விபத்து – பலரை காணவில்லை

  • May 29, 2023
  • 0 Comments

இத்தாலியின் வடக்குப் பகுதியில் உள்ள மேகியோர் ஏரியில் (Lake Maggiore) சுற்றுப்பயணிகளை ஏற்றிச்சென்ற படகு கவிழ்ந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். பயணிகளை மீட்கும் பணி மும்முரமாக நடைபெற்ற நிலையில் 19 பேர் காப்பாற்றப்பட்டனர். இந்த சம்பவத்தில் சிலரைக் காணவில்லை என பொலிஸார் தெரிவித்துள்ளார். அவர்களில் ஒருவர் உயிரிழந்த நிலையில் உடல் மீட்கப்பட்டிருப்பதாக உள்ளூர் ஊடகம் தெரிவித்தது. லிசான்ஸா (Lisanza) நகரில் அந்தச் சம்பவம் நடந்தது. பலத்த காற்று வீசியதால் படகு கவிழ்ந்ததாக அதிகாரிகள் குறிப்பிட்டனர். அந்த 16 மீட்டர் […]

ராசிபலன்

ராசியின் நன்மைகள்

  • May 29, 2023
  • 0 Comments

மேஷம் -ராசி: உத்தியோகத்தில் சில நுணுக்கங்களை அறிந்து கொள்வீர்கள். குடும்ப உறுப்பினர்களிடம் சூழ்நிலைக்கு ஏற்ப விட்டுக்கொடுத்துச் செல்லவும். புதிய நபர்களின் அறிமுகத்தின் மூலம் மாற்றம் ஏற்படும். பயனற்ற விவாதங்களை தவிர்ப்பது நல்லது. பூர்வீக சொத்துக்களில் சில மாற்றங்களை செய்வீர்கள். கடன் தொடர்பான பிரச்சனைகள் கட்டுப்பாட்டுக்குள் வரும். எதிர்பாராத சில உதவிகளின் மூலம் அனுகூலம் உண்டாகும். தெளிவு நிறைந்த நாள். அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு அதிர்ஷ்ட எண் : 5 அதிர்ஷ்ட நிறம் : வெளிர் நீலம். […]