இலங்கை செய்தி

ஐக்கிய தேசிய கட்சியுடன் இணைய இருக்கும் 40 உறுப்பினர்கள்!

  • April 12, 2023
  • 0 Comments

)ஐக்கிய மக்கள் சக்தி உறுப்பினர்கள் 40க்கும் அதிகமானவர்கள் விரைவில் ரணில் விக்ரமசிங்கவுடன் இணைந்து செயற்பட இருக்கின்றனர் என ஐக்கிய தேசிய கட்சி முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் விஜேமான்ன தெரிவித்துள்ளார். ஐக்கிய தேசிய கட்சி தலைமையகமான சிறிகொத்தவில் நேற்று (29)  இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார். தொடர்ந்து பேசிய அவர்,  பொருளாதார நெருக்கடிக்கு தீர்வுகாண ஜனாதிபதி எடுத்த சில தீர்மானங்கள் மக்களுக்கு கஷ்டமாக இருந்தபோதும் சர்வதேச நாணய நிதியத்தின் உதவியின் பின்னர் […]

இலங்கை செய்தி

பேருவளை பிரதேசத்தில் நிலநடுக்கம்: சற்று பதற்றமான சூழல்

  • April 12, 2023
  • 0 Comments

வளைக்கு அண்மையில் உள்ள கடலில் 3.7 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது என்று அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் அறிவித்துள்ளது. இச்செய்தியை அடுத்து அங்கு சற்று பதற்றமான நிலைமை ஏற்பட்டுள்ளது. பேருவளையில் இருந்து கடலுக்குச் சென்றவர்கள் தொடர்பில், அங்குள்ளவர்கள் கவலையடைந்துள்ளனர். அத்துடன் அவர்களுடன் தொடர்புகளை ஏற்படுத்தி கொள்வதற்கு பெரும் முயற்சிகளையும் மேற்கொண்டு வருகின்றனர்.

இலங்கை செய்தி

இந்திய ரூபாயை பயன்படுத்தி வர்த்தக நடவடிக்கைகளை மேற்கொள்வது குறித்து ஆராய்வு!

  • April 12, 2023
  • 0 Comments

இந்திய ரூபாயை பயன்படுத்தி வர்த்தக நடவடிக்கைகளை விஸ்தரிப்பது குறித்து ஆராயப்பட்டுள்ளது. இது குறித்து இந்தியாவிற்கான இலங்கை தூதுவர் மிலிந்த மொராகொட இந்திய ரிசேர்வ் வங்கியின் ஆளுநர் ஸ்ரீ சக்திஹன்ட தாசுடன் பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டுள்ளார். இருவருக்கும் இடையிலான பேச்சுவார்த்தைகள் மிகவும் சுமூகமான சூழ்நிலையில் இடம்பெற்றுள்ளனஇஇருதரப்பு பொருளாதார ஒத்துழைப்பு உட்பட பல விடயங்கள் குறித்து ஆராயப்பட்டதாக இலங்கை தூதுவர் தெரிவித்துள்ளார். இலங்கையின் பொருளாதார ஸ்திரதன்மையை உறுதி செய்வதற்கான இந்தியாவின் உதவிகளிற்கு இந்த சந்திப்பில் மிலிந்தமொராகொட நன்றியை தெரிவித்துள்ளார்.  

இலங்கை செய்தி

முதலீட்டாளர்கள் மற்றும் கடன்வழங்குனர்களுக்கு இன்று செயற்திட்ட விளக்கம் அளிக்கிறது இலங்கை

  • April 12, 2023
  • 0 Comments

சர்வதேச நாணய நிதியத்தின் அனுமதியைத் தொடர்ந்து அரசாங்கமானது இன்றைய தினம் கடன்வழங்குனர்கள் மற்றும் முதலீட்டாளர்கள் அனைவருக்கும் நிகழ்நிலை முறைமையின் ஊடாக தமது அடுத்தகட்ட நடவடிக்கைகள் பற்றிய செயற்திட்ட விளக்கத்தை (ப்ரசென்டேஷன்) அளிக்கவுள்ளது. நீடிக்கப்பட்ட நிதியுதவிச்செயற்திட்டத்தின்கீழ் எதிர்வரும் 48 மாதகாலத்தில் இலங்கைக்கு சுமார் 3 பில்லியன் டொலர் நிதியை வழங்குவதற்கு சர்வதேச நாணய நிதியத்தின் பணிப்பாளர்சபை கடந்த 20 ஆம் திகதி அனுமதியளித்துள்ளது. அதனையடுத்து இலங்கையின் கடன்வழங்குனர்கள் மற்றும் முதலீட்டாளர்களுக்கு இன்றைய தினம் (30) நிகழ்நிலை முறைமையின் ஊடாக […]

இலங்கை செய்தி

பசுமைப்புரட்சியில் இணையுமாறு எரிக் சொல்ஹெய்ம் இலங்கைக்கு அழைப்பு

  • April 12, 2023
  • 0 Comments

பசுமைப்புரட்சியில் இணைந்துகொள்ளுமாறு நோர்வேயின் முன்னாள் இராஜதந்திரியும், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் காலநிலை மாற்றம் தொடர்பான ஆலோசகருமான எரிக் சொல்ஹெய்ம் இலங்கைக்கு அழைப்புவிடுத்துள்ளார். கொழும்பில் அமைந்துள்ள கிங்ஸ்பரி ஹோட்டலில் நடைபெற்ற இலங்கையின் தூய சக்திவலு மாநாடு – 2023 இல் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு அழைப்புவிடுத்துள்ளார். மேலும் உலகளாவிய ரீதியில் அபிவிருத்தியடைந்துவரும் இருபெரும் நாடுகளான சீனாவும் இந்தியாவுமே பசுமைப்புரட்சிக்குத் தலைமைதாங்குவதாக எரிக் சொல்ஹெய்ம் தெரிவித்துள்ளார். இலங்கை பசுமைப்பொருளாதாரத்தை நோக்கி நகர்வதற்கான பல்வேறு வாய்ப்புக்கள் காணப்படுவதாகவும் சுட்டிக்காட்டியுள்ளார். நாட்டின் […]

இலங்கை செய்தி

ருவண்டாவில் 5 இலங்கை தமிழ் அகதிகளின் விபரீத முடிவு; அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள சம்பவம்!

  • April 12, 2023
  • 0 Comments

இலங்கையை சேர்ந்த ஐந்து தமிழ் அகதிகள் தற்கொலைக்கு முயற்சித்த சம்பவம் அதிர்ச்சியினை ஏற்படுத்தியுள்ளது. ருவாண்டா தலைநகரமான கிகாலியில் உள்ள ருவாண்டா வைத்தியசாலையில் 5 தமிழ் புகலிடக் கோரிக்கையாளர்களும் சிகிச்சை பெற்று வருகின்றனர். 22 வயதான யுவதியையும் இலங்கைக்கு திருப்பியனுப்பவுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்திருந்த நிலையிலேயே யுவதி தையல் ஊசியை பாதியாக உடைத்து இரண்டு துண்டுகளையும் விழுங்கியுள்ளார்.இந்நிலையில் வைத்தியசாலையில் இருந்து அவர்கள் வெளியிட்ட காணொளி வெளியாகியுள்ளது. அதில் அவர்கள் கூறியுள்ளதாவது,ஆரம்பத்தில் டியாகோ கார்சியா தீவில் நுழையும் போது நன்றாக வரவேற்றிருந்ததாகவும் […]

இலங்கை செய்தி

பிலிப் குணவர்தனவின் 51 ஆவது நினைவுதின நிகழ்வு ஜளாதிபதி தலைமையில்

  • April 12, 2023
  • 0 Comments

தலைசிறந்த அரசியல்வாதியும் முன்னாள் அமைச்சருமான பிலிப் குணவர்தனவின் 51ஆவது நினைவுதின நிகழ்வு நேற்று (29) பிற்பகல் கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்களின் தலைமையில் இடம்பெற்றது. பிலிப் குணவர்தன நினைவுதின  நிகழ்வுக்கு வருகை தந்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்களை, பிரதமர் தினேஷ் குணவர்தன வரவேற்று, விழா மண்டபத்திற்கு அழைத்துச் சென்றார். நினைவுதின நிகழ்வில், ஊவா வெல்லஸ்ஸ பல்கலைக்கழக உபவேந்தர் பேராசிரியர் ஜயந்த லால் ரத்னசேகர மற்றும் வரலாற்றாசிரியர், கலைத்துறை […]

இலங்கை செய்தி

கிளிநொச்சியில், முன்னாள் போராளிகள் TID யினரால் விசாரணை

  • April 12, 2023
  • 0 Comments

கிளிநொச்சி மாவட்டத்திலுள்ள முன்னாள் போராளிகள், சமூகநல செயற்பாட்டாளர்கள் உள்ளிட்டோர் பயங்கரவாத குற்றத்தடுப்பு விசாரணைப் பிரிவினரால் தொடர்ந்தும் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வருவதாக நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தெரிவித்துள்ளார். விவேகானந்தநகர், கிளிநொச்சியைச் சேர்ந்த, புனர்வாழ்வளிக்கப்பட்ட முன்னாள் போராளியான திரு.அமாவாசை மதிவண்ணன், இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் கிளிநொச்சி மாவட்டக் கிளைச் செயலாளரும், கனகபுரம் மாவீரர் பணிக்குழுவின் செயலாளருமான திரு.வீரவாகு விஜயகுமார், உருத்திரபுரம், கிளிநொச்சியைச் சேர்ந்த, கிளி/புதுமுறிப்பு விக்னேஸ்வரா வித்தியாலயத்தின் அதிபர் திரு.தங்கவேலு கண்ணபிரான், இரத்தினபுரம், கிளிநொச்சியைச் சேர்ந்த புனர்வாழ்வளிக்கப்பட்ட […]

இலங்கை செய்தி

WhatsApp காதலால் விபரீதம் – சிறுமிக்கு நேர்ந்த கதி

  • April 12, 2023
  • 0 Comments

கண்டியில் WhatsApp மூலம் ஏற்பட்ட நட்பினால் 15 வயது சிறுமி பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்பட்டுள்ளார். இந்த சம்பத்துடன் தொடர்புடைய  சந்தேக நபர் ஒருவர் தேடப்பட்டு வருகிறார். இது பற்றி மேலும் தெரிய வருவதாவது, கண்டிப் பிரதேசத்தைச் சேர்ந்த 15 வயது சிறுமி ஒருவருடன் அம்பலாந்தோட்டைப் பிரதேசத்தைச் சேர்ந்த ஒருவருக்கும் வட்ஸ் அப் மூலம் காதல் தொடர்பு ஏற்பட்டுள்ளது.  சிறிது காலம் மேற்படி வட்ஸ் அப் காதல் நீடித்துள்ளது. அண்மையில் மேற்படி சிறுமியை நேரடியாக சந்திக்க வந்த அம்பலாந்தோட்டை […]

இலங்கை செய்தி

இலங்கையில் கார் இறக்குமதி தொடர்பில் வெளியான தகவல்

  • April 12, 2023
  • 0 Comments

இலங்கையில் அனுமதி கிடைக்கும் போதெல்லாம் மின்சார கார்களை மட்டுமே இலங்கைக்கு இறக்குமதி செய்ய அரசாங்கம் தீர்மானித்துள்ளது. வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார இதனை தெரிவித்துள்ளார். கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்ட அமைச்சர் இதனைத் தெரிவித்துள்ளார். “வெளிநாட்டுத் தொழிலாளர்களை ஊக்குவிக்கும் வகையில், அவர்கள் இந்த நாட்டிற்கு அனுப்பும் அந்நியச் செலாவணித் தொகைக்கு ஏற்ப மின்சார கார்களை இறக்குமதி செய்யும் வசதியை ஏற்படுத்த அரசு முடிவு செய்தது. இதற்கு அமைச்சரவை முழுமையாக ஆதரவளித்தது. இதில் ஹைபிரிட் கார்களுடன் […]

You cannot copy content of this page

Skip to content