இலங்கை

வேன் ஒன்றுக்குள் வைத்து ஆறு வயது மாணவிக்கு நேர்ந்த கதி

  • May 18, 2023
  • 0 Comments

பிலியந்தலையில் வேன் ஒன்றுக்குள் வைத்து ஆறு வயது பாடசாலை மாணவி ஒருவரை பாலியல் துஷ்பிரயோகம் செய்த சம்பவம் ஒன்று இடம் பெற்றுள்ளது. இச் சம்பவம் தொடர்பில் பாடசாலை வேனின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதாக பிலியந்தலை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.பாதிக்கப்பட்ட மாணவி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மாணவியை பாலியல் வன்கொடுமை செய்வதற்கு முன்பு மாணவியின் முகத்தில் எதனையோ தெளித்துவிட்டு மயக்கமடைய செய்த பின்னர் பாலியல் துஷ்பிரயோகம் செய்யப்பட்டதாகக் கூறப்பட்டாலும் விசாரணையில் அது உறுதி செய்யப்படவில்லை என்றும் பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்தச் […]

இலங்கை

இலங்கை ரூபாவின் பெறுமதியில் மாற்றம்!

  • May 18, 2023
  • 0 Comments

அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி இன்று (18) மேலும் வலுவடைந்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.இதற்கமைய அமெரிக்க டொலரின் கொள்முதல் விலை ரூ.299.21 ஆகவும், விற்பனை விலை ரூ.312.37 ஆகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கை

அனைத்து உரிமம் பெற்ற வணிக வங்கிகளுக்கும் மத்திய வங்கியின் உத்தரவு!

  • May 18, 2023
  • 0 Comments

அனைத்து உரிமம் பெற்ற வணிக வங்கிகளுக்கும் இலங்கை மத்திய வங்கி புதிய உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது. கடன் பத்திரங்களுக்கு எதிரான பண வரவு வைப்புத் தேவைகள் தொடர்பாக இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த உத்தரவின்படி 19 மே 2022 மற்றும் 16 பெப்ரவரி 2023 திகதியிட்ட கடன் பத்திரங்களுக்கு எதிரான பண வரம்பு வைப்புத் தேவைகள் திரும்பப் பெறப்பட்டதாக உரிமம் பெற்ற வணிக வங்கிகளுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இது தொடர்பில் மத்திய வங்கியின் நாணய சபையினால் மேற்கொள்ளப்பட்ட […]

ஐரோப்பா

அமெரிக்கா வழங்கிய பாதுகாப்பு கருவிகளை தாக்கியழித்த ரஷ்ய ஏவுகணைகள்

  • May 18, 2023
  • 0 Comments

அமெரிக்கா உக்ரைனுக்கு வழங்கிய ஏவுகணைகள் உட்பட ரேடார் நிலையங்களை, ஏவுகணை தாக்குதல் மூலம் அழித்ததாக ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது. ரஷ்யா மற்றும் உக்ரைனுக்கு இடையேயான போர் கடந்த ஓராண்டுக்கும் மேலாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், அமெரிக்காவிற்கு ரஷ்யா பல்வேறு ஆயுத உதவிகளை செய்து வருகிறது.கடந்த சில மாதங்களுக்கு முன்னர் அமெரிக்கா, உக்ரைனுக்கு பேட்ரியாட் வான் பாதுகாப்பு அமைப்பின் ஏவுகணைகள் மற்றும் பல ராணுவ ஆயுதங்களை வழங்கியிருந்தது. இதனிடையே கடந்த சில தினங்களுக்கு முன்னர் நள்ளிரவில், உக்ரைன் […]

இலங்கை

மின்சாரம், சுகாதாரம் உள்ளிட்ட சில சேவைகள் அத்தியாவசிய சேவைகளாக அறிவிப்பு!

  • May 18, 2023
  • 0 Comments

மின்சாரம் மற்றும் அதனுடன் தொடர்புடைய அனைத்து சேவைகள், பெட்ரோலிய பொருட்கள் மற்றும் எரிபொருள் வழங்கள், சுகாதார சேவைகள் ஆகியவை மீண்டும் அத்தியாவசிய சேவைகளாக அறிவிக்கப்பட்டுள்ளன. ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் பணிப்புரையின் கீழ் ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்கவினால் நேற்று (மே 17) வெளியிடப்பட்ட விசேட வர்த்தமானி அறிவித்தலில் இந்த விடயம் அறிவிக்கப்பட்டுள்ளது. 1979 ஆம் ஆண்டின் 61 ஆம் இலக்க அத்தியாவசிய பொதுச் சேவைகள் சட்டத்தின் பிரிவு 2 இன் கீழ் ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களுக்கு இணங்க […]

இலங்கை

16 மாணவிகளின் நிர்வாண புகைப்படங்களை பெற்றுக்கொண்ட சிறுவன் கைது!

  • May 18, 2023
  • 0 Comments

தனக்கு மொடல் அழகிகள் தேவைப்படுவதாக தெரிவித்து வட்ஸ்அப் குழுமத்தில் தகவல் அனுப்பியமை தொடர்பில் 19 வயதான மாணவர் ஒருவரை குற்றவியல் விசாரணை திணைக்கள கணினி குற்ற விசாரணை பிரிவு அதிகாரிகள் கைதுசெய்துள்ளனர். இந்த தகவல் ஊடாக குறித்த மாணவன் 16 மாணவியரின் நிர்வாண புகைப்படங்களை பெற்றுக்கொண்டுள்ளமையும் விசாரணையில் தெரியவந்துள்ளது. இந்த மாணவர் மினுவாங்கொடை பிரதேசத்தில் உள்ள பிரபல பாடசாலையொன்றில் கல்வி கற்பதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர். மினுவாங்கொடை,  நீர்கொழும்பு,  கம்பஹா ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்த மாணவியரின் நிர்வாணப் படங்களே […]

இலங்கை

கடவுச்சீட்டு தொடர்பில் வெளியான முக்கிய அறிவிப்பு

  • May 18, 2023
  • 0 Comments

இன்று (18) முதல் குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்துக்கு வரும் அனைவரும் உடனடியாக வளாகத்துக்குள் அழைக்கப்படுவார்கள் என குடிவரவு – குடியகழ்வு கட்டுப்பாட்டாளர் நாயகம் தெரிவித்துள்ளார். தற்போது ஏற்பட்டுள்ள நெரிசல் நிலை தொடர்பில் கருத்து தெரிவித்த குடிவரவு மற்றும் குடியகல்வு கட்டுப்பாட்டாளர் நாயகம் ஹர்ஷ இலுக்பிட்டிய, கடவுச்சீட்டு பெறும் முறையில் ஜூன் மாதம் முதல் மாற்றம் செய்யப்படவுள்ளதாக தெரிவித்தார். அத்துடன், மக்களை ஏமாற்றி பணம் பறிக்கும் பல தரகர்கள் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும், […]

ஆசியா

இந்திய பெருங்கடலில் விபத்துக்குள்ளான சீன கப்பல் : 39 பேரை தேடும் பணிகள் தீவிரம்!

  • May 18, 2023
  • 0 Comments

சீனாவுக்கு சொந்தமான மீன்பிடி கப்பல் ஒன்று இந்தியப் பெருங்கடலில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. தென் ஆப்பிரிக்காவில் இருந்து புறப்பட்ட இந்த கப்பல் சீனாவை நோக்கி சென்றுக் கொண்டிருந்த கப்பலே இவ்வாறு விபத்திற்குள்ளாகியுள்ளது. குறித்த  கப்பலில் சீனாவை சேர்ந்த 17 மீனவர்கள்,  இந்தோனேசியாவை சேர்ந்த 17 மீனவர்கள் மற்றும் பிலிப்பைன்ஸ் நாட்டின் மீனவர்கள் 5 பேர் என 39 பேர் பயணித்துள்ளனர். அவர்கள் அனைவரும் மாயமாகியுள்ள நிலையில் அவர்களை தேடும் பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன. மேலும்  சர்வதேச கடல்சார் மற்றும் மீட்பு […]

ஐரோப்பா

போருக்கு எதிராக குரல் கொடுத்த பெண்ணுக்கு விஷம் வைத்து கொலை முயற்சி!

  • May 18, 2023
  • 0 Comments

ரஷ்யாவில் போருக்கு எதிராக பல முன்னெடுப்புகளை செய்து வந்த நடாலியா அர்னோ, என்ற பெண்ணுக்கு ஐரோப்பிய பயணத்தின் போது விஷம் வைத்து கொல்ல முயற்சி செய்யப்பட்டுள்ளது. ரஷ்யாவிலுள்ள உலக நாடுகளின் நிறுவனமான ரஷ்ய ஜனநாயகம், என்ற குழுவை சேர்ந்த பெண்ணுக்கு, விஷம் வைத்து கொல்ல முயன்றதாக புகார் அளித்துள்ளது.தற்போது அமெரிக்காவில் வாழும் நடாலியா அர்னோ என்ற பெண், கடந்த 2014 ஆண்டு ரஷ்யா மற்றும் உக்ரைன் போருக்கு எதிராக போராடிய குற்றத்திற்காக, நாடு கடத்தப்பட்டுள்ளார். இந்நிலையில் ஐரோப்பிய […]

இந்தியா

ஜல்லிக்கட்டுக்கு தடை விதிக்க முடியாது – உச்சநீதிமன்றம் !

  • May 18, 2023
  • 0 Comments

ஜல்லிக்கட்டுக்கு தடை விதிக்க முடியாது என்றும்,  ஜல்லிக்கட்டு தொடர்பாக தமிழக அரசு இயற்றிய சட்டம் செல்லும் என்றும் உச்ச நீதிமன்ற அரசியல் சாசன அமர்வு தீர்ப்பு வழங்கியுள்ளது. ஜல்லிக்கட்டுப் போட்டிகளுக்கு தடை விதிக்கக் கோரி பீட்டா உள்ளிட்ட அமைப்புகள் தொடர்ந்த வழக்கில் அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவடைந்த நிலையில் உச்ச நீதிமன்றம் இன்று (மே 18) தீர்ப்பு வழங்கியுள்ளது. 5 நீதிபதிகள் கொண்ட உச்ச நீதிமன்ற அரசியல் சாசன அமர்வு வழங்கிய ஒருமித்த தீர்ப்பில்  ஜல்லிக்கட்டு மனித […]

You cannot copy content of this page

Skip to content