ஜிம்பாப்வே கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் ஹீத் ஸ்ட்ரீக் உயிரிழப்பு!
ஜிம்பாப்வே கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் ஹீத் ஸ்ட்ரீக் காலமானதாக அவரது மனைவி உறுதி செய்துள்ளார். நீண்டகாலமாக புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்த ஹீத் ஸ்ட்ரீக் இன்று (03.09) காலை உயிரிழந்ததாக அவரது மனைவி தனது முகநூல் கணக்கில் பதிவிட்டுள்ளார். அவருக்கு தற்போது 49 வயதாகுகிறது. நோய்வாய்ப்பட்டிருந்த ஹீத் ஸ்ட்ரீக் சில நாட்களுக்கு முன்னர் இறந்துவிட்டதாகத் தெரிவிக்கப்பட்டது, ஆனால் அது பொய் என்பதை அவரே உறுதிப்படுத்தினார்.