இலங்கை

எதிர்வரும் 20ம் திகதி ஹர்த்தாலை எதிர்த்து துண்டுப் பிரசுரம் விநியோகம்

  • October 18, 2023
  • 0 Comments

எதிர்வரும் 20 ஆம் திகதி அரசியல் கட்சிகளால் வடக்கு கிழக்கு மாகாணங்களை முடக்கி ஹர்த்தாலுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அந்தவகையில் குறித்த ஹர்த்தாலுக்கு எதிர்ப்பு தெரிவித்து தென்மராட்சி பகுதிகளில் புதன்கிழமை (18)துண்டுப் பிரசுரங்கள் விநியோகிக்கப்படுகின்றன. இந்த துண்டு பிரசுரங்களானது தென்மராட்சி மக்கள் உரிமை பாதுகாப்பு அமைப்பினால் வழங்கப்பட்டு வருகிறது. அந்த துண்டு பிரசுரங்களில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, இலங்கையில் தற்போதுள்ள பொருளாதார நெருக்கடி நிலையில் வடக்கு கிழக்கை முடக்கி ஹர்த்தால் போடுவதன் மூலம் பாதிக்கப்படுவது யார்? இந்த ஹர்த்தால் மூலம் தமிழ் […]

பொழுதுபோக்கு

JUSTIN ; ரோகிணி திரையரங்கில் ‘லியோ’ திரைப்படம் இல்லை – ரசிகர்கள் அதிர்ச்சி

  • October 18, 2023
  • 0 Comments

‘லியோ’ திரைப்படம் இங்கு திரையிடப்படவில்லை என சென்னை ரோகிணி திரையரங்கில் போர்டு வைக்கப்பட்டுள்ளதால் ரசிகர்கள் அதிர்ச்சி. திரையரங்கு உரிமையாளர்களுக்கு படத்தின் தயாரிப்பாளர்களுக்கும் இடையில் ஏற்பட்ட பிரச்சினையை அடுத்து இந்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. மேலும், படத்தின் வருமானத்தில் 75 வீதத்தை தருமாறு திரைப்பட தயாரிப்பாளர்கள் கோரியிருந்தனர். லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், விஜய் நடித்துள்ள லியோ திபை்படம் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியிலும், பல தடைகளைக்கடந்தும் நாளை லெளியாகவுள்ள குறிப்பிடத்தக்கது. https://twitter.com/ThanthiTV/status/1714527753008296171  

இலங்கை

இலங்கையில் பொலிஸ் அதிகாரிகள் தொடர்பில் பொதுமக்கள் முறையிடலாம்

  • October 18, 2023
  • 0 Comments

இலங்கை பொலிஸ் உத்தியோகத்தர்களின் முறைகேடுகள் மற்றும் பல்வேறு குற்றச் செயல்கள் தொடர்பில் பொதுமக்கள் முறைப்பாடு செய்ய சந்தர்ப்பம் ஏற்படுத்தி கொடுக்கப்பட்டுள்ளது. அதற்கமைய, முறையீடு செய்வதற்கு தொலைபேசி இலக்கமொன்றை இலங்கை பொலிஸ் துறை அறிமுகப்படுத்தியுள்ளது. இவ்வாறான முறைப்பாடுகளை “118” என்ற தொலைபேசி இலக்கத்திற்கு பொதுமக்கள் தகவல்களை வழங்க முடியும். குறித்த தொலைபேசி இலக்கம் 24 மணிநேரமும் இயங்கும் எனவும் முறைப்பாடுகளிலிருந்து பெறப்படும் தகவல்களின் இரகசியத்தன்மை பாதுகாக்கப்படும் எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இலங்கை

இலங்கையில் தங்கத்தின் விலையில் தாக்கத்தை ஏற்படுத்திய போர்!

  • October 18, 2023
  • 0 Comments

வெளிநாட்டு சந்தையில் இந்த நாட்களில் தங்கத்தின் விலையில் குறிப்பிடத்தக்க அதிகரிப்பு காணப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தேசிய இரத்தினக்கல் மற்றும் ஆபரண அதிகார சபை இதனை தெரிவித்துள்ளது. இஸ்ரேல் மற்றும் காஸாவில் நிலவும் நெருக்கடி நிலை வெளிநாட்டு சந்தைகளில் தங்கத்தின் விலை உயர்வை நேரடியாக பாதித்துள்ளது. விலைமதிப்பற்ற உலோக பகுப்பாய்வு பணியகத்தின் உதவிப் பணிப்பாளர் இந்திக்க பண்டார இதனை தெரிவித்துள்ளார். உலக சந்தையில் தங்கத்தின் விலை அதிகரிப்புடன் ஒப்பிடுகையில், கடந்த வாரத்துடன் ஒப்பிடுகையில் உள்நாட்டு சந்தையிலும் தங்கத்தின் விலை அதிகரித்துள்ளதாக […]

இலங்கை பொழுதுபோக்கு

லியோ படத்தை இலங்கையில் நிறுத்துங்கள்… தமிழ் அரசியல்வாதிகள் விஜய்க்கு கடிதம்??

  • October 18, 2023
  • 0 Comments

லியோ திரைப்படத்தை இலங்கையில் எதிர்வரும் 20ம் திகதி திரையிடுவதை தவிர்த்துக்கொள்ளுமாறு கோரிக்கை விடுக்கப்பட்டதாக சமூக வலைத்தளங்களில் செய்திகள் வெளியாகின. எனினும் குறித்த கடிதம் போலியானது என இலங்கை பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைகலநாதன் இலங்கை ஊடகம் ஒன்றுக்கு தெரிவித்தார். இலங்கை தமிழரசு கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா, பாராளுமன்ற உறுப்பினர்களான சி.வி.விக்னேஷ்வரன் மற்றும் செல்வம் அடைகலநாதன் ஆகியோரினால், நடிகர் விஜயிடம் இந்த கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளதை போன்ற கடிதமொன்று சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகின்றது. “இது போலியான கடிதம். […]

உலகம்

காஸா மருத்துவமனையில் தாக்குதல் – அதிகரிக்கும் மரணங்கள் – அச்சத்தில் மக்கள்

  • October 18, 2023
  • 0 Comments

காசாவில் உள்ள மருத்துவமனை வளாகத்தில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் குறைந்தது 500 பேர் உயிரிழந்ததாக, காசா ஸ்டிரிப் பகுதியை ஆளும் ஹமாஸ் அதிகாரிகள் தெரிவித்தனர். காசா நகரின் மையத்தில் உள்ள அல்-அஹ்லி அரபி பாப்டிஸ்ட் மருத்துவமனைத் தாக்குதலில் காயமடைந்தவர்களில் பெரும்பாலானவர்கள் பெண்கள் மற்றும் குழந்தைகள் என அல் ஜசீரா தெரிவித்துள்ளது. பிந்திக்கிடைத்த செய்திகளின்படி, இத் தாக்குதலில் கொல்லப்பட்டவர்கள் எண்ணிக்கை 900 வரையில் இருக்கலாம் எனத் தெரியவருகிறது. காசா நகரில் உள்ள மருத்துவமனையில் நூற்றுக்கணக்கானோர் உயிரிழந்த ராக்கெட் தாக்குதலை […]

வட அமெரிக்கா

லெபனானுக்கு செல்ல வேண்டாம் – அமெரிக்கா அவசர அறிவிப்பு

  • October 18, 2023
  • 0 Comments

இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல் தீவிரமடைந்துள்ளதால், லெபனானுக்கு செல்ல வேண்டாம் என அமெரிக்க வெளியுறவுத்துறை தனது மக்களுக்கு அறிவித்துள்ளது. பாலஸ்தீனத்திற்கு அருகில் அமைந்துள்ள லெபனானில் தற்போது பாதுகாப்பற்ற சூழல் நிலவுவதாக அவர்கள் தெரிவித்துள்ளனர். லெபனான் தலைநகர் பெய்ரூட்டில் உள்ள அமெரிக்க தூதரகத்திற்கு முன்பாக நேற்று காஸா பகுதியில் உள்ள அல் அஹில் மருத்துவமனை மீது ஏவுகணைத் தாக்குதலில் 500 பேர் கொல்லப்பட்டனர். இந்த சம்பவத்தையடுத்து அங்கு பரபரப்பான சூழல் நிலவியதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இலங்கை

கொழும்பில் ஒரே பிரசவத்தில் பிறந்த 6 குழந்தைகளின் உயிரை காப்பாற்ற போராடும் மருத்துவர்கள்

  • October 18, 2023
  • 0 Comments

கொழும்பு காசல் மகளிர் மருத்துவமனையில் கர்ப்பிணி ஒருவர் ஒரே பிரசவத்தில் 6 குழந்தைகளை பெற்றெடுத்த நிலையில் குழந்தைகளின் உயிரை காப்பாற்ற மருத்துவர்கள் போராடி வருகின்றனர். 37 வயதான பெண் ஒருவரே இவ்வாறு 6 குழந்தைகளைப் பெற்றெடுத்துள்ளார். குறித்த ஆறு குழந்தைகளும் ஆண் குழந்தைகள் எனவும், தற்போது குழந்தைகள் அதி தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வருவதாகவும் காசல் மருத்துவமனையின் குழந்தைகள் பிரிவுக்கு பொறுப்பான வைத்திய நிபுணர் சமன் குமார தெரிவித்துள்ளார். வியாங்கொடை பிரதேசத்தில் வசிக்கும் இந்த […]

வாழ்வியல்

உடல் பருமனை அதிகரிக்கும் மன அழுத்தம்!

  • October 18, 2023
  • 0 Comments

மன அழுத்தம் உங்கள் எடையை அதிகரிக்கலாம்… உண்மையில், இன்றைய பரபரப்பான வாழ்க்கை முறையே ஆரோக்கியமற்ற உணவுப் பழக்கம் மற்றும் கெட்டுப்போன வாழ்க்கை முறைக்கு முக்கிய காரணம், இது உங்கள் எடையில் நேரடி தாக்கத்தை ஏற்படுத்துகிறது. பல மருத்துவ ஆய்வுகள் உடல் பருமன் ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிப்பதாகக் காட்டுகின்றன, ஏனெனில் இது இரத்த அழுத்தம், நீரிழிவு போன்ற பல கடுமையான நோய்களின் அபாயத்தை அதிகரிக்கிறது. ஆனால் மன அழுத்தம் மற்றும் பதட்டம் போன்றவை உங்கள் எடையை அதிகரிக்கும் என்று […]

ஆஸ்திரேலியா

பிரம்மாண்ட மாற்றத்திற்கு தயாராகும் ஆஸ்திரேலியா

  • October 18, 2023
  • 0 Comments

2030ஆம் ஆண்டு ஆஸ்திரேலியா காகிதமற்ற மற்றும் நாணயமற்ற சமூகமாக மாறும் என்று கணிக்கப்பட்டுள்ளது. டிஜிட்டல் வோலட் – Buy Now Pay Later போன்ற சேவைகள் நகர்ப்புறங்களில் இருந்து விலகி கிராமப்புறங்களிலும் பிரபலமாகி வருவதாக கூறப்படுகிறது. வசதி மற்றும் உடனடித் தன்மை காரணமாக டிஜிட்டல் பரிவர்த்தனைகளில் நுகர்வோர் அதிக ஆர்வம் காட்டுகின்றனர் என்பது அங்கீகரிக்கப்பட்டுள்ளது. 2007 ஆம் ஆண்டளவில், வெறும் நாணயத்தாள்கள் மட்டுமே பயன்படுத்தி செலுத்தப்பட்ட தொகையின் சதவீதம் 70 சதவீதமாக பதிவு செய்யப்பட்டது. ஆனால் 2022ஆம் […]