இலங்கை

மன்னாரில் ஜனாதிபதி தலைமையில் ஆரம்பமான தேசிய மீலாதுன் நபி விழா-மஸ்தான் MP-ன் செயல்பாடு குறித்து விசனம்

  • October 22, 2023
  • 0 Comments

மன்னாரில் இன்று ஞாயிற்றுக்கிழமை (22) காலை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில் ஆரம்பமான தேசிய மீலாதுன் நபி விழாவில் கலந்து கொள்ள பிராந்திய ஊடகவியலாளர்களுக்கும்,மாவட்ட செயலக ஊடக அலுவலருக்கும் அனுமதி வழங்கப் படாமல் திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர். இவ் வருடத்திற்கான தேசிய மீலாதுன் நபி விழா இம்முறை மன்னார் மாவட்டத்தில் முன்னெடுக்க ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்ட நிலையில் முசலி தேசிய பாடசாலையில் ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டது. வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் காதர் மஸ்தான் தலைமையில் முழு ஏற்பாடுகளும் முன்னெடுக்கப்பட்டது.இவ்விடையம் தொடர்பாக […]

மத்திய கிழக்கு

ஹமாஸ் வீசிய ரொக்கெட்டை சுட்டு வீழ்த்திய ஐயன் டோம்…

  • October 22, 2023
  • 0 Comments

ஹமாஸ் அமைப்பினர் வீசிய ராக்கெட்டை ஐயன் டோம் அமைப்பு சுட்டு வீழ்த்தியுள்ளதாக இஸ்ரேல் அறிவித்துள்ளது. இஸ்ரேல் ஹமாஸ் இடையே தொடர் தாக்குதல்கள் நடைபெற்று வரும் நிலையில் இருதரப்பிலும் நடத்தப்பட்ட தாக்குதல்களில் ஆயிரக்கணக்கான பொதுமக்கள், குழந்தைகள் உயிரிழந்துள்ளனர். போர் விதிமுறைகளுக்கு மாறாக, இரு தரப்புமே பொதுமக்கள் கூடும் இடங்களை குறி வைத்து தொடர் தாக்குதல்களை நடத்தி வருவதால் உயிரிழப்புகள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. ஹமாஸ் தொடர் ஏவுகணை தாக்குதல்களை நடத்தி வருவதால், அதனை எதிர்கொள்ள இஸ்ரேல் ராணுவம் ஐயன் […]

இலங்கை

லெபனாலில் கட்டிட இடிபாடுகளில் சிக்கிய இலங்கை பெண்ணின் சடலம் மீட்பு!

  • October 22, 2023
  • 0 Comments

லெபனானில் அண்மையில் இடிந்து விழுந்த கட்டிடத்தின் இடிபாடுகளில் இலங்கை பெண் ஒருவரும் சிக்கியிருப்பதாக கூறப்பட்டது. இந்நிலையில் குறித்த இடிபாடுகளில் சிக்கியிருந்த பெண்ணின் சடலம் நேற்று (21.10) மீட்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இடிந்த கட்டிடத்தின் இடிபாடுகளில் இருந்து இலங்கைப் பெண்ணொருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது. மாத்தறை பகுதியைச் சேர்ந்த ஐ. பிரேமலதா என்ற 65 வயதுடைய பெண் ஒருவரின் சடலமே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஐரோப்பா

லண்டனில் ஒன்றுக்கூடிய ஆயிரக்கணக்கான மக்கள் : பாலஸ்தீனத்திற்கு ஆதரவாக ஒலித்த குரல்!

  • October 22, 2023
  • 0 Comments

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் இஸ்ரேலுக்கும் ஹமாஸ் போராளிகளுக்கும் இடையில் மோதல்கள் இடம்பெற்று வரும் நிலையில் பாலஸ்தீனத்திற்கு ஆதரவாக லண்டனில் மாபெரும் போராட்டம் ஒன்று நடத்தப்பட்டுள்ளது. காஸா பகுதி மீதான தாக்குதல்களை நிறுத்தக் கோரி இந்த போராட்டம் நடத்தப்பட்டது. இங்கிலாந்து தலைநகர் லண்டனில் ஒன்றுக்கூடிய ஆயிரக்கணக்கான மக்கள் பாலஸ்தீனத்திற்கு ஆதரவாக குரல் கொடுத்துள்ளனர். காசா பகுதியை குறிவைத்து நடத்தப்படும் தாக்குதல்களை நிறுத்துமாறு அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். அத்துடன் யூத சமுதாயத்திற்கு எந்த பாதிப்பும் ஏற்படாத வகையில் செயல்பட வேண்டும் […]

இலங்கை

ஜனாதிபதி ரணில் ஒருதலைப்பட்சமாக செயற்படுகிறார் – கிழக்கு முன்னாள் ஆளுநர்

  • October 22, 2023
  • 0 Comments

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் நிலவும் பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் விவகாரத்தில் ஜனாதிபதி ஒருதலைப்பட்சமாக செயற்படுகிறார். சிங்களவர்களுக்கு ஒரு சட்டம், தமிழர்களுக்கு ஒரு சட்டம் அமுல்படுத்தப்படுகிறது. திம்புலாகல பகுதியில் உள்ள சிங்களவர்களை வெளியேற்ற ஒருபோதும் இடமளிக்க முடியாது ” என கிழக்கு மாகாண முன்னாள் ஆளுநர் அனுராதா யஹம்பத் தெரிவித்தார்.கொழும்பில் நேற்று முன்தினம் வெள்ளிக்கிழமை (20) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார். மயிலத்தமடு மாதவனை மேய்ச்சல் தரை விவகாரத்தை முன்னிலைப்படுத்தி மட்டக்களப்பு, திம்புலாகல சிங்கள […]

பொழுதுபோக்கு

6 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் வந்தார் சித்தாரா

  • October 22, 2023
  • 0 Comments

பிரபல சினிமா நடிகையான சித்தாரா புதிய தொடரில் நடிக்க இருக்கிறார். அந்த தொடருக்கான புரோமோ அண்மையில் வெளியாகி எதிர்பார்ப்பை கிளப்பியுள்ளது. பூவா தலையா என்று பெயரிடப்பட்டுள்ள இந்த தொடரில் சித்தாரா, லதா ராவ், ஸ்வேதா ஷ்ரிம்படன் மற்றும் பாண்டி கமல் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். முன்னதாக தமிழ் சின்னத்திரையில் கங்கா யமுனா சரஸ்வதி, ஆர்த்தி, காவேரி மகள், பராசக்தி ஆகிய தொடர்களில் சித்தாரா நடித்திருந்தார். தற்போது 6 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் பூவா தலையா தொடரின் […]

வாழ்வியல்

ஒற்றைத் தலைவலியை தீர்க்கும் ஆற்றல் கொண்ட உணவுகள்!

  • October 22, 2023
  • 0 Comments

ஒற்றைத் தலைவலி ஒருவரின் இயல்பு வாழ்க்கையை பாதிக்கும் திறன் பெற்றது. இந்நிலையில், இதிலிருந்து விடுபட உதவும் உணவுகளை பற்றி அறிந்து கொள்ளலாம். ஒற்றைத் தலைவலி பிரச்சனை வாழ்க்கையை முடக்கி போடும் திறன் கொண்டது. இதிலிருந்து விடுபட சேர்க்க வேண்டிய உணவுகளை பற்றி அறிந்து கொள்ளலாம். பச்சை இலைக் காய்கறிகளில் அதிக அளவு ஆண்டி-ஆக்சிடெண்டுகள் மற்றும் ஊட்டச்சத்துக்கள் உள்ளன. இதில் உள்ள மெக்னீசியம் சத்து ஒற்றை தலைவலிக்கு தீர்வை அளிப்பதோடு, நல்ல மூளை ஆரோக்கியம் மற்றும் நரம்பு செயல்பாட்டை […]

செய்தி

இத்தாலியில் வசிக்கும் வெளிநாட்டவர்களுக்கு அறிமுகமாகும் கட்டணம்

  • October 22, 2023
  • 0 Comments

இத்தாலியில் வசிக்கும் ஐரோப்பிய ஒன்றியத்திற்கு வெளியே உள்ள வெளிநாட்டினர், நாட்டின் தேசிய சுகாதார சேவையைப் பயன்படுத்துவதற்கு ஆண்டுக்கு 2,000 யூரோ கட்டணம் செலுத்த வேண்டும் என்று இத்தாலிய அரசாங்கம் அறிவித்துள்ளது. அரசாங்கம் விளக்கியது போல், கட்டணங்கள் 2024 வரவு செலவு திட்டத்தில் ஏற்றுக்கொள்ளப்படும் என தெரிவிக்கப்படுகின்றது. நாடு அத்தகைய கட்டணத்தை அறிமுகப்படுத்தும் என்று அதிகாரிகள் அறிவித்துள்ளனர். இருந்த போதிலும், சட்டப்பூர்வ குடியிருப்பாளர்கள், சர்வதேச மாணவர்கள் மற்றும் ஒரு இளம் வெளிநாட்டு நபர் ஆகியோருக்கு வெளியிடப்படாத தள்ளுபடிகள் கட்டண […]

பொழுதுபோக்கு

விஜயின் லைஃப் டைம் வசூலை இன்று தவிடுபொடியாக்கும் லியோ

  • October 22, 2023
  • 0 Comments

லியோ திரைப்படம் மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் கடந்த அக்டோபர் 19-ந் தேதி திரைக்கு வந்தது. இப்படம் வெளியான முதல் நாளே கலவையான விமர்சனங்களை பெற்றது. படத்தின் முதல் பாதி சூப்பராகவும், இரண்டாம் பாதி சுமாராகவும் இருப்பதாக விமர்சகர்கள் விமர்சித்து வந்தனர். இருப்பினும் பேமிலி ஆடியன்ஸுக்கு லியோ படம் மிகவும் பிடித்துப்போனதால், இப்படம் முதல் நாளில் இருந்தே பாக்ஸ் ஆபிஸில் வசூல் வேட்டை நடத்தி வருகிறது. அதன்படி இப்படம் நேற்று மட்டும் உலகளவில் ரூ.90 கோடிக்கு மேல் வசூலை […]

இலங்கை

தனியார் வாகன இறக்குமதி – தடை நீக்குவது சாத்தியமில்லை

  • October 22, 2023
  • 0 Comments

தனியார் வாகனங்களை இறக்குமதி செய்வதற்கு விதிக்கப்பட்டுள்ள தடையை எதிர்வரும் காலங்களில் நீக்குவது சாத்தியமில்லை என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார். அந்நியச் செலாவணி நெருக்கடி காரணமாக இறக்குமதி மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக இராஜாங்க அமைச்சர் குறிப்பிட்டுள்ளார். எவ்வாறாயினும், தனியார் வாகனங்களுக்கான இறக்குமதி கட்டுப்பாடுகள் தவிர்ந்த அனைத்து இறக்குமதி கட்டுப்பாடுகளும் நீக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். அரசாங்கத்தின் மதிப்பீடு மற்றும் நிபுணர்களின் கருத்தின்படி, உள்நாட்டு சந்தையில் போதுமான வாகனங்கள் இருப்பதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார். வாகனங்களின் தேவை, எரிபொருள் மற்றும் வாகனங்களை […]