விளையாட்டு

உலகக்கோப்பை காலிறுதிச் சுற்றுக்காக மோதும் அணிகள்!

  • November 12, 2023
  • 0 Comments

2023 ஒருநாள் உலகக் கோப்பையின் காலிறுதிச் சுற்றின் முதல் ஆட்டம் இந்திய அணிக்கும் நியூசிலாந்து அணிக்கும் இடையே நடைபெற உள்ளது. இப்போட்டி வரும் 15ம் திகதி வான்கடே மைதானத்தில் நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இதேவேளை, இரண்டாவது அரையிறுதிப் போட்டி அவுஸ்திரேலியா மற்றும் தென்னாபிரிக்கா அணிகளுக்கு இடையில் இடம்பெறவுள்ளது. அந்த போட்டிகள் வரும் 16ம் திகதி ஈடன் கார்டன் மைதானத்தில் நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மத்திய கிழக்கு

காசாவில் பெரிய மருத்துவமனையில் சேவை நிறுத்தம்… 3 குழந்தைகள் பலி!

  • November 12, 2023
  • 0 Comments

இஸ்ரேலின் தொடர் தாக்குதல் காரணமாக காசாவில் உள்ள பெரிய மருத்துவமனையான அல்-ஷிபா மருத்துவமனையில் சேவை நிறுத்தப்பட்டுள்ளது. காசா மீதான இஸ்ரேல் ராணுவத்தின் தாக்குதல் ஒரு மாதத்தை கடந்தும் தொடர்கிறது. இதனால் 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட குழந்தைகள் உட்பட 11 ஆயிரம் பேர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில், வடக்கு காசா பகுதியில் அமைந்துள்ள பெரிய அல்-ஷிபா மருத்துவமனை மீது இஸ்ரேல் ராணுவம் தாக்குதலை தீவிரப்படுத்தி வருகிறது. இதனால், மருத்துவ சேவை நிறுத்தப்பட்டதை தொடர்ந்து, நோயாளிகள் கடும் அவதி அடைந்து வருகின்றனர். […]

இலங்கை

இலங்கையில் ரயில் சேவைகள் தாமதமாகலாம் என அறிவிப்பு!

  • November 12, 2023
  • 0 Comments

கண்டியில் இருந்து மாத்தறை நோக்கி பயணித்த அதிவேக புகையிரதம் அம்பேபுஸ்ஸ நிலையத்திற்கு அருகில் தொழிநுட்பக் கோளாறு ஏற்பட்டுள்ளதாக ரயில்வே பிரதான கட்டுப்பாட்டு அறை தெரிவித்துள்ளது. தொழில்நுட்ப பிழையை சரி செய்ய தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எவ்வாறாயினும், இதன் காரணமாக பிரதான பாதையில் இயங்கும் ரயில் தாமதமாகலாம் என ரயில்வே பிரதான கட்டுப்பாட்டு அறை அறிவித்துள்ளது.

பொழுதுபோக்கு

“ஊ சொல்றியா மாமா” மீண்டும் பட்டையை கிளப்ப தயாராகும் சமந்தா..

  • November 12, 2023
  • 0 Comments

அல்லு அர்ஜூன், ரஷ்மிகா மந்தனா, பகத் பாசில் உள்ளிட்டவர்கள் லீட் கேரக்டர்களில் நடித்து கடந்த 2021ம் ஆண்டில் வெளியானது புஷ்பா. இந்தப் படம் தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் பான் இந்தியா படமாக வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. இதனிடையே இந்தப் படத்தின் இரண்டாவது பாகத்தை சுகுமார் இயக்கி வருகிறார். படம் அடுத்த ஆண்டு ஆகஸ்ட் 15ம் தேதி ரிலீசாகவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. படத்தில் கொண்டாட்டத்திற்குரிய பல அம்சங்கள் இருந்த நிலையில் தேவிஸ்ரீ பிரசாத் இசையில் பாடல்களும் அதிகமான […]

மத்திய கிழக்கு

பதிலடி கொடுக்க தயாராகும் ஈரான்!

  • November 12, 2023
  • 0 Comments

காஸா போருக்கு பதிலடி கொடுக்க ஈரான் தயாராகி வருவதாக தெரியவந்துள்ளது. காஸா பகுதியில் ஏற்பட்டுள்ள போர் மோதல்களுக்கு நடவடிக்கை எடுக்க வேண்டிய நேரம் இது என்று ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி தெரிவித்துள்ளார். காஸா பகுதியில் இடம்பெற்று வரும் யுத்த மோதல்கள் தொடர்பில் வார்த்தைகளால் பதில் கூறாமல், நடவடிக்கைகளால் பதிலளிக்க வேண்டிய தேவை இருப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார். சவூதி அரேபியாவில் இடம்பெற்றுவரும் அரபு நாட்டு தலைவர்களின் மாநாட்டில் பங்குபற்றுவதற்காக தெஹ்ரான் விமான நிலையத்தை வந்தடைந்த போது ஈரான் […]

இலங்கை முக்கிய செய்திகள்

கட்டுநாயக்க விமான நிலையத்திற்குள் துப்பாக்கியுடன் வந்த நபரால் பரபரப்பு

  • November 12, 2023
  • 0 Comments

மாலைதீவு பிரஜை ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். துப்பாக்கி ஒன்றை மறைத்து வைத்திருந்த குற்றச்சாட்டில் 58 வயதுடைய நபரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் ஓய்வறையில் வைத்து நேற்று சனிக்கிழமை இரவு இவர் கைது செய்யப்பட்டுள்ளார். விமானநிலைய அதிகாரிகள் இவருடைய பயணப் பையை சோதனை செய்த போது துப்பாக்கி ஒன்று மீட்கப்பட்டுள்ளது. இது தொடர்பிலான மேலதிக விசாரணைகளை கட்டுநாயக்க விமான நிலைய பொலிஸார் மேற்கொண்டு […]

பொழுதுபோக்கு

ஜப்பானை ஓவர்டேக் செய்த ஜிகர்தண்டா டபுள் X…

  • November 12, 2023
  • 0 Comments

கார்த்திக் சுப்புராஜ் இயக்கியுள்ள ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் திரைப்படம் நேற்று முன்தினம் வெளியானது. இந்தப் படத்தில் எஸ்ஜே சூர்யா, ராகவா லாரன்ஸ் லீடிங் ரோலில் நடித்துள்ளனர். கார்த்தியின் ஜப்பான் படத்துடன் மோதிய ஜிகர்தண்டா டபுள் எக்ஸ், பாக்ஸ் ஆபிஸில் மாஸ் காட்டி வருகிறது. இந்தப் படத்துக்கு கிடைத்த பாசிட்டிவான விமர்சனங்களால் இரண்டாவது நாள் வசூலில் ஜப்பானை ஓவர்டேக் செய்துள்ளது. கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் எஸ்ஜே சூர்யா, ராகவா லாரன்ஸ் நடித்துள்ள திரைப்படம் ஜிகர்தண்டா டபுள் எக்ஸ். ஜிகர்தண்டா […]

அறிந்திருக்க வேண்டியவை

தீபாவளி எங்கிருந்து வந்தது? பின்னணி என்ன?

  • November 12, 2023
  • 0 Comments

இந்தியா முழுவதும் பரவலான உற்சாகத்துடன் கொண்டாடப்படும் தீபாவளியின் பின்னணியில் இருக்கும் கதைகள் ஏராளம். தமிழ்நாட்டில் எப்போதிலிருந்து தீபாவளி கொண்டாடப்படுகிறது? இந்தியா முழுவதுமுள்ள இந்துக்களால் பரவலாகக் கொண்டாடப்படும் பண்டிகையான தீபாவளி, இந்துக்கள் வசிக்கும் பிற நாடுகளிலும்கூட உற்சாகத்துடன் கொண்டாடப்படுகிறது. ஆனால், இந்தப் பண்டிகை எப்படித் தோன்றியது என்பது குறித்து நாட்டின் ஒவ்வொரு பகுதியிலும் ஒவ்வொரு கதை சொல்லப்படுகிறது. இந்தப் பண்டிகை தமிழ் மாத கணக்கீட்டின்படி பெரும்பாலான வருடங்களில் ஐப்பசி மாதத்தில் வரும் அமாவாசை தினத்தன்று கொண்டாடப்படுகிறது. சில வருடங்களில் […]

மத்திய கிழக்கு

இஸ்ரேலுக்கு எதிராக புதிய ஏவுகணைகளை தயார்ப்படுத்தும் ஹிஸ்புல்லா

  • November 12, 2023
  • 0 Comments

ஹமாஸ் ஆயுதக் குழுவினருக்கு எதிராக தாக்குதல் நடத்தி வரும் இஸ்ரேலுக்கு எதிராக புதிய ஏவுகணைகளை பயன்படுத்த உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஹிஸ்புல்லா அமைப்பின் தலைவர் சையத் ஹாசன் நசருல்லா எச்சரித்துள்ளார். ஈரான் ஆதரவு பெற்ற ஹிஸ்புல்லா அமைப்பு லெபனானின் தென் பகுதி எல்லையில் இருந்து அவ்வப்போது இஸ்ரேலுக்கு தாக்குதல் நடத்தி வருகிறது. அதற்கு இஸ்ரேல் படையினரும் பதிலடி கொடுத்து வருகின்றனர். இந்நிலையில், செய்தியாளா்களிடம் பேசிய ஹிஸ்புல்லா அமைப்பின் தலைவர் ஹசன் நசருல்லா, இஸ்ரேல் போா் அண்டை நாடுகளுக்கு விரிவடைவதை […]

விளையாட்டு

புதிய சாதனை படைத்த ஜோ ரூட்..!

  • November 12, 2023
  • 0 Comments

நடப்பு உலகக்கோப்பையில் இங்கிலாந்து அணி லீக் போட்டிகளில் மோசமாக விளையாடியதால் அரையிறுதி தகுதி பெறாமல் வெளியேறினர். இங்கிலாந்து அணி நேற்றைய தங்களின் கடைசி லீக் போட்டியில் 93 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த லீக் போட்டிகளில் ஜோ ரூட் ரன்களை எடுக்க முடியாமல் திணறி வந்தார். இருப்பினும், பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் ஜோ ரூட் நன்றாக விளையாடினார். மேலும், நேற்றைய போட்டியில் அவர் தனது அணிக்காக அதிக ரன்கள் எடுத்தார். நேற்று மூன்றாவது இடத்தில் பேட்டிங் […]