பொழுதுபோக்கு

இன்று இன்ப அதிர்ச்சி கொடுத்தார் விஜய்!!! காத்திருக்கின்றது விருந்து….

தளபதி விஜயின் பிறந்தநாள் அன்று, ‘லியோ’ படத்திலிருந்து முதல் சிங்கிள் பாடல் வெளியாக உள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது. தென்னிந்திய திரையுலகின் வசூல் மன்னனாக வலம் வந்து கொண்டிருக்கும் தளபதி விஜய்யின் 49-ஆவது பிறந்த நாள் ஜூன் 22 ஆம் தேதி வருகின்றது. இதை முன்னிட்டு ரசிகர்களுக்கு தரமான விருந்து கொடுக்கும் விதமாக தளபதி விஜய் தன்னுடைய சமூக வலைதளத்தில், போஸ்டர் ஒன்றை வெளியிட்டு ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளார். அதாவது விஜய்யின் பிறந்தநாள் அன்று, அவர் நடிப்பில் தற்போது உருவாகி இருக்கும் ‘லியோ’ படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் பாடலான ‘நான் ரெடி’ என்ற பாடல் வெளியாக உள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிகை த்ரிஷா நீண்ட இடைவெளிக்கு பின்னர் நடித்துள்ளார். விஜய்யின் தந்தையாக பாலிவுட் சூப்பர் ஸ்டார் சஞ்சய் நடித்துள்ளதாக கூறப்படுகிறது. வில்லனாக கௌதம் மேனன், மன்சூர் அலி கான், மிஷ்கின், ஆகியோர் நடித்துள்ளனர். அதேபோல் முக்கிய கதாபாத்திரத்தில் பிரியா ஆனந்த், கதிர், உள்ளிட்ட பலர் நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் முடிவடைய உள்ள நிலையில், இப்படத்தை வரும் தீபாவளிக்கு ரிலீஸ் செய்ய படக்குழு திட்டமிட்டுள்ளது. இந்நிலையில் விஜய்யின், பிறந்த நாளை முன்னிட்டு ‘நான் ரெடி’ என்கிற முதல் சிங்கிள் பாடல் வெளியாக உள்ள தகவல், ஒட்டுமொத்த விஜய் ரசிகர்களையும் உச்சகட்ட மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. அதேபோல் வரும் 22 ஆம் தேதி, தளபதி விஜய் தன்னுடைய 68 ஆவது படமாக இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிக்க இருக்கும் படத்தின் டைட்டில் அல்லது ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகலாம் என்கிற தகவலும் வெளியாகி உள்ளது குறிப்பிடத்தக்கது.  
(Visited 8 times, 1 visits today)
Avatar

MP

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

பொழுதுபோக்கு

ஆஸ்கர் விருதை தட்டிச் சென்ற நாட்டு நாட்டு பாடல் – ரசிகர்கள் மகிழ்ச்சி

ஆர்.ஆர்.ஆர் திரைப்படத்தில் இடம்பெற்ற நாட்டு நாட்டு பாடலுக்கு ஆஸ்கார் விருது கிடைத்துள்ளது. சிறந்த பாடல் பிரிவில் அந்த பாடல் ஆஸ்கார் விருது வென்றுள்ளது. சினிமா உலகின் மிக
பொழுதுபோக்கு

பாண்டியர்களின் ஆட்டம் ஆரம்பம் : யாத்திசை படத்தின் முதல் நாள் வசூல் விபரம்!

  • April 23, 2023
பாண்டியர்களின் வீரவரலாற்றை சொல்லும் யாத்திசை திரைப்படம் நேற்று திரையறங்குகளில் வெளியாகி நல்ல விமர்சனத்தை பெற்று வருகிறது. அறிமுக இயக்குனர் தரணி ராசேந்திரன் இயக்கத்தில் புது முகங்களான சேயோன்

You cannot copy content of this page

Skip to content