தமிழ்நாடு

தமிழகம் – புதுக்கோட்டையில் பட்டாசு குடோனில் ஏற்பட்ட திடீர் தீ விபத்து ;ஒருவர் பலி!

புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை அருகே பட்டாசு குடோனில் ஏற்பட்ட தீ விபத்தில் ஒருவர் பலி,படுகாயங்களுடன் ஒருவர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதி

புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை அருகே அத்த்திப்பள்ளம் என்ற கிராமத்தில் வேல்முருகன் என்பவருக்கு சொந்தமான பட்டாசுக் கடை மற்றும் குடோன் உள்ளது.

முன்புறம் கடையும் பின்புறம் பட்டாசு குடோனும் இருந்துள்ள நிலையில் தீபாவளி பண்டிகை காலகட்டத்தில் விற்பனை செய்தது போக மீதமுள்ள பட்டாசுகளை திருவிழா காலங்களில் விற்பதற்காக இந்த குடோன்களில் வைத்திருந்துள்ளனர்.

இந்நிலையில் அந்த பட்டாசு குடோன் அருகே கடையை விரிவு படுத்துவதற்காக தகரக் கொட்டகை போடும் பணி நடைபெற்று வந்துள்ளது.அதற்காக வெல்டிங் மிஷின் கொண்டு வெல்டு வைத்த போது அதிலிருந்து பரவிய தீப்பொறி அருகே உள்ள பட்டாசு குடோனில் இருந்த பட்டாசுகள் மீது பட்டுள்ளது.

8 killed, buildings collapse as explosion rips through Tamil Nadu cracker  factory - India Today

தீ பட்டதும் பட்டாசுகள் வெடித்து சிதறியதில் அந்த பட்டாசு கடை மற்றும் குடோனின் உரிமையாளர் வேல்முருகனின் தம்பி கார்த்திக்(27) சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

பட்டாசு குடோன் வெடித்து சிதறுவதை பார்த்து அருகே இருந்த மக்கள் இதுகுறித்து இலுப்பூர் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.தகவலின் பேரில் அங்கு வந்த தீயணைப்புத் துறையினர் அந்த பட்டாசு குடோனில் பற்றி எரிந்த தீயை அனைத்து அதில் படுகாயங்களுடன் சிக் கியிருந்த தொழிலாளி ஒருவரை மீட்டு சிகிச்சைக்காக மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

இந்த சம்பவம் குறித்து பொலிஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வரும் நிலையில் போலீசார் மேற்கொண்ட முதற்கட்ட விசாரணையில் உரிய அனுமதியுடன் அந்த பட்டாசு கடை மற்றும் குடோன் செயல்பட்டு வந்ததும் வெல்டிங் வைக்கும் பணி நடந்த போது அதிலிருந்து சிதறிய தீப்பொறி பட்டு இந்த விபத்து நடந்துள்ளதும் தெரியவந்துள்ளது.

(Visited 6 times, 1 visits today)
Avatar

Mithu

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

தமிழ்நாடு

தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனாவின் தாக்கம்

தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனாவின் தாக்கம் கணிசமாக அதிகரித்து வரும் நிலையில் ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாபேட்டை அரசு தலைமை மருத்துவமனையில் கொரோனா  தொற்று முன்னேற்பாடு சிகிச்சை பணிகள்
தமிழ்நாடு

பள்ளிக்கு அனுப்ப பெற்றோர்கள் மறுப்பு

நெமிலி அடுத்த கீழ்வீதி கிராமத்தில் புதிய பள்ளி கட்டிடம் கட்டித் தராததை கண்டித்து மாணவர்களை பள்ளிக்கு அனுப்ப பெற்றோர்கள் மறுப்பு. மாணவர்கள் இன்றி வெறிச்சோடி காணப்படும் ஆதிதிராவிடர்

You cannot copy content of this page

Skip to content