பொழுதுபோக்கு

சூர்யா 44 ரிலீஸ் தேதி அறிவிப்பு… அப்ப கங்குவா?

சூர்யா – கார்த்திக் சுப்புராஜ் இணைந்துள்ள சூர்யா44 படத்தின் ரிலீஸ் பற்றிய அப்டேட் தகவல் கசிந்துள்ளது.

இருவரும் இணைந்துள்ள ‘சூர்யா44 ‘ படத்தை ஸ்டோன் பெஞ்ச் பிலிம்ஸ் மற்றும் 2டி எண்டர்டெயின்மெண்ட் இணைந்து தயாரிக்க, கார்த்திக் சுப்புராஜ் எழுதி இயக்கி வருகிறார். சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார்.

கேங்ஸ்டர் திரைக்கதையில் உருவாகி வரும் இப்படத்தில் சூர்யா வித்தியாசமான கெட்டப்பில் உள்ள கிளிம்ப்ஸ் வீடியோ அண்மையில் வெளியாகி வைரலானது. இப்படத்தில் ஷூட்டிங் விறுவிறுவென நடந்துவரும் நிலையில், இப்படத்தை அடுத்தாண்டு பொங்கலுக்கு வெளியிட படக்குழு திட்டமிட்டிருப்பதாக கூறப்படுகிறது.

இதற்கு நடிகர் சூர்யாவும் இயக்குனர் கார்த்திக் சுப்புராஜும் சம்மதித்துள்ளதாக தெரிகிறது. ஏனென்றால் ‘கங்குவா’ படம் ரிலீஸ் தள்ளிப்போயுள்ள நிலையில், இப்படத்தை தீபாவளிக்கா, அல்லது டிசம்பரில் வெளியிடுவதா? அல்லது பொங்கலுக்கு ரிலீஸ் செய்யலாமா ? என்று படக்குழு யோசித்தபோது, ‘சூர்யா 44 படம் பொங்கலுக்கு வரும் என்று தீர்மானித்து, நவம்பர் 14 ஆம் தேதி கங்குவாவை ரிலீஸ் செய்ய முடிவானதாக தகவல் வெளியாகிறது.

இதனால் சூர்யாவின் அடுத்தடுத்த வித்தியாசமான 2 படங்களைக் காண ரசிகர்கள் ஆர்வமுடன் உள்ளனர்.

(Visited 1 times, 1 visits today)
Avatar

MP

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

பொழுதுபோக்கு

ஆஸ்கர் விருதை தட்டிச் சென்ற நாட்டு நாட்டு பாடல் – ரசிகர்கள் மகிழ்ச்சி

ஆர்.ஆர்.ஆர் திரைப்படத்தில் இடம்பெற்ற நாட்டு நாட்டு பாடலுக்கு ஆஸ்கார் விருது கிடைத்துள்ளது. சிறந்த பாடல் பிரிவில் அந்த பாடல் ஆஸ்கார் விருது வென்றுள்ளது. சினிமா உலகின் மிக
பொழுதுபோக்கு

பாண்டியர்களின் ஆட்டம் ஆரம்பம் : யாத்திசை படத்தின் முதல் நாள் வசூல் விபரம்!

  • April 23, 2023
பாண்டியர்களின் வீரவரலாற்றை சொல்லும் யாத்திசை திரைப்படம் நேற்று திரையறங்குகளில் வெளியாகி நல்ல விமர்சனத்தை பெற்று வருகிறது. அறிமுக இயக்குனர் தரணி ராசேந்திரன் இயக்கத்தில் புது முகங்களான சேயோன்

You cannot copy content of this page

Skip to content