பொழுதுபோக்கு

தங்கத் தேர் போல நடந்து வந்த ஷிவாஷி நாராயணனைப் பார்த்து சொக்கிப்போன ரசிகர்கள்

நடிகை ஷிவானி நாராயணன் புடவையில் இருக்கும் அம்சமான அழகைப்பார்த்து ரசிகர்கள் சொக்கிப்போனார்கள்.

திரைத்துறையில் சினிமா நடிகைகளைவிட சின்னத்திரை நடிகைகளுக்குத்தான் இப்போது ஏகப்பட்ட மார்க்கெட். அதிலும் பிரைம் டைமில் ஒரு சீரியலில் நடித்துவிட்டால் போது, விரைவில் பிரபலமாகி விடலாம்.

அப்படி ஹிட்டான சீரியலில் நடித்து பிரபலமானவர் தான் ஷிவானி நாராயணன். அழுகு பதுமையாக, அமைதியின் சின்னமாக வந்த ஷிவானியின் ஆட்டத்தைப் பார்த்து மயங்கிப்போன ரசிகர்கள் அவரை இன்ஸ்டாகிராம் குயின் என்று செல்லமாக அழைத்து வருகின்றனர்.

சோஷியல் மீடியாவில் கிடைத்த வரவேற்பைத் தொடர்ந்து பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு போன ஷிவானி, பிக்பாஸ் வீட்டிலும் அலப்பறை செய்வார் என்று பார்த்தால், புதுசா கல்யாணம் ஆன பொண்ணு விருந்துக்கு வந்தது போல, அலுங்காமல் குலுங்காமல் அமர்ந்து இருந்தார். அதுமட்டுமில்லாமல் பாலாஜி முருகதாஸின் பின்னால் சுற்றி பெயரை கெடுத்துக்கொண்டு எலிமினேட்டாகி பாதியிலே வெளியில் வந்தார்.

பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியில் வந்த ஷிவானி நாராயணன் அடுத்தடுத்த படங்களில் கமிட்டானார். விக்ரம், வீட்ல விசேஷம் போன்ற படங்களில் ஷிவானிக்கு வாய்ப்பு கிடைத்தது.

விக்ரம் படத்தில் விஜய்சேதுபதி மூன்று மனைவிகளில் ஒருவராக நடித்திருந்தார். விக்ரம் படத்தில் நடித்தது என்னமோ இரண்டு சீன்தான் என்றாலும், படம் சூப்பர் டூப்பர் ஹிட்டடித்ததால் இவரும் பரவலாக பேசப்பட்டார்.

இதையடுத்து, ஷிவானி நாராயணன் இயக்குனர் எம்.செல்வகுமார் இயக்கத்தில் நடிகர் வெற்றி ஹீரோவாக நடித்த பம்பர் படத்தில் ஹீரோயினாக நடித்திருந்தார். கேரளா லாட்டரியை மையமாக வைத்து எடுக்கப்பட்ட இப்படம் சுமாராக ஓடியது.

வெள்ளித்திரையில் அம்மணிக்கு கை கொடுக்காததால், தன்னை வாழ வைத்த இன்ஸ்டாகிராம் ரசிகர்களை மறக்காமல் தினமும் நான்கு மணிக்கு விதவிதமான போட்டோக்களை ஷேர் செய்வதை வழக்கமாக வைத்துள்ளார்.

இந்நிலையில் இன்று திருவண்ணாமலை கோவிலுக்கு சென்ற ஷிவானி பட்டுப்புடவையில் சும்மா தங்க தேர் போல வலம் வரும் வீடியோவை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவைப் பார்த்து பேன்ஸ் சொக்கிப் போனார்கள்.

(Visited 7 times, 1 visits today)
Avatar

MP

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

பொழுதுபோக்கு

ஆஸ்கர் விருதை தட்டிச் சென்ற நாட்டு நாட்டு பாடல் – ரசிகர்கள் மகிழ்ச்சி

ஆர்.ஆர்.ஆர் திரைப்படத்தில் இடம்பெற்ற நாட்டு நாட்டு பாடலுக்கு ஆஸ்கார் விருது கிடைத்துள்ளது. சிறந்த பாடல் பிரிவில் அந்த பாடல் ஆஸ்கார் விருது வென்றுள்ளது. சினிமா உலகின் மிக
பொழுதுபோக்கு

பாண்டியர்களின் ஆட்டம் ஆரம்பம் : யாத்திசை படத்தின் முதல் நாள் வசூல் விபரம்!

  • April 23, 2023
பாண்டியர்களின் வீரவரலாற்றை சொல்லும் யாத்திசை திரைப்படம் நேற்று திரையறங்குகளில் வெளியாகி நல்ல விமர்சனத்தை பெற்று வருகிறது. அறிமுக இயக்குனர் தரணி ராசேந்திரன் இயக்கத்தில் புது முகங்களான சேயோன்

You cannot copy content of this page

Skip to content