விளையாட்டு

2வது சூப்பர் ஓவரில் வெற்றி பெற்ற இந்தியா

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணி 3 டி20 போட்டியில் விளையாடியது. இதில், 2 போட்டியில் இந்தியா வெற்றிபெற்று தொடரை ஏற்கனவே கைப்பற்றி விட்டது.

இரு அணிகளுக்கும் இடையேயான கடைசி போட்டி பெங்களூருவில் இன்று நடைபெற்றது. இதில், டாஸ் வென்ற இந்தியா முதலில் பேட்டிங் தேர்வு செய்தது.

முதலில் பேட்டிங் செய்த இந்தியா 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 212 ரன்கள் குவித்தது.

இதையடுத்து, 213 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடின இலக்குடன் களமிறங்கிய ஆப்கானிஸ்தான் அணி அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தியது.

இறுதியில் ஆப்கானிஸ்தான் 20 ஓவர்கள் 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 212 ரன்கள் எடுத்தது. இதன் மூலம் ஆட்டம் ‘டை’ ஆனது.

இதனை தொடர்ந்து சூப்பர் ஓவர் முறையில் வெற்றி தீர்மானிக்கப்பட்டது. அதன்படி, சூப்பர் ஓவரில் முதலில் களமிறங்கிய ஆப்கானிஸ்தான் 1 ஓவரில் ஒரு விக்கெட் இழப்பிற்கு 15 ரன்கள் குவித்தது.

தொடர்ந்து களமிறங்கிய இந்தியா 1 ஓவரில் 15 ரன்கள் எடுத்தது. இதனால், சூப்பர் ஓவரும் டை ஆனது. இதையடுத்து, வெற்றியை தீர்மானிக்க 2வது சூப்பர் ஓவர் வீசப்பட்டது.

இதில், முதலில் பேட்டிங் செய்த இந்தியா 2வது சூப்பர் ஓவரில் 11 ரன்கள் எடுத்தது. இதையடுத்து, 6 பந்துகளில் 12 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய ஆப்கானிஸ்தான் முதல் 3 பந்துகளில் 1 ரன் மட்டுமே எடுத்து 2 விக்கெட்டுகளை இழந்தது.

இதனால், ஆப்கானிஸ்தானை 2வது சூப்பர் ஓவரில் 10 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்தியா அபார வெற்றிபெற்றது.

இந்த வெற்றியின் மூலம் ஆப்கானிஸ்தானை 3-0 என்ற புள்ளி கணக்கில் வீழ்த்தி டி20 தொடரை இந்தியா முழுமையாக கைப்பற்றியது.

ஆனாலும், 2 சூப்பர் ஓவர்கள் வரை பரபரப்பை ஏற்படுத்திய இந்தியாவுக்கு மரண பயம் காட்டிய ஆப்கானிஸ்தான் அணிக்கு அனைத்து தரப்பும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

(Visited 2 times, 1 visits today)

Prasu

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

இந்தியா விளையாட்டு

ராஜஸ்தான் வெற்றிபெற 155 ரன்களை இலக்காக நிர்ணயித்த லக்னோ

10 அணிகள் பங்கேற்றுள்ள 16-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. ஜெய்ப்பூரில் 26-வது லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ், லக்னோ சூப்பர்
இந்தியா விளையாட்டு

10 ரன்கள் வித்தியாசத்தில் லக்னோ அணி வெற்றி

10 அணிகள் பங்கேற்றுள்ள 16-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. ஜெய்ப்பூரில் நடைபெற்ற 26வது லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ், லக்னோ

You cannot copy content of this page

Skip to content