பொழுதுபோக்கு

குட் பேட் அக்லி படத்தில் அஜித் செய்திருக்கும் அந்த ரகசியத்தை வெளியிட்டார் தேவிஸ்ரீ பிரசாத்

அஜித் நடிப்பில் கடைசியாக வெளியான துணிவு திரைப்படம் சூப்பர் ஹிட்டானது. அந்தப் படத்தில் நடித்துகொண்டிருந்தபோதே தன்னுடைய 62ஆவது படத்தில் கமிட்டானார். அந்தப் படத்தை மகிழ் திருமேனி இயக்குகிறார்.

படத்துக்கு விடாமுயற்சி என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் குட் பேட் அக்லி படத்திலும் நடிக்கிறார் அஜித்.

இதுவரை படத்திலிருந்து இரண்டு போஸ்டர்கள் வெளியாகியிருக்கின்றன. மேலும் முதல் ஷெட்யூல் ஷூட்டிங்கும் நடந்து முடிந்திருப்பதாக கூறப்படுகிறது. இதில் ஸ்ரீலீலா ஹீரோயினாக நடிக்கிறார் என்றும், நயன்தாராவை நடிக்க வைக்கவும் பேச்சுவார்த்தைகள் நடந்துவருவதாகவும் கூறப்படுகிறது.

படமானது அடுத்த வருடம் ரிலீஸாகும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டுவிட்டது. அடுத்த ஷெட்யூலுக்காக படக்குழு ஜப்பான் செல்லலாம் என்றும்; அந்த ஷூட்டிங் ஆகஸ்ட் மாதம் தொடங்கலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் படத்தில் எஸ்.ஜே.சூர்யா முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கவிருப்பதாகவும் சமீபத்தில் தகவல் ஒன்று வெளியாகியிருக்கிறது.

இப்படத்துக்கு தேவிஸ்ரீ பிரசாத் இசையமைத்திருக்கிறார். இந்நிலையில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட அவரிடம் படம் குறித்து கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், குட் பேட் அக்லி படத்தில் அஜித் சார் மாஸாக ஒரு நடனம் ஆடியிருக்கிறார் என்று குறிப்பிட்டிருக்கிறார்.

பொதுவாக அஜித்துக்கு நடனம் வராது என்ற விமர்சனம் காலங்காலமாக இருக்கிறது, இப்போது தேவிஸ்ரீ பிரசாத் இப்படி கூறியிருப்பதால் அந்த விமர்சனத்தை இதில் ஏகே உடைப்பார் என்று அஜித்தின் ரசிகர்கள் கூறிவருகிறார்கள்.

(Visited 4 times, 1 visits today)
Avatar

MP

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

பொழுதுபோக்கு

ஆஸ்கர் விருதை தட்டிச் சென்ற நாட்டு நாட்டு பாடல் – ரசிகர்கள் மகிழ்ச்சி

ஆர்.ஆர்.ஆர் திரைப்படத்தில் இடம்பெற்ற நாட்டு நாட்டு பாடலுக்கு ஆஸ்கார் விருது கிடைத்துள்ளது. சிறந்த பாடல் பிரிவில் அந்த பாடல் ஆஸ்கார் விருது வென்றுள்ளது. சினிமா உலகின் மிக
பொழுதுபோக்கு

பாண்டியர்களின் ஆட்டம் ஆரம்பம் : யாத்திசை படத்தின் முதல் நாள் வசூல் விபரம்!

  • April 23, 2023
பாண்டியர்களின் வீரவரலாற்றை சொல்லும் யாத்திசை திரைப்படம் நேற்று திரையறங்குகளில் வெளியாகி நல்ல விமர்சனத்தை பெற்று வருகிறது. அறிமுக இயக்குனர் தரணி ராசேந்திரன் இயக்கத்தில் புது முகங்களான சேயோன்

You cannot copy content of this page

Skip to content