துலிப் சமரவீரவுக்கு 20 ஆண்டுகள் கிரிக்கெட் தடை
அவுஸ்திரேலியாவில் கிரிக்கெட் பயிற்றுவிப்பாளராக பணியாற்றிய இலங்கையின் முன்னாள் டெஸ்ட் கிரிக்கெட் வீரர் துலிப் சமரவீரவுக்கு கிரிக்கெட் அவுஸ்திரேலியா இருபது வருட தடை விதித்துள்ளது.
கிரிக்கெட் ஆஸ்திரேலியாவின் நடத்தை விதிகளை மீறியதாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
அதன்படி, கிரிக்கெட் அவுஸ்திரேலியா, எந்த மாநிலம் அல்லது பிற கிரிக்கெட் சங்கம் அல்லது எந்த பிக் பாஷ் அணியிலும் அவர் எந்த பதவியையும் வகிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
விக்டோரியா மாநில கிரிக்கெட் கவுன்சிலில் பயிற்சியாளராக பணிபுரிந்த போது, ”தகாத நடத்தை” குற்றஞ்சாட்டப்பட்டதாக அந்நாட்டு கிரிக்கெட் அதிகாரிகளின் விசாரணையில் தெரியவந்துள்ளது.
பின்னர் அவர் மீதான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டது.
(Visited 5 times, 1 visits today)