சர்வதேச குழந்தைகளுக்கான அமைதிப் பரிசை வென்ற 17 வயதான ஆஃப்கானியச் சிறுமி
சொந்த நாட்டில் பொது இடத்தில் பேச அனுமதி மறுக்கப்பட்ட 17 வயது ஆப்கானியச் சிறுமி, தன் நாட்டுச் சிறுமிகளின் உரிமைகளுக்குப் போராடியதற்காக அனைத்துலக விருதை வென்றுள்ளார். நிலா இப்ராஹிமி, குழந்தைகளுக்கான அனைத்துலக அமைதிப் பரிசை செவ்வாய்க்கிழமை (நவம்பர் 19) வென்றுள்ளார். இதற்குமுன் பருவநிலை ஆர்வலரான கிரேத்தா தன்பர்க், பெண் குழந்தைகளின் கல்விக்குப் பிரசாரம் செய்த மலாலா யூசஃப்சாய் போன்றோர் இத்தகைய விருதைப் பெற்றுள்ளனர். ஆப்கானிஸ்தானில் 2021ஆம் ஆண்டு ஆட்சியைக் கைப்பற்றிய தலிபான் தரப்பு, பெண்களின் பேச்சுரிமையை ஒடுக்கியுள்ள […]