புதுக்கோட்டை அரச மகப்பேறு வைத்தியசாலையில் 247 குழந்தைகள் பலி
புதுக்கோட்டையில் ராணியார் அரசு மகப்பேறு வைத்தியசாலையில், கடந்த 21 மாதங்களில் 247 குழந்தைகள் உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் குறித்த வைத்தியசாலையில், உயர் அதிகாரி தெரிவிக்கையில், தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் ஒருவர் கேட்டிருந்ததற்கு பதில் அளிக்கப்பட்டதில் கடந்த 21 மாதங்களில் 247 குழந்தைகள் இறந்ததாக கூறப்பட்டிருந்தது. இந்த குழந்தைகள் சிகிச்சை பலன் இல்லாமல், சிகிச்சை சரியில்லாமல் இறக்கவில்லை. குறை பிரசவத்தில் பிறந்த குழந்தைகள், எடைக்குறைவு, மூச்சுத்திணறல், பிறவி குறைபாடு, நோய் பாதிப்பு உள்ளிட்ட காரணங்கள் […]