வட அமெரிக்கா

கனடாவில் சென் லோரன்ஸ் நதியில் மீன்பிடிக்கச் சென்ற சிறார்களுக்கு நேர்ந்த கதி

  • June 4, 2023
  • 0 Comments

கனடாவில் மீன்பிடிக்கச் சென்ற நான்கு பாடசாலை மாணவர்கள் நீரில் அடித்துச்செல்லப்பட்டு உயிரிழந்துள்ளனர். கனடாவின் கியூபெக் மாகாணத்தின் சென் லோரன்ஸ் நதியில் மீன்பிடித்துக் கொண்டிருந்த சிறுவர்களே இந்த கோர விபத்தில் சிக்கியுள்ளனர். மீன்பிடித்துக் கொண்டிருந்த 11 பேர் நீரில் அடித்துச் செல்லப்பட்டுள்ளனர்.இதில் ஆறு பேர் மீட்கப்பட்டதாகவும் ஐந்து பேர் காணாமல் போயிருந்ததாகவும் தெரிவிக்கப்படுகின்றது. பத்து வயதுக்கும் மேற்பட்ட சிறுவர்களே சம்பவத்தில் பாதிக்கப்பட்டனர்.இவ்வாறு காணாமல் போயிருந்த சிறுவர்களில் நான்கு பேரை மீட்புப் பணியாளர்கள் மீட்டுள்ளனர்.எனினும் அந்த நான்கு பேரும் உயிரிழந்து […]

ஐரோப்பா

ரஷ்யா எதிர்கால அறிஞர்கள், கலைஞர்களை அழித்துள்ளது : போரில் உயிரிழந்த குழந்தைகள் குறித்து செலன்ஸ்கி உருக்கம்!

  • June 4, 2023
  • 0 Comments

டினிப்ரோவில் நடத்தப்பட்ட செல் தாக்குதலில் லிசா என்ற பெண் குழந்தை உயிரிழந்துள்ளார். இதனையடுத்து போரில் உயிரிழந்த குழந்தைகள் குறித்து புள்ளிவிபர தகவல்களை உக்ரைன் அதிபர் செலன்ஷ்கி வெளியிட்டுள்ளார். இதன்படி உக்ரைனில் நடத்தப்பட்ட தாக்குதல்களால் இதுவரை 500 குழந்தைகள் பலியாகியுள்ளதாக செலன்ஸ்கி குறிப்பிட்டுள்ளார். ரஷ்யா எதிர்கால அறிஞர்கள், கலைஞர்கள் மற்றும் விளையாட்டு சாம்பியன்களின்” உயிரைப் பறித்ததாகக் அவர் குற்றம் சாட்டியுள்ளார். “ரஷ்ய ஆயுதங்கள்  ஒவ்வொரு நாளும் உக்ரேனிய குழந்தைகளின் உயிரைப் பறித்து அழித்துக் கொண்டே இருக்கிறது”, எனவும்,  தொடர்ந்து […]

இலங்கை

இலங்கையில் குழந்தைகளிடையே வேகமாக பரவும் நோய் குறித்து எச்சரிக்கை!

  • June 4, 2023
  • 0 Comments

சமீபகாலமாக குழந்தைகளிடம் தோல் நோய்கள் அதிகரித்து வருவது குறித்து மருத்துவர்கள் கவலை தெரிவித்துள்ளனர். இது தொடர்பில் கருத்து தெரிவித்த சிறுவர் விசேட வைத்திய நிபுணர் டொக்டர் தீபால் பெரேரா, நாட்டில் அதிகரித்துள்ள வெப்பம் காரணமாக தோல் நோய்கள் அதிகரித்து வருவதாக கூறினார். இது குழந்தைகளுக்கு கடுமையான நீரழிவை ஏற்படுத்துவதாக தெரிவித்த அவர்,   பிள்ளைகள் தொடர்பில் பெற்றோர்கள் அவதானமாக இருக்குமாறும் கேட்டுக்கொண்டுள்ளார்.

இலங்கை

ஜனாதிபதி வெளியிட்டுள்ள அதிரடி அறிவிப்பு

  • June 4, 2023
  • 0 Comments

பணமோசடியை தடுப்பது மற்றும் பயங்கரவாதத்திற்கு நிதியளிப்பதை எதிர்த்துப் போராடுவது தொடர்பான இலங்கையின் அடுத்த அணுகுமுறை விரைவில் தொடங்கப்படும் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார். நாட்டில் வர்த்தகம் செய்வதற்கான இலகுவான தரப்படுத்தல் மற்றும் வெளிநாட்டு முதலீடுகளை ஈர்ப்பதற்கு இது நேரடி பாதிப்பை ஏற்படுத்தும் என்பதால் இந்த முடிவு மிகவும் முக்கியமானது என ஜனாதிபதி வலியுறுத்தினார். அவ்வாறு செய்யத் தவறினால், மூலோபாய குறைபாடுகள் உள்ள நாடாக இலங்கை பட்டியலிடப்படும் அபாயம் உள்ளதாகவும், அது நாட்டின் அபிவிருத்திக்கு பாதகமான பாதிப்பை […]

ஐரோப்பா

‘ரஷ்யா ஒரு பயங்கரவாத நாடு’ கடும் கண்டனம் தெரிவித்த ஜெலன்ஸ்கி

  • June 4, 2023
  • 0 Comments

ரஷ்யா ஒரு பயங்கரவாத நாடு என்று விமர்சித்து தனது கடும் கண்டனத்தை உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி பதிவு செய்துள்ளார். இந்த நிலையில் உக்ரைனின் மத்திய நகரமான டினிப்ரோவில் ரஷ்ய விமானப்படை தாக்குதலில் 5 குழந்தைகள் உட்பட 20 பேர் காயமடைந்தமை தொடர்பில் தனது டெலிகிராம் பதிவில் கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு தெரிவித்தார்.மேலும், டினிப்ரோ நகரின் பிராந்திய ஆளுநர் Serhiy Lysak தாக்குதலைத் தொடர்ந்து நிலைமைகள் குறித்து கருத்து வெளியிட்ட போது, “3 குழந்தைகள் கவலைக்கிடமாக […]

பொழுதுபோக்கு

தனுஷ் அவசரமாக மும்பை சென்றது ஏன்! இரகசியம் கசிந்தது

  • June 4, 2023
  • 0 Comments

கோலிவுட், பாலிவுட் முதல் ஹாலிவுட் வரை பல்வேறு மொழி படங்களில் நடித்து வருகிறார் தனுஷ். தனுஷ் சமீபத்தில் மும்பையில் வித்தியாசமான கெட்டப்பில் காணப்பட்டார், மேலும் அவரது இந்த புகைப்படங்கள் சமூக ஊடகங்களில் வைரலாகின. தனுஷ் தனது அடுத்த பாலிவுட் படத்தை அறிவிக்கவே மும்பை சென்றுள்ளார் என தகவல்கள் கசிந்துள்ளன. மேலும் ‘ராஞ்சனா’ மற்றும் ‘அத்ரங்கி ரே’ படங்களுக்குப் பிறகு மூன்றாவது முறையாக இயக்குனர் ஆனந்த் எல் ராயுடன் மீண்டும் பாலிவுட் படத்தில் இணைவதாக கூறப்படுகிறது. தனுஷ் மும்பையில் […]

வட அமெரிக்கா

கலிபோர்னியன் கடற்கரையில் இரு பெண்களை உயிரோடு விழுங்கிய திமிங்கலம் (வீடியோ)

  • June 4, 2023
  • 0 Comments

அமெரிக்காவின் கலிபோர்னியாவில் உள்ள சான் லூயிஸ் ஒபிஸ்போ விரிகுடா கடற்கரையில் நீந்திக் கொண்டிருந்த இரண்டு பெண்களை திமிங்கலம் ஒன்று அப்படியே விழுங்கிய காட்சிகள் இணையத்தில் வேகமாக பரவி வருகிறது. அமெரிக்காவின் கலிபோர்னியாவில் உள்ள சான் லூயிஸ் ஒபிஸ்போ விரிகுடா கடற்கரையில் திங்கட்கிழமை காலை ஜூலி மக்சோர்லி மற்றும் லிஸ் கோட்ரியல் ஆகியோர் கயாக்கிங் எனப்படும் நீச்சல் விளையாட்டில் ஈடுபட்டு இருந்தனர்.அப்போது எதிர்பாராத விதமாக திமிங்கலத்தின் உணவு உண்ணும் பகுதிக்குள் சென்று விட்ட பெண்களை திமிங்கலம் அப்படியே தனது […]

இலங்கை

யாழ்.பல்கலைக்கழக மோதல்; 31 மாணவர்களுக்கு உள்நுழையத் தடை

  • June 4, 2023
  • 0 Comments

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக முகாமைத்துவ கற்கைகள் மற்றும் வணிக பீடத்தில் மாணவர் குழுக்களுக்கிடையில் இடம்பெற்ற மோதல் சம்பவங்கள் தொடர்பில் 31 மாணவர்களுக்கு உள்நுழைவுத் தடை விதிக்கப்பட்டுள்ளது. சம்பவத்துடன் சம்பந்தப்பட்டவர்கள் என அடையாளப்படுத்தப்பட்ட இரண்டாம் வருட மாணவர்கள் 16 பேருக்கும், மூன்றாம் வருட மாணவர்கள் 15 பேருக்கும் கல்விச் செயற்பாடுகளில் ஈடுபடுவதற்கும், விடுதி உட்பட பல்கலைக் கழகத்தின் எந்தவொரு பகுதியினுள் நுழைவதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. முகாமைத்துவ கற்கைகள் மற்றும் வணிக பீட மாணவர்களின் “மாகோஸ்” வார நிகழ்வுகள் கடந்த 31 […]

தமிழ்நாடு

மன உளைச்சலின் மிகுதியால் 16 வயது மாணவி எடுத்த விபரீத முடிவு!

  • June 4, 2023
  • 0 Comments

தமிழகத்தின் வேலூர் குடியாத்தம் அருகே தந்தையால் 16 வயது சிறுமி ஒருவர் கடிதம் எழுதிவைத்துவிட்டு தற்கொலை செய்து கொணட சோக சம்பவம் நடந்துள்ளது. சின்னராஜா குப்பம் பகுதியை சேர்ந்த சிறுமி விஷ்ணு பிரியா, இவரது தந்தை கூலித்தொழிலாளி.குடிக்கு அடிமையான விஷ்ண பிரியாவின் தந்தை அடிக்கடி குடித்துவிட்டு வந்து வீட்டில் சண்டையிட்டுள்ளார்.இதனால் மன உளைச்சலுக்கு ஆளான விஷ்ண பிரியா, குடிக்க வேண்டாம் என தந்தையிடம் பலமுறை கேட்டுக்கொண்டார். எனினும் தந்தையால் குடிப்பழக்கத்திலிருந்து மீள முடியவில்லை, ஒரு கட்டத்தில் என்ன […]

ஆஸ்திரேலியா

ஆஸ்திரேலியாவில் கடற்பகுதியில் நின்ற படகை சோதனையிட்ட பொலிஸாருக்கு காத்திருந்த அதிர்ச்சி!

  • June 4, 2023
  • 0 Comments

ஆஸ்திரேலியாவி ராட்னெஸ்ட் தீவுக்கு அருகே ப்ரீமண்ட் கடற்பகுதியில் படகு ஒன்று நின்று கொண்டிருந்தது. கடலோர பொலிஸார் அங்கு சென்று விசாரித்தனர். அப்போது என்ஜின் பழுதாகி இருப்பதால் படகு இங்கு நின்று கொண்டிருப்பதாக அவர்கள் தெரிவித்தனர். ஆனால் அவர்கள் மீது சந்தேகம் அடைந்த பொலிஸார் அந்த படகில் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அங்கிருந்த தண்ணீர் தொட்டியில் சுமார் 30 பைகள் காணப்பட்டன. அதனை பிரித்து பார்த்தபோது 800 கிலோவுக்கும் அதிகமான கொக்கைன் போதைப்பொருள் இருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தனர். இதனையடுத்து […]

Skip to content