போரை ஆதரிப்பதற்காக ரஷ்யர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அறிவித்தல்!
போரை ஆதரிப்பதற்காக ரஷ்யர்கள் வாரத்தில் ஆறு நாள் வேலை செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக இங்கிலாந்து பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது. இது குறித்து கிரெம்ளினிடம் மனு கொடுத்துள்ளதாகவும் இங்கிலாந்து பாதுகாப்பு அமைச்சகம் மேலும் கூறியுள்ளது. போரை ஆதரிப்பதற்காக ரஷ்யர்கள் தீவிரமாக தியாகங்களைச் செய்ய ஊக்குவிக்கப்படுகிறார்கள், எனத் தெரிவிக்கப்படுவதுடன், குடிமக்கள் ஒவ்வொரு நாளும் வெடிமருந்து தொழிற்சாலைகளில் கூடுதலாக இரண்டு மணிநேரம் வேலை செய்ய பணிக்கப்படுகிறார்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.