இலங்கை

இலங்கையில் உள்ளூராட்சி மன்றத் தேர்தலை நடத்துமாறு அமெரிக்கா கோரிக்கை

  • April 10, 2023
  • 0 Comments

இலங்கையில் தொடர்ந்தும் காலம் தாழ்த்தாமல் சுதந்திரமானதும் நீதியானதுமான உள்ளூராட்சி மன்றத் தேர்தலை நடத்துவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இலங்கை அரசாங்கத்திடம் அமெரிக்க செனட் சபையின் வௌியுறவு குழு இது தொடர்பில் வலியுறுத்தியுள்ளது. இலங்கை மக்களின் குரலை நசுக்குவதற்கு மேற்கொள்ளப்படும் எந்தவொரு முயற்சியும் ஜனநாயக விரோத செயற்பாடு என ட்விட்டர் செய்தியூடாக வலியுறுத்தப்பட்டுள்ளது. இதனூடாக இலங்கை மக்களின் உரிமை மீறப்படுவதாக அமெரிக்க செனட் சபையின் வௌியுறவு குழு சுட்டிக்காட்டியுள்ளது.

இலங்கை

கட்டுநாயக்க விமான நிலையத்தில் சிக்கிய யுவதி – சோதனையிட்டவர்களுக்கு காத்திருந்த அதிர்ச்சி

  • April 10, 2023
  • 0 Comments

கட்டுநாயக்க விமான நிலையத்தின் வருகை முனையத்தில் வைத்து யுவதியொருவர் கைது செய்யப்பட்டுள்ளார். நேற்று காலை குறித்த யுவதி கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 23 கோடி ரூபா பெறுமதியான கொக்கெய்ன் போதைப்பொருளுடன் 26 வயதான பொலிவியப் பெண் கைது செய்யப்பட்டதாக சுங்க போதைப்பொருள் கட்டுப்பாட்டுப் பிரிவின் அதிகாரிகள் தெரிவித்தனர். இவர் நேற்று டுபாயில் இருந்து எமிரேட்ஸ் விமானத்தில் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளார். கொண்டு வரப்பட்டுள்ள கொக்கெய்ன் கரைசலில் கொக்கெய்ன் போதைப்பொருளின் செறிவு அதிகமாக காணப்படுவதாக தெரிவிக்கப்படுவதாக சுங்க […]

இலங்கை

ஜனாதிபதி ரணிலை கொலை செய்ய சதி? பொலிஸார் வெளியிட்ட தகவல்

  • April 10, 2023
  • 0 Comments

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை கொலை செய்ய சதித்திட்டம் தீட்டப்பட்டுள்ளதாக வெளியான செய்தி நிராகரிக்கப்பட்டுள்ளது. அதுதொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் வெளியான தகவலினை பொலிஸ் தலைமையகம் மறுத்துள்ளது. ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மீதான கொலை சதி முயற்சி தொடர்பில் குற்றப்புலனாய்வு திணைக்களம் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக ஊடகமொன்றில் செய்தி வெளியாகியிருந்தது. அரசியல் கட்சியொன்றுடன் தொடர்புடைய குழுவொன்று, சில தினங்களுக்கு முன்னர் வெளிநாடொன்றில் இந்த கொலைச் சதித்திட்டம் தொடர்பில் கலந்துரையாடியுள்ளதாக குற்றப் புலனாய்வு திணைக்களத்திற்கு தகவல் கிடைத்திருந்ததாகவும் கூறப்பட்டது. எனினும் இந்த செய்தியில் […]

இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

  • April 8, 2023
  • 0 Comments

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பது  குறித்து கவலை வெளியிட்டுள்ளது. டிஜிட்டல் தளங்களில் பாலின வன்முறைகளை கையாள்வதற்கு பயனுள்ள மற்றும் திறமையான புகார் பொறிமுறைகள் அவசியம் என வலியுறுத்தப்பட்டுள்ளதுடன், டிஜிட்டலை மையமாக கொண்ட பாலின வன்முறை குறித்து  விழிப்புணபுர்வை ஏற்படுத்தவேண்டியது அவசியம் எனவும் தெரிவித்துள்ளது. டிஜிட்டல் தளங்களை எவ்வாறு பாதுகாப்பாக பயன்படுத்துவது என […]

செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

  • April 8, 2023
  • 0 Comments

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி உள்ளிட்ட தவிர்க்க முடியாத பல்வேறு காரணிகளால் காலம் தாழ்த்தப்பட்ட உள்ளூராட்சி மன்றத் தேர்தலை எதிர்வரும் ஏப்ரல் 25ஆம் திகதி நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு மேலும் குறிப்பிட்டுள்ளது. உள்ளூராட்சி மன்றத் தேர்தலை நடத்துவதற்கான தினத்தை தீர்மானிப்பதற்காக தேர்தல் ஆணைக்குழு நேற்று மீண்டும் கூடிய நிலையில், இந்த தீர்மானத்தை அறிவித்தது.

செய்தி

பாணின் விலை குறைப்பு!

  • April 8, 2023
  • 0 Comments

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை பேக்கரி சங்கத்தின் தலைவர் என்.கே.ஜயவர்தன தெரிவித்துள்ளார். இதேவேளை  ஏனைய பேக்கரி பொருட்களின் விலைகள்  தொடர்பில் இதுவரை தீர்மானம் எடுக்கவில்லை எனவும்  அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

  • April 8, 2023
  • 0 Comments

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா ஜோர்ஜியேவா தெரிவித்துள்ளார். சீனாவின் எக்ஸிம் வங்கியிடமிருந்து நிதி உறுதிக்கடிதம் நேற்றிரவு (திங்கட்கிழமை) கிடைத்ததையடுத்து நானும் மத்திய வங்கி ஆளுநரும் கையெழுத்திட்ட இணக்கப்பாட்டுக்கடிதம் சர்வதேச நாணய நிதியத்துக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது என நேற்று முன்தினம் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பாராளுமன்றத்தில் அறிவித்தார். இந்நிலையில் இலங்கைக்கான உதவிச்செயற்திட்டத்திற்கு அனுமதியளிப்பது தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள […]

You cannot copy content of this page

Skip to content