இலங்கை கிரிக்கெட் வீரர் தனஞ்சய டி சில்வாவின் சகோதரர் மீது தாக்குதல்

கிரிக்கெட் வீரர் தனஞ்சய டி சில்வாவின் சகோதரர் சாவித்ர சில்வா மீது கூர்மையான ஆயுதத்தால் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
பாதாள உலகத்துடன் தொடர்புடையதாகக் கூறப்படும் ரத்மலானே சுத்தா என்றும் அழைக்கப்படும் இந்திக சுரங்க சொய்சா மேலும் சிலருடன் இணைந்து மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
தாக்குதலில் காயமடைந்த சாவித்ர சில்வா, மொரட்டுவை லுனாவ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
காயமடைந்த நபரின் நிலைமை மோசமாக இல்லை என்றும் தெரிவிக்கப்படுகிறது.
சம்பவம் தொடர்பில் கல்கிசை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
(Visited 46 times, 1 visits today)