மத்திய கிழக்கு

துருக்கி நாட்டில் அதிபர் தேர்தல்..

  • May 28, 2023
  • 0 Comments

துருக்கி நாட்டில் அதிபராக ரீசெப் தயீப் எர்டோகன் பதவி வகித்து வருகிறார். நீண்ட காலம் அந்த பதவியில் பதவி வகித்து வரும் சூழலில், 600 இடங்களை கொண்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அதிபரை தேர்ந்தெடுக்கும் தேர்தல் இன்று தொடங்கி நடந்து வருகிறது. எர்டோகனை எதிர்த்து எதிர்க்கட்சி வேட்பாளராக கெமல் கிலிக்டாரொகுலு போட்டியிடுகிறார். நாட்டில் மக்கள் வாக்களிப்பதற்காக, மொத்தம் 1 லட்சத்து 91 ஆயிரத்து 885 வாக்கு பெட்டிகள் அமைக்கப்பட்டு உள்ளன.இன்று மாலை 5 மணிவரை மக்கள் வாக்களிக்கும் […]

பொழுதுபோக்கு

எதிர்பார்த்ததை விட மகத்தான வெற்றி!! வித்தியாசமான முறையில் கொண்டாடிய விஜய் ஆண்டனி

  • May 28, 2023
  • 0 Comments

தமிழ் திரையுலகில் முன்னணி இசையமைப்பாளராக வலம் வந்த விஜய் ஆண்டனி, தற்போது முழுநேர நடிகராக மாறிவிட்டார். இவர் நடிப்பில் அண்மையில் ரிலீஸ் ஆன திரைப்படம் பிச்சைக்காரன் 2 மூலம் இயக்குனராகவும் அவதாரம் எடுத்தார். உலகம் முழுவதும் 1500க்கும் மேற்பட்ட திரைகளில் இப்படம் வெளியானது. பிச்சைக்காரன் படத்தின் முதல் பாகத்திற்கு இணையாக இப்படம் இல்லாவிட்டாலும், பேமிலி ஆடியன்ஸை கவரும் விதமாக கதையம்சம் அமைந்திருந்ததால், கலவையான விமர்சனங்கள் வந்தாலும், இப்படம் பாக்ஸ் ஆபிஸில் வசூல் மழை பொழிந்து வருகிறது. குறிப்பாக […]

பொழுதுபோக்கு

பயங்கர விபத்தில் சிக்கிய இளம் நடிகர்! அடுத்த வாரம் திருமணமாம்….

  • May 28, 2023
  • 0 Comments

தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வரும் சர்வானந்த், நேற்று இரவு கார் விபத்து ஒன்றில் சிக்கியுள்ளார். இந்த செய்தி டோலிவுட் பிரபலங்கள் மற்றும் சர்வானந்த் ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இந்த விபத்தில் சர்வானந்திற்கு லேசான காயம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இன்று காலை நடிகர் சர்வானந்த் ஐதராபாத்தில் உள்ள ஃபிலிம் நகர் சந்திப்பில் ரேஞ்ச் ரோவர் காரில் சென்று கொண்டிருந்த போது இந்த விபத்து நடந்ததாக தெரிகிறது. கார் விபத்தில் சிக்கியதை அடுத்து அங்கிருந்தவர்கள் உடனடியாக சர்வானந்தை […]

ஆசியா

ஆப்கானிஸ்தான், பாகிஸ்தானில் அடுத்தடுத்து கடுமையான நிலநடுக்கம்

  • May 28, 2023
  • 0 Comments

ஆப்கானிஸ்தான் மற்றும் தஜிகிஸ்தான் எல்லை பகுதியில், இன்று காலை கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டு உள்ளது. இது பாகிஸ்தான் நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் உணரப்பட்டு உள்ளது. இந்நிலநடுக்கம் காலை 10.50 மணியளவில் ரிக்டர் அளவுகோலில் 6.0 அளவில் ஏற்பட்டு உள்ளது. அது 223 கி.மீ. ஆழத்தில் மையம் கொண்டு இருந்தது என பாகிஸ்தான் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. பாகிஸ்தானின் கைபர் பக்துன்குவா மாகாணத்தின் பல்வேறு மாவட்டங்களிலும் நிலநடுக்கம் உணரப்பட்டு உள்ளது. இதுதவிர, தலைநகர் இஸ்லாமாபாத் மற்றும் ராவல்பிண்டி […]

ஐரோப்பா விளையாட்டு

இன்டர்நேஷனக்ஸ் டி ஸ்ட்ராஸ்பர்க் போட்டியில் வெற்றிப்பெற்ற உக்ரைன் வீராங்கணை!

  • May 28, 2023
  • 0 Comments

உக்ரேனிய டென்னிஸ் வீராங்கனையான எலினா ஸ்விடோலினா தனது பரிசுத் தொகையை உக்ரைனின் குழந்தைகளுக்கு நன்கொடையாக அளித்துள்ளார். பிரான்சில் நடைபெறும் இன்டர்நேஷனக்ஸ் டி ஸ்ட்ராஸ்பர்க் போட்டியில் தனது பரிசுத் தொகையை தனது தாய்நாட்டில் உள்ள குழந்தைகளுக்கு ஆதரவாக வழங்குவதாக அவர் தெரிவித்துள்ளார். ஏழாவது முறையாக போட்டியில் பங்கேற்ற அவர்,  6-2,  6-3 என்ற கணக்கில் ரஷ்ய வீராங்கனையான அன்னா பிளிங்கோவாவை தோற்கடித்து தனது 17வது WTA பட்டத்தை வென்றார். 28 வயதான அவர் தனது சொந்த நாட்டின் அவலநிலையை […]

வட அமெரிக்கா

பெற்றோருடன் சேர்த்து வீட்டிற்கு தீ வைத்த 7 வயது சிறுவன்: மாற்றாந்தந்தை கைது

  • May 28, 2023
  • 0 Comments

பெற்றோர் வீட்டில் தூங்கி கொண்டு இருக்கும் போதே வீட்டுக்கு தீ வைத்து கொளுத்திய 7 வயது சிறுவன் ஒருவன் பொலிஸாரால் முதல் தர தீவைப்பு குற்றத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளான். அமெரிக்காவில் வடமேற்கு சார்லஸ்டன் பகுதியில் இருந்து 40 மைல் தொலைவில் உள்ள ஜாக்சன் கவுண்டி என்ற பகுதியில் இந்த சம்பவம் அரங்கேறியுள்ளது.இந்த சம்பவம் தொடர்பாக பொலிஸார் தெரிவித்துள்ள தகவலில், 7 வயது சிறுவன் உள்நோக்கத்தோடு வேண்டுமென்றே வீட்டிற்கு தீ வைத்துள்ளான் என்று தெரிவித்துள்ளனர். அத்துடன் சிறுவன் […]

ஐரோப்பா

ரஷ்யாவிற்கு ஆயுத விநியோகம் செய்த தென்னாபிரிக்கா : விசாரணைகள் ஆரம்பம்!

  • May 28, 2023
  • 0 Comments

ரஷ்யாவிற்கு ஆயுதங்களை அனுப்பியதாக அமெரிக்கா சுமத்தியுள்ள குற்றச்சாட்டுக்களை விசாரிக்கவுள்ளதாக தென்னாப்பிரிக்கா அறிவித்துள்ளது. கடந்த ஆண்டு கேப்டவுன் அருகே உள்ள கடற்படை தளத்தில் இருந்து ரஷ்ய கப்பல் ஒன்று ரஷ்யாவுக்கான ஆயுதங்களை கொண்டு சென்றதாக அமெரிக்கா குற்றம் சாட்டியுள்ளது. இதனை தென்னாப்பிரிக்கா மறுத்த நிலையில் இது குறித்து விசாரணைகளை முன்னெடுக்க அந்நாட்டின் அதிபர் குழுவொன்றை நியமித்தார். இந்தக் கூற்றுக்கள் இந்த மாத தொடக்கத்தில் இரு நாடுகளுக்கும் இடையே இராஜதந்திர ரீதியில் விரிசலை  உண்டாக்கியது. தென்னாப்பிரிக்க அரசாங்கம் உக்ரைனில் நடக்கும் […]

பொழுதுபோக்கு

ஐஸ்வர்யா ராயின் நடிப்பு குறித்து மனம் திறந்து உண்மையை கூறிய அபிஷேக் பச்சன்!

  • May 28, 2023
  • 0 Comments

நீண்ட இடைவெளிக்குப் பிறகு, ஐஸ்வர்யா ராய் ‘பொன்னியின் செல்வன்’ திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் தனது மறுபிரவேசத்தில் அடியெடுத்து வைத்தார். இந்த திரைப்படம் மிகப்பெரிய பிளாக்பஸ்டர் ஆனது மற்றும் படத்தின் இரண்டாம் பாகம் ஏப்ரல் 28, 2023 அன்று திரையரங்குகளில் வெளியிடப்பட்டது. இதில் ஐஸ்வர்யா ராய் தனது நடிப்பு திறமைக்காக பலரால் விமர்சன ரீதியாக பாராட்டப்பட்டார். அந்த வகையில் தற்போது ஐஸ்வர்யா ராயின் கணவரும் நடிகருமான அபிஷேக் பச்சனிடமிருந்து ஏராளமான பாராட்டுக்களையும் ஆதரவையும் அவர் பெற்றார். சமூக […]

உலகம்

பசிபிக் ஆழ்கடலில் கண்டுபிடிக்கப்பட்ட புதிய இனங்கள்

  • May 28, 2023
  • 0 Comments

மெக்ஸிகோ மற்றும் ஹவாய் பகுதிகளுக்கிடையே அமைந்துள்ள பசிபிக் பெருங்கடலில் ஒரு பெரிய பகுதியானது கனிய வளங்களை கொண்ட பகுதியாகக் காணப்படுகின்றது. கிளாரியன் கிளிப்பர்டன் என அறியப்படும் குறித்த பகுதியை ஆராய்ந்து அங்கு நடைபறும் பல்லுயிர்ப் பெருக்கத்தை விஞ்ஞானிகள் பட்டியலிட்டுள்ளனர். “கம்மி அணில்” என அழைக்கப்படும் அந்த வகையில் சைக்ரோபோட்ஸ் வாக்கிகாடா என்ற நீண்ட வால் மற்றும் ஒரு வகையான ஜெலி இனிப்பை ஒத்திருக்கும் உயிரினம் கண்டறியப்பட்டுள்ளது.இந்த இனமானது ஆம்பெரிமா என அழைக்கப்பட்டாலும் ஆய்வின் போது பல உயிரினங்கள் […]

இலங்கை

இலங்கையின் பல பிரதேசங்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!

  • May 28, 2023
  • 0 Comments

நாட்டின் பல பிரதேசங்களில் இன்று (28)  வெப்பமான காலநிலை நிலவும் என வளிமண்டலவியல் திணைக்களம்  தெரிவித்துள்ளது. வடக்கு, வடமத்திய, வடமேற்கு மற்றும் கிழக்கு மாகாணங்களிலும் மொனராகலை மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களிலும் இவ்வாறான அதிக வெப்பமான காலநிலை காணப்படும். வளிமண்டலவியல் திணைக்களத்தின் கூற்றுப்படி, வடக்கு, வடமத்திய, வடமேற்கு பகுதிகளில் சில இடங்களில் வெப்பச் சுட்டெண், அதாவது மனித உடலால் உணரப்படும் வெப்பம் ‘கவனம்’ என்று அழைக்கும் மட்டத்தில் இருக்கக்கூடும் எனவும் வளிமண்டலவியல் திணைக்களம்  தெரிவித்துள்ளது.