இலங்கை செய்தி

ஜப்பானில் உயிரிழந்த இலங்கை பெண் – ஜப்பான் நீதி அமைச்சர் வெளியிட்ட தகவல்

  • April 12, 2023
  • 0 Comments

ஜப்பானில் உள்ள தடுப்பு முகாமில் உரிய சிகிச்சை அளிக்காமல் உயிரிழந்த விஷ்மா சந்தமாலியின் மரணம் தொடர்பான சிசிடிவி காட்சிகள் எடிட் செய்யப்பட்டு அனுமதியின்றி ஊடகங்களுக்கு வெளியிடப்பட்டதாக ஜப்பான் நீதி அமைச்சர் கென் சைத்தோ தெரிவித்துள்ளார். அமைச்சரவைக் கூட்டத்தின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே ஜப்பானிய அமைச்சர் இதனைக் குறிப்பிட்டுள்ளதாக ஜப்பானிய ஊடகங்கள் தெரிவிக்கின்றன. விசா விதிகளை மீறியதாக குற்றம் சாட்டப்பட்டு ஜப்பானின் நகோயாவில் உள்ள குடியேற்ற தடுப்பு மையத்தில் முறையான சிகிச்சை பெறாமல் 2021 ஆம் […]

இலங்கை செய்தி

இலங்கையில் வாடகைக்கு வீடு வழங்குபவர்களுக்கு எச்சரிக்கை – மர்ம நபர்களால் அதிர்ச்சி

  • April 12, 2023
  • 0 Comments

இலங்கையில் வாடகைக்கு வீடு வழங்குபவர்களுக்கு எச்சரிக்கை விடுக்கும் வகையில் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. களுவாஞ்சிக்குடி பிரதேசத்தில் நேற்று முன்தினம் வீடு வாடகைக்கு தேவை என வீடு ஒன்றிற்குள் உள்நுழைந்த  3 பேர் கொண்ட கொள்ளையர்கள் நுழைந்துள்ளனர். அங்கு தனிமையில் இருந்த பெண்னை அடித்து தாக்கிவிட்டு, அவரிடமிருந்த தங்க நகைகளை கொள்ளையிட்டுச் சென்றுள்ளனர். சம்பவத்தில் பாதிக்கப்பட்ட பெண் வைத்தியசாலை அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக  பொலிஸார் தெரிவித்தனர். ஒந்தாச்சிமட பிரதேசத்தில் சம்பவதினமான பிற்பகல் 2 மணிக்கு வீட்டில் தனியாக […]

இலங்கை செய்தி

ஜனாதிபதி ரணிலின் அதிரடி அறிவிப்பு

  • April 12, 2023
  • 0 Comments

Ĺவடக்கில் வாழும் அனைத்து இன மக்களுக்கும் வழிபாட்டு உரிமை உண்டு என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார். அதை எந்தத் தரப்பும் கேள்விக்குட்படுத்த முடியாது. அத்துடன் அத்துமீறி வழிபடவோ அல்லது வழிபாட்டுச் சின்னங்கள் வைக்கவோ முடியாதென அவர் குறிப்பிட்டுள்ளார். “வடக்கில் மத ரீதியில் அண்மைக்காலத்தில் எழுந்துள்ள பிரச்சினைகளுக்கு விரைந்து தீர்வு காணப்படும். இந்தப் பிரச்சினைகளை வைத்து அல்லது பிரச்சினைகளை மேலும் தூண்டிவிட்டு எவரும் அரசியல் இலாபம் தேட முயலக்கூடாது. நீதிமன்ற வழக்கில் ஒரு பிரச்சினை இருந்தால் நீதிமன்றத்தின் […]

இலங்கை செய்தி

நாடுவானி உடைந்த விமானத்தின் கண்ணாடி!! கொழும்பில் அவசரமாக தரையிறக்கம்

  • April 12, 2023
  • 0 Comments

டுபாய் நோக்கி பயணித்த இலங்கை விமானம் ஒன்று விமானத்தின் முன் கண்ணாடி வெடித்ததால் மீண்டும் கட்டுநாயக்க விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டுள்ளது. நேற்று மாலை 6.25 மணிக்கு புறப்பட வேண்டிய இந்த விமானம் மோசமான வானிலை காரணமாக கட்டுநாயக்க விமான நிலையத்தில் இருந்து இன்று (08) காலை 9.30 மணியளவில் புறப்பட்டது. எவ்வாறாயினும், கண்ணாடி வெடித்ததன் காரணமாக, சுமார் ஒரு மணித்தியாலம் 10 நிமிடங்களின் பின்னர் மீண்டும் கட்டுநாயக்க விமான நிலையத்தில் விமானம் தரையிறங்கியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விமானத்தில் […]

இலங்கை செய்தி

இலங்கைக்கான சீனத்தூதுவர் கீ சென் ஹொங் மற்றும் மகிந்தவிற்கு இடையில் சந்திப்பு!

  • April 12, 2023
  • 0 Comments

முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ மற்றும் இலங்கைக்கான சீனத்தூதுவர் கீ சென் ஹொங் ஆகியோருக்கிடையிலான சந்திப்பு நேற்று நடைபெற்றுள்ளது. இதன்போது   போருக்குப் பின்னரான மறுசீரமைப்பு, கொவிட்-19 தொற்று நோய்க்கு எதிரான போராட்டம் போன்ற அனைத்து முக்கியமான தருணங்களிலும், தற்போதைய பொருளாதார நெருக்கடியை சமாளிக்கவும் இலங்கைக்கு மிகவும் மதிப்புமிக்க உதவிகளைத் தொடர்ந்து வழங்கியமைக்காக  சீன அரசாங்கத்திற்கும் மக்களுக்கும் முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ  நன்றி தெரிவித்துள்ளார். அத்தோடு இந்த சந்திப்பின் போது இரு நாடுகளுக்கும் இரு நாட்டு மக்களுக்கும் […]

இலங்கை செய்தி

துப்பாக்கிகளை வைத்திருந்த குற்றச்சாட்டில் நால்வர் கைது!

  • April 12, 2023
  • 0 Comments

உகன, அம்பன்பொல,  கிளிநொச்சி மற்றும் மல்லாவி பொலிஸ் பிரிவுகளில் 5  துப்பாக்கிகளை வைத்திருந்ததாக கூறப்படும்  நால்வரை சந்தேகத்தின் பேரில் பொலிஸார் கைது செய்துள்ளனர். இந்த நான்கு சந்தேக நபர்கள் தொடர்பில் சம்பந்தப்பட்ட பொலிஸ் நிலையங்களால் மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. விசாரணைகளின் பின்னர்,  அவர்கள் அந்தந்த பிரதேசங்களின் நீதிமன்றங்களில் ஆஜர்படுத்தப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.  

இலங்கை செய்தி

புத்தாண்டின் பின்னர் உதயமாகும் புதிய அமைச்சரவை?

  • April 12, 2023
  • 0 Comments

புத்தாண்டின் பின்னர் புதிய அமைச்சரவை நியமிக்கப்படவுள்ளதாக அரசாங்க வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. அமைச்சரவை மாற்றத்தில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பத்து உறுப்பினர்களுக்கும் ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்ன மற்றும் பொதுஜன பெரமுனவைச் சேர்ந்த சுயேச்சை உறுப்பினர் ஒருவருக்கும் அமைச்சுப் பதவிகள் வழங்கப்படவுள்ளதாக தெரியவருகிறது. இதேவேளை பொதுஜன பெரமுன உறுப்பினர்களுக்கு அமைச்சுப் பதவி வழங்குவது தொடர்பில் இன்னும் இறுதி இணக்கப்பாடு எட்டப்படவில்லை எனவும் அமைச்சரவை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

இலங்கை செய்தி

கண்டி முன்பள்ளி ஆசிரியை கொலை வழக்கு; வெளிவரும் திடுக்கிம் தகவல்கள்!

  • April 12, 2023
  • 0 Comments

கண்டியில் நேற்றைய தினம் கொடூரமாக கொலை செய்யப்பட்ட முன்பள்ளி ஆசிரியை அஞ்சலி சாபா செனவிரத்னவின் மரணம் தொடர்பில் மேலும் பல திடுக்கிம் தகவல்கள் வெளியாகியுள்ளன. புத்தாண்டுக் கொண்டாட்டத்தில் பங்கேற்பதற்காக முன்பள்ளிக்குச் சென்ற இருபத்தைந்து வயதுடைய குறித்த ஆசிரியை படுகொலை செய்யப்பட்டமப் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. முருதலாவ பிரதேசத்தை சேர்ந்த அஞ்சலி சாபா செனவிரத்ன என்ற முன்பள்ளி ஆசிரியை ஒருவரே படுகொலை செய்யப்பட்டிருந்தார். இலுகென்ன பிரதேசத்திலுள்ள முன்பள்ளிக்கு தனது வீட்டிலிருந்து சென்று கொண்டிருந்த ஆசிரியை , கினிஹேன மயானத்துக்கு அருகில் […]

இலங்கை செய்தி

இலங்கையில் புத்தாண்டுக்கு முன் குறையும் மேலும் சில பொருட்களின் விலை

  • April 12, 2023
  • 0 Comments

இலங்கையில் டொலருக்கு நிகரான ரூபாவின் பெறுமதி வலுவடைவதன் காரணமாக இலங்கையில் பொருட்களின் விலைகள் குறைக்கப்பட்டுள்ளதாக வர்த்தக, வர்த்தக மற்றும் உணவு பாதுகாப்பு அமைச்சர் நளின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். இந்த புத்தாண்டுக்கு முன்னர் பொருட்களின் விலைகள் மேலும் குறையும் என அமைச்சர் குறிப்பிட்டார். இவ்வருடம் அரிசியை இறக்குமதி செய்ய வேண்டிய அவசியமில்லை எனவும், அரிசியின் விலை மேலும் குறையும் எனவும் அமைச்சர் மேலும் தெரிவித்தார். இதேவேளை, லங்கா சதொச நிறுவனம் பொதுமக்களுக்கு வழங்கப்படும் சில அத்தியாவசிய நுகர்வுப் பொருட்களின் […]

இலங்கை செய்தி

புலம்பெயர் இலங்கை பணியாளர்களுக்காக வெளிநாட்டில் அதிக தொழில்வாய்ப்பு!

  • April 12, 2023
  • 0 Comments

இலங்கையின் புலம்பெயர் பணியாளர்களுக்காக, ஜப்பானில் அதிக தொழில்வாய்ப்பை பெற்றுக்கொள்வதற்கான நடவடிக்கை எடுக்கப்படுவதாக, தெரிவிக்கப்படுகின்றது. வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சு இதனை தெரிவித்துள்ளது. இதற்காக, முன்னணி நிறுவனங்களுடன் இணைந்து செயற்படுவதாக அந்த அமைச்சு குறிப்பிட்டுள்ளது. ஜப்பான் மொழிக் கற்கை குறித்தும், இதன்போது கவனம் செலுத்தப்படுகிறது.  

You cannot copy content of this page

Skip to content