பொழுதுபோக்கு

‘ஜெயிலர்’ படத்தின் புதிய தகவலால் குழப்பத்தில் ரசிகர்கள்…

  • May 29, 2023
  • 0 Comments

நெல்சன் திலீப்குமார் இயக்கிய ஆக்‌ஷன் த்ரில்லரான ‘ஜெயிலர்’ படம் ஆகஸ்ட் 10ஆம் தேதி இந்திய அளவில் பிரமாண்டமாக வெளிவர உள்ளது. ரஜினிகாந்த் ‘ஜெயிலர்’ படத்தின் படப்பிடிப்பை முடித்துவிட்டதாக முன்னர் கூறப்பட்டது. எனினும் ரஜினிகாந்த் ‘ஜெயிலர்’ படப்பிடிப்பை மீண்டும் தொடங்கியதாகவும், மேலும் அவர் இன்னும் 4 அல்லது 5 நாட்கள் படப்பிடிப்பில் இருப்பார் என சமீபத்திய அறிக்கை வேறு கதையை வழங்குகிறது. ‘ஜெயிலர்’ படத்தின் குறுகிய ஷெட்யூல் சென்னையில் நடக்கிறது, ரஜினிகாந்த் மீண்டும் முத்துவேல் பாண்டியனாக மாறினார். ஜாக்கி […]

வட அமெரிக்கா

மகனுக்காக பேரக் குழந்தையை பெற்றெடுத்த பாட்டி!

  • May 29, 2023
  • 0 Comments

அமெரிக்காவில் தனது ஓரின சேர்க்கையாளரான மகனது விந்தணுவின் மூலம், குழந்தை பெற்று கொடுத்த தாயின் செயல் அனைவரையும் நெகிழவைத்துள்ளது. அமெரிக்காவில் நெப்ராஸ்கா பகுதியை சேர்ந்த செசிலி எலெட்ஜ் (59) என்ற பெண்ணுக்கு, மேத்யூ எலெட்ஜ் என்ற மகன் இருக்கிறார். மேத்யூ எலெட்ஜ் ஓரின செயற்கையாளராக இருந்த காரணத்தால், இலியட் டாஃபெர்ட்டி என்பவரை காதலித்து வந்துள்ளார். பின்னர் இருவரும் திருமணம் செய்ய முடிவு செய்து, ஒன்றாக வாழ்ந்து வருகின்றனர். இந்த நிலையில் இருவரும் தங்களுக்கு ஒரு குழந்தை இருந்தால், […]

ஐரோப்பா

இத்தாலியில் படகு கவிழ்ந்து விபத்து : நால்வர் உயிரிழப்பு!

  • May 29, 2023
  • 0 Comments

இத்தாலியில் உல்லாசப் பயணிகளை ஏற்றிச்சென்ற படகு ஒன்று கவிழ்ந்ததால் நால்வர் உயிரிழந்துள்ளனர் என அதிகாரிகள் இன்று தெரிவித்துள்ளனர். இத்தாலியின் வட பகுதியிலுள்ள மேகியோர் ஏரியில் நேற்று ஞாயிற்றுக்கிழமை இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. உயிரிழந்தவர்களில் இரு வெளிநாட்டவர்களும் அடங்கியுள்ளனர் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இத்தாலியைச் சேர்ந்த ஒரு பெண்இ ஓர் ஆண்இ ரஷ்யரான ஒரு பெண்இ இஸ்ரேலியரான ஓர் ஆண் ஆகியோர் உயிரிழந்துள்ளனர் உள்ளூர் ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

ஐரோப்பா

பெலாரஸ் ஜனாதிபதிக்கு ரஷ்யாவில் நஞ்சூட்டப்பட்டதா? : எதிர்கட்சியின் குற்றச்சாட்டு!

  • May 29, 2023
  • 0 Comments

ரஸ்யாவில் பெலாரஸ் ஜனாதிபதிக்கு நஞ்சூட்டப்பட்டுள்ளதாக பெலாரஸ் எதிர்கட்சி குற்றம்சாட்டியுள்ளது. ரஸ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டினை சந்தித்த பின்னர் பெலாரஸ் ஜனாதிபதியின் உடல்நிலை மோசமாக பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில், மேற்படி குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில்,  கிரெம்ளின் அவருக்கு நஞ்சூட்டியுள்ளது என எதிர்கட்சி குற்றம்சாட்டியுள்ளது. பெலாரஸ் ஜனாதிபதி லுகாசென்கோவின் உடல்நிலை பாதிப்பிற்கான காரணங்கள் வெளியாகாத நிலையில் மேற்படி குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. இதேவேளை உக்ரைனுக்கு எதிரான ரஷ்யாவின் போரில், போருக்கு எதிரான நிலைப்பாட்டை கொண்டிருப்பவர்கள், திடீரென உயிரிழக்கும் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றதும் […]

பொழுதுபோக்கு

புரூஸ் வில்லிஸுக்காக நேரம் ஒதுக்கிய அர்னால்ட்!! உணர்வு பூர்வமான தருணம்…

  • May 29, 2023
  • 0 Comments

பிரபல ஹாலிவுட் நடிகரான புரூஸ் வில்லிஸ் மூளை செல் நோயால் பாதிக்கப்பட்டதையடுத்து, அர்னால்ட் ஸ்வார்ஸ்னேக்கர் அவருக்கு தனது அன்பை பகிர்ந்துள்ளார். ஒரு நபரின் அறிவாற்றல் திறன்களைப் பாதிக்கும் மொழிக் கோளாறான அஃபாசியா நோயால் புரூஸ் வில்லிஸ் பாதிக்கப்பட்டதை அடுத்து, அவர் நடிப்பிலிருந்து விலகுவதாக வில்லிஸின் குடும்பம் இந்த ஆண்டின் பிப்ரவரியில் செய்தியை அறிவித்தது. இந்த நிலையில், புதிய நெட்ஃபிக்ஸ் நிகழ்ச்சியான FUBAR ஐ விளம்பரப்படுத்த அளித்த புதிய நேர்காணலில், அர்னால்ட் ஸ்வார்ஸ்னேக்கர் வில்லிஸுக்கு அனுதாபம் தெரிவிக்க சிறிது […]

இலங்கை

சிறுவர்கள் குற்றச்செயலில், ஈடுபடுவதையோ, துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்படுவதையோ ஊடகம் முன் பகிரங்கப்படுத்தக் கூடாது என வலியுறுத்தல்!

  • May 29, 2023
  • 0 Comments

பாதிக்கப்பட்ட சிறுவர்கள் மற்றும் குற்றம் சாட்டப்பட்ட சிறுவர்களை ஊடகங்கள் மூலம் அம்பலப்படுத்துவதால் பல சமூகப் பிரச்சினைகள் தோன்றியுள்ளதாகவும், எனவே அதனைத் தடுக்க உடனடி நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமெனவும் நாடாளுமன்ற சிறுவர் பேரவையின் தலைவர் எம்.பி ரோஹினி குமாரி விஜேரத்ன வலியுறுத்தியுள்ளார். அண்மையில் பாராளுமன்றத்தில் கூடிய சிறுவர்களுக்கான பாராளுமன்ற பேரவையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளதாக பாராளுமன்றத்தின் தொடர்பாடல் திணைக்களம்  தெரிவித்துள்ளது. இதன்படி  சிறுவர் துஷ்பிரயோகம் மற்றும் குற்றச்செயல்களில் ஈடுபடும் சிறுவர்களின்  அடையாளங்களை ஊடகங்கள் ஊடாக வெளிக்கொணருவது சம்பந்தப்பட்ட சிறுவர்களின் […]

ஆசியா

போயிங் விமானத்திற்கு போட்டியாக சீனாவில் கட்டப்பட்ட புதிய விமானம்!

  • May 29, 2023
  • 0 Comments

சீனாவில் முதல் முறையாக உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட ஜெட் விமானம் தனது முதலாவது பயணத்தை வெற்றிகரமாக முடித்துள்ளது. ஞாயிற்றுக்கிழமை அதிகாலை தலைநகர் பெய்ஜிங்கை நோக்கி சி919 என்ற ஜெட் விமானம் ஷாங்காய்க்கு பயணம் செய்திருந்தது. ஏர்பஸ் மற்றும் போயிங்கின்  ஜெட் விமானங்களின் ஆதிக்கத்தை முறியடிக்கும் வகையில், இது சீனாவின் கமர்ஷியல் ஏவியேஷன் கார்ப்பரேஷன் (கோமாக்) ஆல் கட்டப்பட்டுள்ளது. ஷாங்காய்-பெய்ஜிங்கிற்கு இடையிலான  பயணம், 130க்கும் மேற்பட்ட பயணிகளுடன், மூன்று மணி நேரத்திற்குள் முடிக்கப்பட்டது.

ஐரோப்பா

லண்டனில் காரின் பின்பக்கத்தில் தொங்கிக்கொண்டிருந்த மனிதக் கை..!

  • May 29, 2023
  • 0 Comments

லண்டனில் மதுபான விடுதி ஒன்றின் அருகே நிறுத்தப்பட்டிருந்த கார் ஒன்றின் பின்பக்கத்திலிருந்து மனிதக் கை போன்று தோன்றும் ஒரு பொருள் தொங்கிக்கொண்டிருந்த காட்சி மக்களை திகிலடையச் செய்தது. மத்திய லண்டனிலுள்ள Euston என்னுமிடத்தில் உள்ள மதுபான விடுதி ஒன்றின் அருகே நிறுத்தப்பட்டிருந்த கார் ஒன்றின் பின்பக்கத்திலிருந்து கை ஒன்று தொங்கிக்கொண்டிருப்பதைக் கண்ட மக்கள் திகிலடைந்தனர். Louise என்னும் பெண் சமூக ஊடகம் ஒன்றில் இந்தக் காட்சி அடங்கிய வீடியோவை வெளியிட்டுள்ளார்.நான் அந்தக் காட்சியைக் கண்டு நடுநடுங்கிவிட்டேன் என்று […]

இலங்கை

இலங்கைக்கு 350 மில்லியன் டொலர் வழங்க ஒப்புக் கொண்ட ஆசிய அபிவிருத்தி வங்கி!

  • May 29, 2023
  • 0 Comments

ஆசிய அபிவிருத்தி வங்கி இலங்கையின் ஸ்திரத்தன்மைக்காக சிறப்பு கொள்கை அடிப்படையிலான கடனுக்கு இன்று (29) ஒப்துல் அளித்துள்ளது. சிறப்பு கொள்கை அடிப்படையில் 350 மில்லியன் டொலரை ஆசிய அபிவிருத்தி வங்கி இலங்கைக்கு வழங்கவுள்ளது. இது குறித்து ஆசிய அபிவிருத்தி வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில்,  இந்த திட்டமானது சர்வதேச நாணய நிதியத்தின் நாட்டிற்கான விரிவாக்கப்பட்ட நிதி வசதியால் தொகுக்கப்பட்ட நிதி உதவியின் ஒரு பகுதியாகும் எனத் தெரிவித்துள்ளது. அத்துடன்  பொருளாதாரத்தை ஸ்திரப்படுத்தவும், பொருளாதார மீட்சி மற்றும் நீடித்த வளர்ச்சிக்கான […]

இலங்கை

இலங்கையில் குறைவடையும் தங்கத்தின் விலை!

  • May 29, 2023
  • 0 Comments

இலங்கையில் வரும் காலங்களில் தங்கத்தின் விலை குறைவடைவதற்கான வாய்ப்புகள் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. சந்தை ஆதாரங்களின்படி, திங்கட்கிழமை (மே 29) இலங்கையில் தங்கத்தின் விலை மேலும் குறைந்துள்ளது. இதன்படி, கொழும்பு ஹெட்டிவீதிய தங்க சந்தையில் ஒரு பவுன் 22 காரட் தங்கத்தின் விலை 150,800 ரூபாவிற்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது. அதேபோல் 24 கேரட் தங்கத்தின் விலை, 1,63 ஆயிரம் ரூபாவிற்கு விற்பனை செய்யப்படுகிறது. இது கடந்த வெள்ளிக்கிழமை,65 ஆயிரம் ரூபாவாக பதிவாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.