ஐரோப்பா

வட்டி விகிதங்களை உயர்த்தும் பேங்க் ஆஃப் இங்கிலாந்து!

  • June 22, 2023
  • 0 Comments

பேங்க் ஆஃப் இங்கிலாந்து பணவீக்கத்தை சமாளிக்க வட்டி விகிதங்களை உயர்த்த உள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது. இதன்படி  மத்திய வங்கி அதன் முக்கிய வட்டி விகிதத்தை கால் சதவீத புள்ளியாக உயர்த்தும் என ஆய்வாளர்கள் கணித்துள்ளனர். இந்நிலையில் வங்கியிடம் இருந்து கடன் பெற்றுக்கொள்பவர்கள் மற்றும் ஏற்கனவே கடன் வாங்கியவர்கள் பாதிக்கப்படுவார்கள் என ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். குறிப்பாக இங்கிலாந்தில் உள்ள 1.4 மில்லியன் அல்லது அதற்கு மேற்பட்ட குடும்பங்கள் தங்கள் அடமானங்களை ஆண்டு முழுவதும் மறுநிதியளிப்பு செய்ய வேண்டும் எனக் […]

வட அமெரிக்கா

கடையை உடைத்து மதுபானம் திருடிய மர்ம நபர்கள்

  • June 22, 2023
  • 0 Comments

கனடாவின் பகுதியில் கடையொன்றை உடைத்து மதுபானம் களவாடப்பட்டுள்ளது. கனடாவின் முன்னணி மதுபான விற்பனை நிறுவனங்களில் ஒன்றில் இவ்வாறு மதுபானம் களவாடப்பட்டுள்ளது.கடையை உடைத்து அதிலிருந்து சுமார் 1500 டொலர் பெறுமதியான மதுபான வகைகள் கனவாடப்பட்டுள்ளன. றொரன்டோவின் காக்ஸ்வெல் மற்றும் குயின் வீதிகளுக்கு அருகாமையில் அமைந்துள்ள கடையில் அதிகாலை வேளையில் இந்த கொள்ளை சம்பவம் இடம் பெற்றுள்ளது. இரண்டு நபர்கள் கடையை உடைத்து உள்ளே புகுந்து சில வகை மதுபான போத்தல்களை களவாடிச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.இவ்வாறு மதுபானம் களவாடிய நபர்களுடன் […]

ஆசியா

சீனாவில் எரிவாயு சிலிண்டர் வெடித்து விபத்து : 31 பேர் பலி!

  • June 22, 2023
  • 0 Comments

சீனாவின் வடமேற்கு பகுதியில் உள்ள Ningxia  பிராந்தியன் தலைநகரில் அமைந்துள்ள உணவகத்தில் ஏற்பட்ட வெடி விபத்தில் 31 பேர் உயிரிழந்துள்ளனர். குறித்த பகுதியில் அமைந்துள்ள BBQ உணவகத்தில், எரிவாயு சிலிண்டர் வெடித்ததில் இந்த அனர்த்தம் ஏற்பட்டுள்ளது. தீக்காயங்கள் மற்றும் இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்கும் பணிகள் நடைபெற்று வருவதாகவும் இதுவரை ஏழு பேர் வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று வருவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. மக்கள் ஒன்று கூடும், சன நெரிசல் மிக்க பகுதியில் ஏற்பட்ட இந்த தீவிபத்து குறித்து பொலிஸார் விசாரணைகளை […]

ஆசியா

மியன்மாரில் அடுத்தடுத்து உணரப்பட்ட 3 நிலநடுக்கங்கள்

  • June 22, 2023
  • 0 Comments

மியான்மர் நாட்டில் கடந்த 24 மணிநேரத்திற்குள் அடுத்தடுத்து 3 முறை நிலநடுக்கங்கள் உணரப்பட்டு உள்ளன. இதன்படி, இன்று காலை 5.43 மணியளவில் யாங்கன் நகரில் மித அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டரில் 4.5 ஆக பதிவானது. இந்நிலநடுக்கம் 48 கி.மீ. ஆழத்தில் மையம் கொண்டு இருந்தது என தேசிய நிலநடுக்க அறிவியல் மையம் தெரிவித்து உள்ளது. இது கடந்த 24 மணிநேரத்திற்குள் ஏற்பட்ட 3வது நிலநடுக்கம் ஆகும். அதற்கு 3 மணிநேரத்திற்கு முன்னர், 2வது நிலநடுக்கம் […]

பொழுதுபோக்கு

சிம்பு – கௌதம் மேனனுக்கு இடையில் மோதல்??

  • June 22, 2023
  • 0 Comments

இயக்குநர் கௌதம் மேனனுக்கும், சிம்புவுக்கும் இடையே பிரச்சினை எதனால் வந்தது என்பது குறித்த தகவல் வெளியாகியிருக்கிறது. கோலிவுட்டின் முன்னணி நடிகரான சிம்பு அன்பானவன் அசராதவன் அடங்காதவன் படத்தைத் தொடர்ந்து எழுந்த பிரச்னைகள், தனிப்பட்ட முறையில் சுற்றிய பிரச்னைகள் என பல காரணங்களால் சினிமாவிலிருந்து ஒதுங்கியிருந்தார். மேலும் அந்த சமயத்தில் அவரது உடல் எடையும் கூடி பார்ப்பதற்கு வேறு மாதிரியாக இருந்தார். இதையடுத்து, உடல் எடையை குறைத்து தனது எண்ணங்களை ஒருமுகப்படுத்தி மீண்டும் இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கினார் சிம்பு. […]

இலங்கை

இலங்கையில் தங்கியிருப்பவர்களுக்கு விசேட அறிவிப்பு – அதிகரிக்கும் கட்டணம்

  • June 22, 2023
  • 0 Comments

விசா காலத்தை மீறி இலங்கையில் தங்கியிருக்கும் வெளிநாட்டவர்களின் அபராதத் தொகையை திருத்தியமைக்கப்பட்டுள்ளது. அதற்கான புதிய வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. இது தொடர்பான வர்த்தமானி பொது பாதுகாப்பு அமைச்சினால் வெளியிடப்பட்டுள்ளது. 14 நாட்களுக்கு மேல் தங்கியதற்கான அபராதம் 250 டொலர்களாகவும், 14 நாட்களுக்கு மேல் அபராதம் 500 டொலர்களாகவும் திருத்தப்பட்டுள்ளது. இந்தநிலையில் அசல் விசாவின் செல்லுபடியாகும் காலம் முடிவடைந்த நாளிலிருந்து ஏழு நாட்களுக்குள் இலங்கையை விட்டு வெளியேறுபவர்கள், புதிய வர்த்தமானியின்படி, எந்தவொரு அபராதமும் செலுத்தாமல், பொருந்தக்கூடிய விசா கட்டணத்தை […]

பொழுதுபோக்கு

பாண்டியர் ஸ்டோர்ஸ் தனத்திக்கு இப்படி ஒரு நோயா? அதிர்ச்சியில் மீனா

  • June 22, 2023
  • 0 Comments

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் தனலட்சுமி கேரக்டரில் நடிக்கும் தனத்திற்கு ஆபத்தான நோய் இருப்பதாக வைத்தியர்கள் தெரிவித்துள்ள கருத்தால் பெரும் அதிர்ச்சியடைந்துள்ளனர். ரொம்ப நாளாவே அடிக்கடி தனம் நெஞ்சை பிடித்துக் கொண்டு வலி வந்து கொண்டிருப்பது போல் உணர்ந்து கொண்டிருக்கிறார். ஆனாலும் அதை பெரிதாக பொருட்படுத்தாமல் விட்டுவிட்டார். இப்பொழுது அதனுடைய வலி அதிகரித்ததனால் யாருடைய தயவும் இல்லாமல் தனியாக மருத்துவமனைக்கு சென்று அடிக்கடி நெஞ்சு வலி வருகிறது என்று பிரச்சனையை சொல்கிறார். அதற்காக […]

வட அமெரிக்கா

மெக்சிகோவில் பாரிய அனர்த்தம் – 16 வாகனங்கள் ஒன்றோடொன்று மோதி விபத்து.. பலர் பலி

  • June 22, 2023
  • 0 Comments

மெக்சிகோவில் 10க்கும் மேற்பட்ட வாகனங்கள் ஒன்றோடொன்று மோதி விபத்துக்குள்ளாகி பாரிய அனர்த்தம் ஏற்பட்டுள்ளது. இந்த சம்பவத்தில் 5 பேர் உயிரிழந்த நிலையில் 14 பேர் படுகாயமடைந்தனர். ஜலிஸ்கோ மாகாணத்தில் உள்ள டெபாடிட்லான் நகருக்கு அருகில் நேற்று இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. ஆறு வேன்கள், நான்கு கார்கள், நான்கு ட்ராக்டர்கள் உட்பட 16 வாகனங்கள் ஒன்றோடொன்று மோதி தீப்பற்றியுள்ளதாக தெரியவந்துள்ளது. இந்த விபத்தில் சிக்கி 5 பேர் உயிரிழந்த நிலையில், படுகாயமடைந்தவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். விபத்து எவ்வாறு […]

வாழ்வியல்

தைராய்டு நோயால் அவதிப்படுறீங்களா.? இழகுவாக குணப்படுத்தலாம்

  • June 22, 2023
  • 0 Comments

தைராய்டு சுரப்பி நம் உடலிலிருக்கக்கூடிய மிக முக்கியமான ஒரு நாளமில்லா சுரப்பியாகும். இந்த சுரப்பியானது உடலின் வளர்ச்சியை மாற்றங்களை கட்டுப்படுத்தக்கூடியது. நம் தொண்டை குரல்வளையின் இருபுறங்களும் வளைந்திருக்கும் இந்த நாளமில்லா சுரப்பிகள் குழந்தையின் கரு உருவாக்கத்திலிருந்து உடல் வளர்ச்சி தசை வளர்ச்சி மூளை வளர்ச்சி என ஒவ்வொரு வளர்ச்சியிலும் முக்கிய பங்கு வைக்கிறது. தைராய்டு பிரச்சனை பொதுவாக அயோடின் சத்து குறைபாடு காரணமாகவும் பரம்பரையின் அடிப்படையிலும் வரக்கூடிய ஒரு நோயாகும். மேலும் அதிக உடல் பருமன், ஊட்டச்சத்தில்லாத […]

இலங்கை

இலங்கையில் சத்திரசிகிச்சையின் போது 4 மரணங்கள் – பணிப்பாளர்கள் விசாரணைக்கு அழைப்பு

  • June 22, 2023
  • 0 Comments

இலங்கையில் சத்திரசிகிச்சையின் போது, இரண்டு சிறுவர்கள் உள்ளிட்ட 4 பேர் உயிரிழந்துள்ளனர். இது தொடர்பிலான விசாரணைகளுக்காக, பேராதனை போதனா மற்றும் பேராதனை பண்டாரநாயக்க சிறுவர் வைத்தியசாலைகளின் பணிப்பாளர்கள் இன்று சுகாதார அமைச்சுக்கு அழைக்கப்பட்டுள்ளனர். வைத்தியசாலை பணிப்பாளர்களுடன், சத்திரசிகிச்சைகளை மேற்கொண்ட ஏனைய அதிகாரிகளும் சுகாதார அமைச்சுக்கு அழைக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார். சத்திரசிகிச்சை மேற்கொண்ட விதம் மற்றும் பயன்படுத்தப்பட்ட மருந்துகள் குறித்தும் விசாரணை நடத்தப்படவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். பேராதனை போதனா மற்றும் பேராதனை பண்டாரநாயக்க சிறுவர் […]