வட அமெரிக்கா

கனடாவில் கூகுள் பயனர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அதிர்ச்சி தகவல்

  • June 30, 2023
  • 0 Comments

கனடாவில் கூகுள் தேடுதளத்தை பயன்படுத்தும் பயனர்களுக்கு அதிர்ச்சி தகவல் ஒன்றை வெளியிடப்பட்டுள்ளது. எதிர்வரும் நாட்களில் கனடிய பயனர்களுக்கு கூகுள் தேடுதளத்தின் ஊடாக செய்திகளை பார்வையிட முடியாது என அறிவிக்கப்பட்டுள்ளது.குறிப்பாக கனடிய ஊடகங்களினால் வெளியிடப்படும் செய்திகள் பார்வையிட முடியாது என அறிவிக்கப்பட்டுள்ளது. லிபரல் அரசாங்கத்தினால் அமுல்படுத்தப்பட்டுள்ள புதிய சட்டத்திற்கு பதிலடியாக இந்த அறிவிப்பினை google நிறுவனம் வெளியிட்டுள்ளது.முன்னதாக லிபரல் அரசாங்கம் Bill C-18 என்னும் ஓர் சட்டத்தை அமுல்படுத்தி இருந்தது. இந்த சட்டத்தின் ஊடாக கூகுள் உள்ளிட்ட பிரதான […]

பொழுதுபோக்கு

மீண்டும் கமலுடன் இணையும் விஜய் சேதுபதி? விரைவில் உறுதி…

  • June 30, 2023
  • 0 Comments

தென்னிந்திய திரையுலகின் முன்னணி நடிகரான கமல், தற்போது ஷங்கர் இயக்கத்தில் இந்தியன்-2 படத்தில் நடித்து வருகிறார். இதில் கமலுடன் இணைந்து சமுத்திரக்கனி, பாபி சிம்கா, காஜல் அகர்வால், சித்தார்த், ராகுல் பிரீத் சிங், பிரியா பவானி சங்கர் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர். இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இப்படத்தை தொடர்ந்து கமல், புராஜெக்ட் கே படத்தில் நடிக்கிறார். இயக்குனர் நாக் அஸ்வின் இயக்கத்தில் உருவாகும் இப்படத்தில் பிரபாஸ், தீபிகா படுகோனே, அமிதாப் […]

ஆசியா

ஷாங்காய் மாநாட்டில் காணொளி மூலம் பங்கேற்கும் சீன அதிபர் ஜி ஜிங்பிங்

  • June 30, 2023
  • 0 Comments

இந்தியா, ரஷ்யா, கிர்கிஸ்தான், கஜகஸ்தான், தஜிகிஸ்தான், உஸ்பெகிஸ்தான், பாகிஸ்தான் ஆகிய நாடுகளை உறுப்பினர்களாக கொண்டு ஷாங்காய் ஒத்துழைப்பு கூட்டமைப்பு செயல்பட்டு வருகிறது. இதனிடையே, இந்த ஆண்டு ஷாங்காய் ஒத்துழைப்பு கூட்டமைப்பு அமைப்பிற்கு இந்தியா தலைமை வகிக்கிறது. இந்தியா தலைமை வகிக்கும் நிலையில் இந்த கூட்டமைப்பின் மந்திரிகள் மட்டத்திலான மாநாடு இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் நடைபெற்று வருகிறது. பாதுகாப்புத்துறை, வெளியுறவுத்துறை உள்பட பல்வேறு துறை மந்திரிகளின் மாநாடு நடைபெற்று வருகிறது. இதில் உறுப்பு நாடுகளை சேர்ந்த மந்திரிகள் பங்கேற்றுள்ளனர். […]

இலங்கை

இலங்கையில் ஹஜ் பெருநாள் கொண்டாட உறவினர் வீட்டிற்கு சென்ற குடும்பத்திற்கு நேர்ந்த கதி

  • June 30, 2023
  • 0 Comments

திருகோணமலை – கிண்ணியா பொலிஸ் பிரிவிற்குற்பட்ட சூரங்கள் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் படுகாயமடைந்த நிலையில் மற்றுமொரு சிறுமி உயிரிழந்துள்ளதாக கிண்ணியா பொலிஸார் தெரிவித்தனர். ஹஜ் பெருநாள் தினமான (29) வியாழக்கிழமை மாலை தம்பலகாமம் -அரபா நகரில் இருந்து உறவினர்களின் வீட்டுக்கு மோட்டார் சைக்கிளில் தாய் தந்தை இரண்டு சிறுவர்கள் உட்பட நான்கு பேர் பயணித்துள்ளனர். இந்நிலையில் குறித்த மோட்டார் சைக்கிள் பெட்ரோல் தாங்கியில் ஐந்து வயது சிறுமியை வைத்துக்கொண்டு பயணித்துக் கொண்டிருந்த […]

இலங்கை

மடு அன்னையின் ஆடி திருவிழாவில் பங்கேற்போருக்கு மன்னார் மறைமாவட்ட ஆயரின் விசேட கோரிக்கை

  • June 30, 2023
  • 0 Comments

மடு அன்னையின் ஆடி மாத திருவிழா நாட்களில் விடுமுறை அதிகமாக காணப்படுவதால் அதிகமான மக்கள் இவ்விழாவில் கலந்து கொள்வதற்கான வாய்ப்புகள் இருக்கின்றன. மடுத் திருப்பதிக்கு யாத்திரிகர்களாக வருவோர் இங்கு வழிபாடுகள் நடை பெறுகின்ற போது வீடுகளில் அல்லது கூடாரங்களில் இருந்து உங்கள் பொழுதுபோக்கு தவிர்த்து வழிபாடுகளில் கலந்து கொண்டு அன்னையின் ஆசீர் பெற்றுக் கொள்ளுங்கள் என மன்னார் ஆயர் மேதகு இம்மானுவேல் பெர்னாண்டோ ஆண்டகை கோரிக்கை விடுத்துள்ளார். மன்னார் மடு அன்னையின் ஆடி மாத  திருவிழா குறித்து […]

ஆசியா

தாய்லாந்தில் விமான நிலையத்தில் பெண்ணுக்கு காத்திருந்த அதிர்ச்சி!

  • June 30, 2023
  • 0 Comments

தாய்லாந்தில் விமான நிலையத்தில் நகரும் நடைபாதையி​ல் சிக்கிய பயணியின் கால் துண்டித்த சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. தாய்லாந்து நாட்டின் தலைநகரான பாங்காக்கில் டான் மியுயங் விமான நிலையத்தில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. இந்த நிலையத்திற்கு நேற்று 57 வயதுடைய பெண் பயணி ஒருவர் அதே நாட்டின் தென்பகுதியில் உள்ள நகோன் சி தம்மராட் மாகாணத்துக்கு செல்லும் விமானத்தை பிடிப்பதற்காக வந்துள்ளார். அங்கு அந்த பெண் பயணி சூட்கேசுடன் விமான நிலையத்தில் உள்ள நகரும் நடைபாதையில் சென்றார். இந்த […]

ஆஸ்திரேலியா

சிட்னி சர்வதேச விமான நிலையத்தில் பலத்த காற்றினால் ஏற்பட்ட விபரீதம்

  • June 30, 2023
  • 0 Comments

பலத்த காற்று காரணமாக, சிட்னி சர்வதேச விமான நிலையத்தில் விமானங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. பல விமானங்கள் ஏற்கனவே ரத்து செய்யப்பட்டுள்ளன அல்லது தாமதமாகிவிட்டன, மேலும் இந்த நிலைமையை நாளின் வரவிருக்கும் காலத்தில் எதிர்பார்க்கலாம். இன்று பிற்பகல் 03.00 மணி வரை சிட்னி விமான நிலையத்தை அண்மித்த பகுதிகளில் மணிக்கு சுமார் 70 கிலோமீற்றர் வேகத்தில் காற்று வீசும் என கணிக்கப்பட்டுள்ளது. குவாண்டாஸ் – ஜெட்ஸ்டார் மற்றும் விர்ஜின் ஆகியவை ஏற்கனவே பல விமானங்களை ரத்து செய்துள்ளன. தற்போது […]

பொழுதுபோக்கு

இந்த வயதில் கர்ப்பிணியான நடிகை ரேகா.. பரபரப்பு போஸ்டர்

  • June 30, 2023
  • 0 Comments

அறிமுக இயக்குனர் மாலதி நாராயண் இயக்கத்தில் தயாராகும் முதல் திரைப்படம் ‘மிரியம்மா’. இதில் மூத்த நடிகை ரேகா கதையின் நாயகியாக நடிக்கிறார். இவருடன் எழில் துரை, சினேகா குமார், அனிதா சம்பத், விஜே ஆஷிக், மாலதி நாராயண் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்கள். ஜேசன் வில்லியம்ஸ் ஒளிப்பதிவு செய்ய, இந்த திரைப்படத்தில் இடம் பெறும் பாடல்களுக்கு ஏ. ஆர். ரெஹைனா இசையமைக்கிறார். படத்தொகுப்பு பணிகளை கமல் கவனிக்க, கலை இயக்க பணிகளை ‘யாத்திசை’ புகழ் ரஞ்சித் மேற்கொள்கிறார். […]

வாழ்வியல்

சர்க்கரை நோயினால் பாதிக்கப்பட்டவரா நீங்கள்? உங்களுக்கான பதிவு

  • June 30, 2023
  • 0 Comments

சர்க்கரை நோயாளிகளுக்கு ஓட்ஸ் ஆரோக்கியமானதா என்பது பற்றி இந்த பதிவில் பார்ப்போம். இன்று பெரும்பாலானோருக்கு நீரிழிவு நோய் பிரச்சனை காணப்படுகிறது. இந்த பிரச்சனையால் பலரும் பெரிதளவில் பாதிக்கப்படுகின்றனர். ரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகரிப்பதால் தான் இந்த நோய் ஏற்படுகிறது. இந்த நிலையில் இந்த நோயிலிருந்து விடுபட நமது உணவு முறையிலும் வாழ்க்கை முறையிலும் சில மாற்றங்களை கொண்டு வர வேண்டியது கட்டாயம் ஆகிறது. தற்போது இந்த பதிவில் நீரிழிவு நோய் பிரச்சனை உள்ளவர்கள் ஓட்ஸ் சாப்பிடுவது ஆரோக்கியமாக […]

இலங்கை

43 பயணிகளுடன் யாழில் இருந்து கொழும்பு சென்ற பேருந்து தீப்பிடித்து எரிந்து நாசம்

  • June 30, 2023
  • 0 Comments

யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்பு கோட்டை நோக்கி பயணித்த அதிசொகுசு பேருந்து ஒன்று தீப்பிடித்து எரிந்துள்ளது. 43 பயணிகளுடன் சென்றுகொண்டிருந்த அதிசொகுசு பேருந்தே இவ்வாறு தீப்பிடித்து எரிந்துள்ளதாக குறிப்பிடப்படுகின்றது. இதனால் பேருந்து முற்றாக எரிந்து நாசமாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். மதுரங்குளிய கரிகெட்டிய பிரதேசத்தில் வைத்து இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர். எப்படியிருப்பினும் இந்த தீ விபத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. எனினும் தீ விபத்திற்கான காரணம் இதுவரை தெரியவரவில்லை. இந்த நிலையில் சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை […]