வட அமெரிக்கா

கஞ்சா வைத்திருந்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட பிரபல மொடல் அழகி!

  • July 19, 2023
  • 0 Comments

அமெரிக்காவைச் சேர்ந்த பிரபல மொடல் அழகி ஜிகி ஹடிட், தனது நண்பர்களுடன் கேமன் தீவுகளுக்குத் தனியார் விமானம் மூலம் சென்றார். ஓவன் ராபர்ட்ஸ் சர்வதேச விமான நிலையத்தில் ஜிகி ஹடிட் மற்றும் நண்பர்களின் உடைமைகளைச் சுங்க அதிகாரிகள் சோதனை செய்தனர். அதில் கஞ்சா மற்றும் கஞ்சாவைப் புகைக்கப் பயன்படுத்தப்படும் கருவிகள் இருந்தது. இதையடுத்து ஜிகி ஹடிட்டும், அவரது நண்பர் ஒருவரும் கைது செய்யப்பட்டனர்.விசாரணைக்குப் பின்னர் அவர்கள் ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர். அவர்கள் இருவரும் நீதிமன்றத்தில் ஆஜராகி தங்களது குற்றத்தை […]

இலங்கை

யாழில் மர்மமான முறையில் உயிரிழந்த இளைஞன்!

  • July 19, 2023
  • 0 Comments

யாழ்ப்பாணம் – இணுவில் பகுதியில் உள்ள விடுதியில், போதை ஊசி ஏற்றிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். யாழ்ப்பாண போதனா போதனா வைத்தியசாலைக்கு சொந்தமான விடுதியில் கடமையில் ஈடுபட்டிருந்த பாதுகாப்பு உத்தியோகத்தருக்கு பழக்கமான குறித்த இளைஞன் நேற்று (18.07) இரவு விடுதிக்கு வந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும் பின்னர் அவரை காணாத நிலையில் தேடிச் சென்றபோது விடுதியின் ஒரு பக்கத்தில் இறந்த நிலையில் காணப்பட்டார் என சடலத்தை பார்த்தவர்கள் பொலிஸாரிடம் கூறியுள்ளனர். அவரின் அருகில் ஊசி மூலம் போதை ஏற்றியதற்கான […]

இலங்கை

திரிபீடக புத்தகத் தொடரை இணையத்தில் வெளியிட நடவடிக்கை!

  • July 19, 2023
  • 0 Comments

தேசிய மரபுரிமையாக அறிவிக்கப்பட்டுள்ள சம்புத்த ஜெயந்தி திரிபீடக புத்தகத் தொடரை இணையத்தில் வெளியிட பௌத்த, மத மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சு தீர்மானித்துள்ளது. புத்தசாசன, சமய மற்றும் கலாச்சார அலுவல்கள் அமைச்சர்  விதுர விக்கிரமநாயக்க ஆங்கிலத்தில் எழுதி இணையத்தில் வெளியிடப்படும் என்றும், பின்னர் அச்சிடப்படும் என்றும் தெரிவித்தார். உள்நாட்டிலும் சர்வதேச ரீதியிலும் திரிபீடகத்தை ஆராய்வதில் ஆர்வமுள்ள அனைத்து பாமர, மதகுருமார்களின் சார்பாக இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டுள்ளார். மகாநாயக்கர்களின் ஆலோசனை மற்றும் அங்கீகாரத்தைப் பெற்ற பின்னரே […]

பொழுதுபோக்கு

த்ரிஷாவுக்கே டஃப் கொடுக்கும் ரக்ஷிதா… அப்படி என்ன செஞ்சிருக்காங்கனு பாருங்க…

  • July 19, 2023
  • 0 Comments

விஜய் டிவியில் ஒளிபரப்பான ‘பிரிவோம் சந்திப்போம்’ என்கிற தொடர் மூலம் தமிழில் அறிமுகமானவர் ரக்ஷிதா மஹாலக்ஷ்மி. கருப்பு பெண்ணாக இந்த சீரியலில் நடித்ததால்… பலரும் இவர் கருப்பாக இருக்க கூடிய நடிகை என்றே நினைத்த நிலையில், பல வருடங்களுக்கு பின்னர் தான் இவர் கருப்பு நிறத்தில் தன்னை காட்டிக்கொள்ள மேக்கப் போட்டு நடித்தார் என்று தெரியவந்தது. மேலும் இந்த கதாபாத்திரம் தனக்கு மிகவும் பிடித்திருந்ததால், கருப்பான தோற்றத்தில் நடிக்க ஒப்புக்கொண்டதாகவும் ரக்ஷிதா தெரிவித்திருந்தார். இந்த சீரியலுக்கு பின்னர், […]

வாழ்வியல்

பல்வலியை 10 நிமிடங்களில் இலகுவாக போக்கும் பாட்டி வைத்தியம்!

  • July 19, 2023
  • 0 Comments

தலைவலியைப் போல பல்வலியும் ஒருவருக்கு மிகுந்த துன்பத்தைத் தரும். சாதாரணமாக தண்ணீர் குடிக்கக் கூட முடியாமல் நம்மை அவஸ்த்தைப்பட வைக்கும் பல்வலியை வீட்டில் இருக்கும் பொருட்களை வைத்தே சரி செய்யலாம். பின் வரும் வழிமுறைகளில் ஏதாவது ஒன்றை கடைப்பிடித்து வலியில் இருந்து நிவாரணம் பெறலாம். 1. கிராம்பு ஒன்றை எடுத்து கடைவாய் ஓரம் அதக்கிக் கொண்டால் பல்வலி குறையும். 2. ஒரு ஸ்பூன் பெருங்காயத்தூளை வெறும் வாணலியில் வாசனை வரும் வரை வறுத்து, பல் வலி இருக்கும் […]

இலங்கை

வைத்தியசாலைக்கு செல்பவர்கள் அனைவரும் குணமடைய மாட்டார்கள் – கெஹலிய ரம்புக்வெல்ல!

  • July 19, 2023
  • 0 Comments

100,000 பேர் நோய்வாய்ப்பட்டு வைத்தியசாலைக்கு சென்றால் அவர்கள் அனைவரும் குணமடைய மாட்டார்கள் என சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார். இதனால்தான் மருத்துவமனைகளுக்கு அருகில் மலர்வளையம் அமைக்கப்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார். போதைப்பொருள் விவகாரம் தொடர்பில் நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் முன்வைத்த குற்றச்சாட்டுகளுக்குப் பதிலளிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். கண்டி வைத்தியசாலையில் உயிரிழந்த சிறுமிக்கு வழங்கப்பட்ட தடுப்பூசி இலங்கைக்கு கொண்டு வரப்பட்டு சுமார் 20 வருடங்கள் ஆகிறது எனவும், தடுப்பூசி போடப்பட்ட மேலும் 12 குழந்தைகளும் அப்போது சிறுமி […]

இலங்கை

இலங்கை மக்களுக்கு வெளிநாட்டு ஆசைக்காட்டி ஏமாற்றும் கும்பல் – சுற்றவளைத்த பொலிஸார்

  • July 19, 2023
  • 0 Comments

இலங்கை மக்களுக்கு வெளிநாட்டு ஆசைக்காட்டி ஏமாற்றும் கும்பல் ஒன்று சுற்றிவளைக்கப்பட்டுள்ளது. வெளிநாட்டுத் தொழிலுக்காக, சட்டவிரோதமாக நபர்களை அனுப்பும் நடவடிக்கையில் ஈடுபட்ட நால்வர், பதுளை பகுதியில் கைதுசெய்யப்பட்டுள்ளனர். பெண் ஒருவர் உள்ளிட்ட நால்வரே இவ்வாறு கைதுசெய்யப்பட்டதாக, வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது. ஜப்பான், இத்தாலி மற்றும் கட்டார் ஆகிய நாடுகளில், தொழில்வாய்ப்பைப் பெற்றுத் தருவதாக கூறி, சில நபர்களிடம் அவர்கள் பண மோசடியில் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கை

உலக சந்தையில் தங்கத்தின் விலையில் ஏற்பட்ட திடீர் மாற்றம்!

  • July 19, 2023
  • 0 Comments

சமீப காலமாக இலங்கையில் தங்கம் ஏற்ற இறக்கத்துடன் பதிவாகி வருகின்றது. அந்தவகையில் இன்றைய தினம் (19.07) தங்கத்தின் விலையில் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக தெரியவருகிறது. உலகளவில் தங்கத்தின் விலை 1977 டொலர்கள் உயர்ந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது முன்னைய தினத்துடன் ஒப்பிடுகையில் சுமார் 25 டொலர்கள் அதிகரிப்பு என தரவுகள் தெரிவித்துள்ளன. இதற்கமைய இலங்கையில் 24 கெரட் பவுன் ஒன்றின் விலை 167,000 ரூபாவுக்கு விற்பனை செய்யப்படுகிறது. 22 கெரட் பவுன் ஒன்று 157,250 ரூபாவுக்கு விற்பனை செய்யப்படுவதாக சந்தை […]

விளையாட்டு

மெஸ்ஸியின் முதல் ஆட்டத்தைக் காண 110,000 டொலருக்கு விலைபோன நுழைவுச்சீட்டு

  • July 19, 2023
  • 0 Comments

காற்பந்து நட்சத்திரம் லயனல் மெஸ்ஸி அமெரிக்காவின் Inter Miami காற்பந்து அணியில் தமது முதல் ஆட்டத்தில் களமிறங்கவுள்ளார். எதிர்வரும் வெள்ளிக்கிழமை இந்த ஆட்டம் இடம்பெறவுள்றது. அதற்கான நுழைவுச்சீட்டு விற்பனை சூடுபிடித்துள்ளது. சில இருக்கைகளுக்கான நுழைவுச்சீட்டின் விலை 110,000 டாலர் என்று Vivid Seats இணையத்தளத்தை மேற்கோள் காட்டி தகவல் வெளியிட்டுள்ளது. MLSஇல் பதிவான வரலாறு காணாத விலையாக அது கருதப்படுகிறது. குறைந்த விலை நுழைவுச்சீட்டுகளும் உள்ளன. அவை சராசரியாக 487 டொலருக்கு விற்கப்படுகின்றன. மெஸ்ஸி கடந்த சனிக்கிழமை […]

இலங்கை

உண்மையை பேசுங்கள் – இலங்கை அரசியல் வாதிகளிடம் உலக வங்கியின் பணிப்பாளர் கோரிக்கை!

  • July 19, 2023
  • 0 Comments

தயவ செய்து உண்மையை பேசுங்கள் எனவும் இது அரசியல் செய்வதற்கான நேரம் அல்ல எனவும், இலங்கைக்கான உலக வங்கியின் பணிப்பாளர் பரிஸ் ஹடாட் சர்வோஸ் தெரிவித்துள்ளார். கொழும்பில் நேற்று (18.07) இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். இதன்போது தொடர்ந்தும் கருத்து வெளியிட்டுள்ள அவர், பொருளாதார பிரச்சினைக்கு தீர்வு காணும் நோக்கில் இலங்கை தற்போது முன்னெடுத்து வரும் வேலைத்திட்டம் பாராட்டுக்குரியது எனக் கூறினார். இலங்கை தற்போது எதிர்பாராத நெருக்கடியை எதிர்கொண்டுள்ளது. […]