பாகிஸ்தானில் அடுத்தடுத்து மோதிக் கொண்ட 6 பேருந்துகள் -35 பேர் காயம்!
பாகிஸ்தானில் அடுத்தடுத்து 6 பேருந்துகள் மோதி கொண்ட சம்பவத்தில் 35 பேர் காயம் அடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத் மற்றும் ராவல்பிண்டி நகரங்களில் கனமழை பெய்து வருகிறது. இந்த நிலையில், இஸ்லாமாபாத்-பெஷாவர் சாலையில் சென்று கொண்டிருந்த 6 பேருந்துகள் புர்ஹான் பகுதியில் அடுத்தடுத்து மோதி விபத்துக்குள்ளாகியுள்ளன. இந்த விபத்தில் 35 பேர் காயமடைந்துள்ளனர். இதனை அந்நாட்டு செய்தி நிறுவனம் ஒன்று தெரிவித்துள்ளது.