பொழுதுபோக்கு

“சூப்பர் ஸ்டார்” பட்டம்… பதிலடிக்கு தயாராகும் ரஜினி

  • July 24, 2023
  • 0 Comments

பல வருடங்களாக சூப்பர் ஸ்டார் என்ற பட்டத்தை வைத்து கொடி கட்டி கெத்தாக பறந்து வருகிறார் ரஜினி. ஆனால் இந்த பட்டத்தை பறிப்பதற்கு பல நடிகர்கள் போட்டி போட்டு கமுக்கமாக வந்த நிலையில், தற்போது அப்பட்டமாகவே விஜய் மற்றும் இவருடைய ரசிகர்கள் சூப்பர் ஸ்டார் பட்டத்தை அபகரிக்கும் வகையில் பல விஷயங்களை செய்து வருகிறார்கள். தற்போது இது பற்றியான பேச்சுக்கள் தான் சமூக வலைதளங்களில் தீயாகப் பரவி வருகிறது. என்னதான் ரசிகர்கள் ஆசைப்பட்டாலும் அதற்கு ஒரு முற்றுப்புள்ளி […]

ஆசியா

சுலவேசி தீவில் படகு விபத்து – 15 பேர் பலி!

  • July 24, 2023
  • 0 Comments

இந்தோனேசியாவின் சுலவேசி தீவில் படகொன்று மூழ்கி விபத்துக்குள்ளாகியதில் குறைந்தது 15 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த விபத்து இன்று (24.07) அதிகாலை இடம்பெற்றதாக அந்நாட்டு ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன. குறித்த படகில் 40 பேர் பயணித்த நிலையில்இ அவர்களில் 15 பேர் உயிரிழந்துள்ளதாகவும்  19 பேர் காணாமல் போயுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். காணாமல்போனவர்களை தேடும் நடவடிக்கையில் மீட்பு பணியாளர்கள் ஈடுபட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொழுதுபோக்கு

விஜய் ஆண்டனியின் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?

  • July 24, 2023
  • 0 Comments

விஜய் ஆண்டனி இசை அமைப்பாளராக அறிமுகமாகி இன்று கதாநாயகனாக அவதாரம் எடுத்திருக்கிறார். இவர் தேர்ந்தெடுத்து நடிக்கும் படங்களுக்கு ரசிகர்கள் ஏராளம். இப்போது முழுவதுமாக படங்களில் ஹீரோவாக நடிப்பதில் தான் விஜய் ஆண்டனி ஆர்வம் காட்டி வருகிறார். அந்த வகையில் அவருடைய நான் படம் ரசிகர்களை பெரும் அளவில் கவர்ந்த நிலையில் பிச்சைக்காரன் படம் வேறு தரத்திற்கு அவரைக் கொண்டு சென்றது. மேலும் சமீபத்தில் இப்படத்தின் இரண்டாம் பாகம் வெளியாகி இருந்தது. பிச்சைக்காரன் 2 பெரிய அளவில் வெற்றி […]

இலங்கை

இலங்கையில் பல ரயில் சேவைகள் இரத்து!

  • July 24, 2023
  • 0 Comments

ரயில் சாரதிகள் நேற்று (23.07) முதல் தொழிற்சங்க போராட்டத்தை முன்னெடுத்து வருகின்ற நிலையில், பல ரயில்கள் இரத்து செய்யப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது. நேற்றைய தினத்தில் மாத்திரம் 21 ரயில்கள் இரத்து செய்யப்பட்டிருந்த நிலையில், இன்று காலை மேலும் 11 ரயில்கள் இரத்து செய்யப்பட்டுள்ளதாக  ரயில்வே திணைக்களத்தின் பிரதிப் பொது முகாமையாளர் என்.ஜே.இண்டிபோலகே குறிப்பிட்டார். அதன்படி பிரதான பாதையில் 05 புகையிரதங்களும், புத்தளம் பாதையில் ஒரு புகையிரதமும், வடக்கு புகையிரத பாதையில் மற்றுமொரு புகையிரதமும் இரத்து செய்யப்படுவதாக […]

இலங்கை

வெளிநாட்டு சுற்றுலா பயணி ஒருவர் இலங்கையில் கைது!

  • July 24, 2023
  • 0 Comments

ஸ்பெயின் சுற்றுலா பயணி ஒருவர் செலுத்திய கார் ஒன்று முச்சக்கர வண்டி ஒன்றுடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. இதில் முச்சக்கர வண்டியில் பயணம் செய்த நால்வர் காயமடைந்த நிலையில், கம்பளை மற்றும் பேராதனை வைத்தியசாலைகளில் அனுமதிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். குறித்த விபத்து கண்டி நுவரெலியா வீதியில் 474/டி கட்டுகித்துல பகுதியில் நேற்று (23.07) இந்த விபத்து நேர்ந்துள்ளகது. விபத்துடன் தொடர்புடைய காரை ஓட்டிச் சென்ற ஸ்பெயின் நாட்டைச் சேர்ந்த பெண் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், […]

இலங்கை

பச்சை குத்துவதால் இலங்கையர்களுக்கு ஏற்பட்டுள்ள ஆபத்து!

  • July 24, 2023
  • 0 Comments

பச்சை குத்துவதில் கட்டுப்பாடுகள் இல்லாததன் காரணமாக எயிட்ஸ் உள்ளிட்ட சமூக நோய் தாக்கம் அதிகரிக்கவும் வேறு பல நோய்கள் பரவுவதற்கும் வாயப்புள்ளது என இலங்கை பச்சை குத்தும் சங்கம் தெரிவித்துள்ளது. இந்த நிறுவனங்கள் அரசாங்கத்தால் கட்டுப்படுத்தப்படாததாலும் நிறுவனங்கள் சரியான பாதுகாப்பு நடவடிக்கைகளை பின்பற்றாததாலும் இந்த நிலை அதிகரித்துள்ளதாகவும் குறித்த சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது. இலங்கையில் கிட்டத்தட்ட ஐயாயிரம் பச்சை குத்தும் நிறுவனங்கள் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளதுடன் அவற்றில் 140 நிறுவனங்கள் மட்டுமே பச்சை குத்தும் சங்கத்தின் கீழ் பதிவு செய்யப்பட்டுள்ளதாக […]

இலங்கை

கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி: நீதி கோரி ஹர்த்தாலுக்கான அழைப்பு

  • July 24, 2023
  • 0 Comments

கொக்குத்தொடுவாய் மனித புதைகுழிக்கு நீதி கோரி வடக்கு கிழக்கு தழுவிய ரீதியில் எதிர்வரும் வெள்ளிக்கிழமை (28)பூரண ஹர்த்தாலை மேற்கொள்ள வடக்கு கிழக்கு வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களின் உறவுகள் சங்கம் அழைப்பு விடுத்துள்ளது. யாழ் ஊடக அமையத்தில் இன்றைய தினம் திங்கட்கிழமை(24) இடம்பெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் ஹர்த்தாலுக்கான அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அன்றைய தினம் வெள்ளிக்கிழமை, பேரணி ஒன்று, வட்டுவாகல் பாலத்தில் ஆரம்பித்து முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தை சென்றடைவதற்கான ஏற்பாடுகளும் முன்னெடுக்கப்பட்டுள்ளதுடன் , பேரணியில் கலந்து கொள்வோருக்கான போக்குவரத்து ஒழுங்குகளும் […]

வட அமெரிக்கா

அமெரிக்காவில் கறுப்பின இளைஞர்மீது நாயை ஏவிவிட்ட பொலிஸார்!

  • July 24, 2023
  • 0 Comments

அமெரிக்காவின் ஓஹியோ மாகாணத்தில் போக்குவரத்து சோதனையின் போது, கருப்பின இளைஞரை காவல்துறையினர் நாயை கொண்டு கடிக்க வைத்து கைது செய்த சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. கடந்த ஜூலை 4ம் திகதி நடைபெற்ற இந்த மனிதாபிமான மற்ற காணொளி வெளியாகி அமெரிக்கா முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. 23 வயதான ஜடாரியஸ் ரோஸ் என்ற கருப்பின இளைஞர் ஓட்டி வந்த கனரக வாகனத்தை ஓஹியோ மாகாண பொலிஸார் நிறுத்தக் கோரிய போது, அவர் நிறுத்தாமல் சென்றதாக […]

இலங்கை

கொழும்பில் பரபரப்பு – தாய் மற்றும் தந்தையுடன் வந்த சிறுமியை கடத்த முயற்சி

  • July 24, 2023
  • 0 Comments

கொழும்பு காலி முகத்திடலுக்கு தனது தாய் மற்றும் தந்தையுடன் வந்த ஏழு வயது சிறுமியை கடத்திச் செல்ல முயற்சித்ததாக தெரிவிக்கப்படுகின்றது. சம்பவத்திற்கு தொடர்புடைய நபரை கோட்டை பொலிஸார் கைது செய்துள்ளனர். தங்கள் மகளை ஒருவர் கடத்திச் செல்வதாக கூறி சிறுமியின் பெற்றோர் உதவி கேட்டு அலறியபோது அங்கிருந்த மக்களால் சந்தேக நபர் பிடிக்கப்பட்டு பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட சந்தேக நபர் உடப்புஸல்லாவை பிரதேசத்தை சேர்ந்த 33 வயதுடையவர் ஆவார்.

பொழுதுபோக்கு

மின்சாரம் தாக்கி ரசிகர் பலி.. குடும்பத்திற்கு ஆறுதல் கூறினார் நடிகர் சூர்யா

  • July 24, 2023
  • 0 Comments

நடிகர் சூர்யா நேற்று தனது 48வது பிறந்தநாளை கொண்டாடினார். இதையொட்டி சூர்யாவின் ரசிகர் மன்றம் சார்பில் பல்வேறு நலத்திட்ட உதவிகள் செய்யப்பட்டது. தமிழகத்தில் சூர்யாவின் பிறந்தநாளை கேக் வெட்டி ரசிகர்கள் கொண்டாடி மகிழ்ந்தனர். தமிழகத்தை போல மற்ற மாநிலங்களிலும் சூர்யாவிற்கு ரசிகர்கள் உள்ள நிலையில் ஆந்திர மாநிலத்தில் உள்ள நரசராவ்பேட்டையில் சூர்யாவின் பிறந்தநாளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்த பிறந்தநாள் கொண்டாட்டத்திற்காக மோபுரிவாரி பாலம் என்ற கிராமத்தை சேர்ந்த வெங்கடேஷ் என்பவரும், பாபட்லா மாவட்டத்தை சேர்ந்த லே பங்ளூரை […]