மத்திய கிழக்கு

கானாவில் தங்க சுரங்கம் இடிந்து விழுந்து விபத்து – 7 பேர் பலி

  • May 18, 2023
  • 0 Comments

மேற்கு ஆப்பிரிக்க நாடான கானாவில் ஏராளமான தங்க சுரங்கங்கள் உள்ளன. இவை உரிய அனுமதி பெற்று இயங்கி வரும் அதேவேளையில் உள்ளூர் மக்கள் சிலர் சட்டவிரோதமாக சுரங்கங்களை அமைத்து தங்கத்தை வெட்டி எடுக்கிறார்கள். இதுபோன்ற சட்டவிரோத தங்க சுரங்கங்களில் அடிக்கடி விபத்து ஏற்பட்டு உயிரிழப்பு நிகழ்வது தொடர்கதையாக உள்ளது. இந்தநிலையில் கானாவின் கிழக்கே அமைந்துள்ள சின்குவா பகுதியில் உள்ள தங்கசுரங்கத்தில் தொழிலாளர்கள் சிலர் தங்கம் வெட்டி எடுக்கும் பணியில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது எதிர்பாராதவிதமாக அந்த பகுதியில் […]

ஆஸ்திரேலியா செய்தி

அவுக்கஸ் அணுசக்தி நீர்மூழ்கி திட்டத்தை கடுமையாக விமர்சிக்கும் சீனா!

  • May 18, 2023
  • 0 Comments

அவுஸ்ரேலியாவின் அவுக்கஸ் அணுசக்தி நீர்மூழ்கி திட்டத்தை சீனா கடுமையாக விமர்சித்துள்ளது. இது குறித்து கருத்து வெளியிட்டுள்ள  அவுஸ்திரேலியாவிற்கான சீன தூதுவர் சியா சியான், அவுக்கஸ் கடினஉழைப்பாளிகளான அவுஸ்திரேலிய மக்களின் வரிப்பணத்தை தேவையற்று செலவுசெய்யும் திட்டம் எனவும் குறிப்பிட்டுள்ளார். பல தசாப்தகால பாதுகாப்பு திட்டம் பெருமளவு பணத்தை பயன்படுத்தும் என தெரிவித்துள்ள அவுஸ்திரேலியாவிற்கான சீன தூதுவர் இந்த பணத்தை உட்கட்டமைப்பு வாழ்க்கை செலவை குறைத்தல் அவுஸ்திரேலிய மக்களிற்கு சிறந்த எதிர்காலத்தை வழங்குதல் போன்றவற்றிற்காக பயன்படுத்தலாம் எனவும் குறிப்பிட்டுள்ளார். சீன […]

பொழுதுபோக்கு

பாலிவுட் மாஸ் ஹீரோவின் தங்கை வீட்டில் நடந்த அதிர்ச்சி சம்பவம்

  • May 18, 2023
  • 0 Comments

பிரபல பாலிவுட் நடிகர் சல்மான் கானின் தங்கை அர்பிதா கானின் வீட்டில் விலை உயர்ந்த வைர கம்மல்களை வீட்டில் வேலை செய்து வந்த நபர் திருடியதாக கடந்த மே 16ம் தேதி போலீஸ் நிலையத்தில் அர்பிதா கான் மற்றும் அவரது கணவர் புகார் அளித்துள்ளனர். அர்பிதா கானின் புகாரை விசாரித்த போலீஸார் குற்றவாளியை உடனடியாக கைது செய்து விட்டதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. அர்பிதா கான் மும்பையில் உள்ள கர் பகுதியில் வசித்து வருகிறார். அவரது வீட்டில் […]

ஐரோப்பா

வெஸ்ட்மின்ஸ்டர் மாளிகையில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்

  • May 18, 2023
  • 0 Comments

உலகில் ஒற்றுமையை வெளிப்படுத்தும் வகையில், பல்வேறு அரசியல் கட்சிகளைச் சேர்ந்த பிரித்தானிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் இன்று முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் தினத்தை முன்னிட்டு வெஸ்ட்மின்ஸ்டர் மாளிகையில் ஒன்று கூடி இலங்கையில் தமிழர்களுக்கு எதிராக நடத்தப்பட்ட இனப்படுகொலையில் உயிரிழந்தவர்களுக்கு மரியாதை செலுத்தினர். தமிழர்களுக்கான அனைத்துக் கட்சி நாடாளுமன்றக் குழுவின் (APPG-T) ஏற்பாட்டில் நடைபெற்ற இந்நிகழ்வில் நினைவுப் புத்தகத்தில் கையொப்பமிடுதல், காணொளி காட்சிப்படுத்தல் மற்றும் கண்காட்சி இடம்பெற்றது. இந்நிலையில் கன்சர்வேட்டிவ், லேபர், லிபரல் டெமாக்ராட்ஸ் மற்றும் ஸ்காட்லாந்து தேசியக் கட்சியின் எம்.பி.க்கள் […]

செய்தி தமிழ்நாடு

கார் டயர் வெடித்து 5 பேர் படுகாயம்

  • May 18, 2023
  • 0 Comments

செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் புறவழி சாலையில் சென்னையில் இருந்து யாமேஷ் என்பவர் தனது சொந்த ஊரான வந்தவாசிக்கு மனைவி இரு குழந்தைகள் என குடும்பத்துடன் காரில் சென்று கொண்டிருந்தார். அப்போது மதுராந்தகம் அருகே கார் வந்து கொண்டிருந்தது திடீரென காரின் முன் டயர் வெடித்ததில் நிலை தடுமாறி கார் முன்னாள் சென்று கொண்டிருந்த ஆட்டோ மற்றும் எதிர் திசையில் வந்து கொண்டிருந்த இரு இருசக்கர வாகனங்கள் மீது அதி வேகமாக மோதியது. இந்த விபத்தில் ஆட்டோவில் பயணம் […]

செய்தி தமிழ்நாடு

அமைச்சர் மெய்யநாதன் காரில் மோதிய புதுமண தம்பதிகள்

  • May 18, 2023
  • 0 Comments

செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரம் அடுத்த மணமை கிழக்கு கடற்கரை சாலையில் சென்னையிலிருந்து மயிலாடுதுறை நோக்கி சென்ற தமிழக காலநிலை மாற்றம் மற்றும் சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மெய்யநாதனின் கார் முன் சென்ற வாகனத்தை அதி வேகத்தில் முந்தி செல்ல முயலும் போது எதிரே வந்த இருசக்கர வாகனம் மீது மோதி இரு சக்கர வாகனத்தில்,பாண்டிச்சேரி அடுத்த கடலூரில் இருந்து சென்னை நோக்கி சென்ற புதுமண தம்பதியினர் தூக்கி வீசப்பட்டு கணவன் ஜான்சன் சம்பவ இடத்திலேயே பலி, மனைவி […]

அறிவியல் & தொழில்நுட்பம்

ChatGPT தொடர்பில் எலான் மஸ்க் எடுத்த திடீர் தீர்மானத்தால் குழப்பம்

  • May 18, 2023
  • 0 Comments

ChatGPT-க்கு உருவாக்கம் மற்றும் செயல்பாட்டிற்கும் ஒதுக்கிய தொகையை பாதியாக குறைத்து எலான் மஸ்க் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளார். உலக பணக்காரர்களின் ஒருவரான எலான் மஸ்க் டிவிட்டர் நிறுவனத்தை வாங்கியதை தொடர்ந்து, செயற்கை நுண்ணறிவான AI தொழில்நுட்ப செயலி உருவாக்கத்தில் தனது குழுவினரை களமிறங்கினார். அதன்படி, ChatGPT எனும் தளம் உருவாக்கப்பட்டது. இதனை தொடர்ந்து, இதற்கு 100 மில்லியன் அமெரிக்க டொலர் ஒதுக்கப்படும் என அறிவித்து இருந்தார். இந்நிலையில், அண்மையில் ஒரு பேட்டியில், AI தொழில்நுட்பத்திற்கு ஒதுக்கப்பட்டநிதி குறித்து கேட்கையில், […]

செய்தி தமிழ்நாடு

ஆற்றில் தவறி விழுந்த சிறுமி பலி

  • May 18, 2023
  • 0 Comments

செங்கல்பட்டு மாவட்டம், திருக்கழுக்குன்றம் அடுத்த எடையாத்தூர் பகுதியில் வசித்து வரும் புஷ்பா என்பவரது 11 வயது மகள் தீபிகா, இன்று எடையத்தூர் பாலாற்றில் துணி துவைக்க சென்ற போது தவறி விழுந்து பலியான சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இவரது சொந்த ஊரான கல்பாக்கம் அடுத்த கடலூர் கிராமத்தில் தனது கணவருடன் வசித்து வந்த நிலையில் 10 ஆண்டுகளுக்கு முன் அவரது கணவர் இறந்துள்ளார். அதனால் கடந்த பத்து ஆண்டுகளாக புஷ்பா தனது தாய் […]

பொழுதுபோக்கு

“சிம்பு வந்தால் நாங்கள் வரமாட்டோம்” ஜெயம் ரவி, விக்ரமின் உண்மை முகம் வெளியானது….

  • May 18, 2023
  • 0 Comments

நடிகர் சிம்புவுக்கு விக்ரமும், ஜெயம் ரவியும் துரொகம் செய்துவிட்டதாக கோடம்பாக்கத்தில் பரபரப்பாக பேசப்பட்டுவருகிறது. “பொன்னியின் செல்வன் படத்தில் என்னை கூப்பிட்டு மூன்று கேரக்டர்களில் எதை வேண்டுமானாலும் நீ எடுத்துக்கோ என்றார். ஆனால் விக்ரமும், ஜெயம் ரவியும் மணி சாரிடம் இந்தப் படத்துக்குள் சிம்பு வந்தால் நாங்கள் வரமாட்டோம் என ஸ்ட்ரிக்ட்டாக சொல்லிவிட்டார்கள். நானும் எதற்குப் பிரச்னை என்று விலகிவிட்டேன்” என கூறினாராம். முன்னதாக, பொன்னியின் செல்வன் படத்தின் முதல் பாக ப்ரோமோஷனின்போது ஜெயம் ரவியிடம் பத்திரிகையாளர்கள் இந்த […]

இலங்கை

இலங்கையில் 20 நாட்களில் 16 கொரோனா மரணங்கள்! சுகாதார பிரிவினர் எச்சரிக்கை

  • May 18, 2023
  • 0 Comments

இலங்கையில் கடந்த 20 நாட்களில் 16 கொவிட்-19 நோயாளிகள் உயிரிழந்துள்ளனர். சுகாதார அமைச்சின் தொற்றுநோய் பிரிவு இதனை தெரிவித்துள்ளது. ஏப்ரல் 27ஆம் திகதி கொரோனா நோயால் ஒரு மரணம், அதே மாதம் 23ஆம் திகதி ஒரு மரணம், மே 1ஆம் திகதி ஒரு மரணம் மற்றும் மே 5ஆம் திகதி மேலும் மூன்று மரணங்களும் இவற்றில் உள்ளடங்குவதாக தொற்றுநோயியல் துறை மேலும் கூறுகிறது. இதேவேளை, கடந்த 8ஆம், 9ஆம் திகதிகளில் இரு மரணங்களும், 11ஆம் திகதி மேலும் […]

You cannot copy content of this page

Skip to content