இலங்கை

தன் குழந்தையை தூக்கி தலைகீழாக அடித்த தந்தை!

  • May 22, 2023
  • 0 Comments

தன்னுடைய மூன்று வயதான குழந்தை தூக்கி, நிலத்தில் தலைகீழாக அடித்த தந்தையை கைது செய்துள்ளதாக அவிசாவளை பொலிஸார் தெரிவித்தனர். அவிசாவளை இஹல தல்துவ பிரதேசத்தில் வசிக்கும் நபரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். குழந்தையை தூக்கி தலைகீழாக அடித்த மேற்படி நபர், மனைவியின் முன்பாக சென்று நஞ்சருந்தியுள்ளார். அதன்பின்னர் சந்தேகநபரையும் குழந்தையையும் பொதுமக்கள் மீட்டு வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர். அடிப்படை சிகிச்சையை பெற்றுக்கொண்டதன் பின்னர் வைத்தியசாலையில் இருந்து சந்தேகநபர் தப்பியோடியிருந்த நிலையில் கைது செய்யப்பட்டுள்ளார். காயமடைந்த குழந்தையின் தலை பிளந்து […]

இலங்கை

03 நாட்களுக்குகள் கடவுச்சீட்டு வழங்கும் புதிய முறை விரைவில் அமுலுக்கு வரும்!

  • May 22, 2023
  • 0 Comments

03 நாட்களுக்குள் கடவுச்சீட்டு வழங்கும் புதிய முறை அடுத்த மாதம் ஆரம்பிக்கப்படும் என பொது பாதுகாப்பு அமைச்சர் டிரன் அலஸ் தெரிவித்துள்ளார். பிரதேச செயலகங்களில் புகைப்படங்கள் மற்றும் கைரேகைகளை சேகரிக்கும் வகையில் மேலும் 50 இடங்களை இணைத்து இதனை அறிமுகப்படுத்தவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். பொது பாதுகாப்பு அமைச்சில் இடம்பெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த அவர் இவ்வாறு கூறினார். இதேவேளை, இரண்டு கடவுச்சீட்டுகளுடன் நாட்டிற்குள் பிரவேசித்ததாகக் கூறப்படும் சீனப் பிரஜை இன்று அழைக்கப்படவுள்ளதாகவும், […]

இலங்கை

அரசியல் வாதிகளின் வீடுகள் எரிக்கப்பட்டது தொடர்பில் தாக்கல் செய்யப்பட்ட மனு வாபஸ் பெறப்பட்டது!

  • May 22, 2023
  • 0 Comments

நாடளாவிய ரீதியில் கடந்த வருடம் மே மாதம் 9 ஆம் திகதி அமைச்சர்கள் மற்றும் அரசியல்வாதிகளின் வீடுகள் எரித்து நாசமாக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் விசாரணை நடத்துமாறுகோரி அமைச்சர் பந்துல குணவர்தன உள்ளிட்டோர் மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு இன்று (22) வாபஸ் பெறப்பட்டது. இந்த மனு இன்று மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டபோது  பொது பாதுகாப்பு அமைச்சர் சார்பில் ஆஜரான பிரதி சொலிசிட்டர் ஜெனரல்,  நடந்த சம்பவங்கள் குறித்து முறையான விசாரணை நடத்த நடவடிக்கை […]

பொழுதுபோக்கு

பிரபல நடிகர் சரத் பாபு உயிரிழந்தார்

  • May 22, 2023
  • 0 Comments

நடிகர் சரத் பாபு உடல்நிலை கவலைக்கிடமாக இருந்து வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்தார். உடல் நலக் குறைவு காரணமாக ஐதராபாத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்த அவருக்கு சிறுநீரகம், கல்லீரல் உள்ளிட்ட உறுப்புகள் பாதிக்கப்பட்டிருந்தன. 72 வயதான நடிகர் சரத்பாபு கிட்டத்தட்ட 50 வருடங்களாக திரைப்படங்களில் நடித்துள்ளார். தமிழில் முள்ளும் மலரும், உதிரிபூக்கள், நெஞ்சத்தை கிள்ளாதே, நெற்றிக்கண், வேலைக்காரன், அண்ணாமலை போன்ற பல படங்களில் நடித்தவர் […]

ஐரோப்பா

ஜெலென்ஸ்கி மூலம் ரஷ்ய எதிர்ப்பு வெறியை தூண்டிவிட்டார்கள் – ரஷ்யா பரபரப்பு குற்றச்சாட்டு

  • May 22, 2023
  • 0 Comments

உக்ரைன் ஜனாதிபதி ஜெலென்ஸ்கியை அழைத்து, G7 மாநாட்டை பிரச்சார நிகழ்ச்சியாக மாற்றிவிட்டார்கள் என ரஷ்யா குற்றம்சாட்டியுள்ளது. ஜப்பானில் நடந்த ஜி7 மாநாட்டில் உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி கலந்துகொண்டார். அங்கு அவர் பிற நாடுகளின் தலைவர்களிடம் ஆதரவு கோரினார்.அதனைத் தொடர்ந்து ஒவ்வொரு தலைவருக்கும் ஜெலென்ஸ்கி நன்றி தெரிவித்தார். இந்த நிலையில், ரஷ்ய வெளியுறவு அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் ஜி7 தலைவர்களை குற்றம்சாட்டியுள்ளது. குறித்த அறிக்கையில், ‘G7யின் தலைவர்கள் தாங்கள் கட்டுப்படுத்தும் கீவ் ஆட்சியின் தலைவரை, தங்கள் கூட்டத்திற்கு […]

ஐரோப்பா செய்தி

தளம்பல் நிலையில், எச்சரிக்கையுடன் ஆரம்பித்த ஐரோப்பிய பங்கு சந்தைகள்!

  • May 22, 2023
  • 0 Comments

ஐரோப்பிய பங்கு சந்தைகள் இன்று (22) தளம்பல் நிலையில் எச்சரிக்கையுடன் ஆரம்பமாகியதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. வோல் ஸ்ட்ரீடின் எதிர்காலம் கேள்விக்குரியுடன் போராடியதாக கூறப்படுகிறது. அமெரிக்க கடன் உச்சவரம்பு பேச்சுவார்த்தைகள் கடந்த வாரம் ஸ்தம்பிதத்திற்குப் பிறகு நெருக்கடி நிலை அதிகரித்துள்ளது. அமெரிக்க ஜனாதிபதி ஜோ பிடன் மற்றும் ஹவுஸ் குடியரசுக் கட்சியின் சபாநாயகர் கெவின் மெக்கார்த்தி ஆகியோர் இன்று தொலைப்பேசியில் கடன் உச்சவரம்பு பற்றி கலந்துரையாடியுள்ளனர். வரும் ஜுன் மாதம் முதலாம் திகதிக்கு பிறகு மத்திய […]

பொழுதுபோக்கு

‘தளபதி 68’ படத்தில் விஜய்யுடன் இணைகின்றார் அஜித்?? வெங்கட் பிரபு அதிகாரப்பூர்வ அறிக்கை

  • May 22, 2023
  • 0 Comments

விஜய்யின் அடுத்த படமான ‘தளபதி 68’ பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு நேற்று வெளியானது. இணையத்தை உலுக்கியது மற்றும் சமூக ஊடக தளங்களில் இன்னும் ட்ரெண்டிங்கில் உள்ளது. யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்க, வெங்கட் பிரபு இயக்கிய ஏஜிஎஸ் புரொடக்ஷன்ஸின் 25வது மைல்கல் படமாக இந்த மெகா கூட்டணி உருவாகியுள்ளது.. ‘பிகில்’ படத்திற்குப் பிறகு விஜய் மற்றும் ஏஜிஎஸ் கூட்டணியில் உருவாகும் இரண்டாவது படம் இதுவாகும். மேலும் 2002இல் வெளியான ‘புதிய கீதை’ படத்திற்குப் பிறகு விஜய் யுவனுடன் […]

இந்தியா

பிபிசிக்கு சம்மன் அனுப்பிய இந்திய உயர் நீதிமன்றம்!

  • May 22, 2023
  • 0 Comments

பிரதமர் நரேந்திர மோடியின் தலைமைத்துவத்தை கேள்விக்குள்ளாக்கிய ஆவணப்படம் தொடர்பான அவதூறு வழக்கில், பிரிட்டிஷ் ஒளிபரப்பு நிறுவனமான பிபிசிக்கு இந்தியாவின் டெல்லி உயர் நீதிமன்றம்  சம்மன் அனுப்பியுள்ளது. இந்த ஆண்டு தொடக்கத்தில் ஒளிபரப்பப்பட்ட “இந்தியா, மோடிக்கான  கேள்வி” என்ற ஆவணப்படம் இந்தியாவின் நற்பெயரையும், அதன் நீதித்துறை மற்றும் பிரதமரின் நற்பெயரையும் களங்கப்படுத்தியதாக அவதூறு வழக்கில் கூறப்பட்டுள்ளது. குஜராத் கலவரத்தை மையப்படுத்தி பிபிசி செய்துள்ள குறித்த ஆவணப்படத்திற்கு எதிர்ப்பு வெளியிடப்பட்டுள்ள நிலையில், புதுடெல்லி, மும்பையில் உள்ள பிபிசி அலுவலகங்களில் இந்திய […]

உலகம் மத்திய கிழக்கு

இஸ்ரேலில் அகதி முகாமிற்குள் புல்டோசர்களுடன் நுழைந்த இராணுவத்தினரால் பரபரப்பு!

  • May 22, 2023
  • 0 Comments

இஸ்ரேல்-பாலஸ்தீனம் இடையே நீண்ட காலமாக மோதல் போக்கு இருந்து வருகிறது. இதில் இஸ்ரேலுக்கு எதிராக ஹமாஸ் போராளி அமைப்பு செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் இஸ்ரேலால் ஆக்கிரமிக்கப்பட்ட மேற்கு கரை பகுதியில் உள்ள பாலாட்டா அகதிகள் முகாமில் இன்று அதிகாலை  ராணுவத்தினர்  அதிரடி சோதனை நடத்தினர். இதன்போது இராணுவத்தினர்  முகாமுக்குள் புல்டோசர்களுடன் புகுந்தனர். இதனால் இஸ்ரேல் ராணுவத்துக்கும்-பாலஸ்தீனர்களுக்கும் மோதல் ஏற்பட்டது. இதில் 3 பாலஸ்தீனர்களை இஸ்ரேல் ராணுவம் சுட்டுக் கொன்றதாக பாலஸ்தீன சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதனால் அங்கு […]

உலகம்

மத்திய அமெரிக்காவில் கால்பந்தாட்ட போட்டியை காணவந்த 12 பேர் உயிரிழப்பு!

  • May 22, 2023
  • 0 Comments

மத்திய அமெரிக்காவின் எல் சால்வடோர், நாட்டின் தலைநகர் சான் சால்வடாரில் கஸ்கட்லான் கால்பந்து மைதானம் உள்ளது. இங்கு சல்வடார் லீக் கால்பந்து போட்டிகள் நடைபெற்று வருகின்றன. தொடரில் காலிறுதி போட்டி நேற்று நடைபெற்றது. இதனை காண வந்த ரசிகர்கள் டிக்கெட் வைத்திருந்தும் மைதானத்தினுள் அனுமதிக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. இதன் காரணமாக ஆத்திரமடறந்த ரசிகர்கள் குறிப்பிட்ட நுழைவு வாயிலை தகரத்துக் கொண்டு உள்ளே செல்ல முயன்றுள்ளனர். ஆயிரக்கணக்கான ரசிகர்கள் மைதானத்திற்குள் நுழைய முயன்றதை அடுத்து  அங்கு ஏற்பட்ட கூட்ட […]

You cannot copy content of this page

Skip to content