ENGvsIND – இங்கிலாந்துக்கு எதிரான T20 தொடரை கைப்பற்றிய இந்தியா

இங்கிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. முதல் 3 போட்டிகள் முடிவில் 2-1 என்ற கணக்கில் இந்தியா முன்னிலை வகித்தது.
இந்நிலையில், இரு அணிகள் மோதும் 4வது டி20 போட்டி புனேவில் இன்று நடைபெற்றது. டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பவுலிங் தேர்வு செய்தது.
அதன்படி, முதலில் பேட் செய்த இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 9 விக்கெட்டுக்கு 181 ரன்கள் எடுத்தது.
182 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இங்கிலாந்து களமிறங்கியது.
இறுதியில், இங்கிலாந்து அணி 19.4 ஓவரில் 166 ரன்கள் எடுத்து ஆல்அவுட் ஆனது. இதனால் இந்திய அணி 15 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இதன்மூலம் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரை இந்திய அணி 3-1 என தொடரை கைப்பற்றியது.
(Visited 48 times, 1 visits today)