இந்தியா விளையாட்டு

மழை காரணமாக IPL இறுதிப்போட்டிக்கான நாணய சுழற்சி தாமதம்

  • May 28, 2023
  • 0 Comments

ஐ.பி.எல். தொடர் இறுதிக்கட்டத்தை நெருங்கி விட்டது. அகமதாபாத்தில் நடைபெறும் ஐ.பி.எல். தொடரின் இறுதிப்போட்டியில் முன்னாள் சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், நடப்பு சாம்பியன் குஜராத் டைட்டன்ஸ் அணியும் மோதுகின்றன. இந்நிலையில், மழை காரணமாக களத்தில் ஈரப்பதம் அதிகமாக உள்ளதால் டாஸ் சுண்டுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.

பொழுதுபோக்கு

அக்காவால் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் இருந்து விலகும் பிரபலம்!

  • May 28, 2023
  • 0 Comments

ஒவ்வொரு வாரமும் டிஆர்பி-யில் பயங்கர டஃப் கொடுத்துக் கொண்டிருக்கும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் இப்போது விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கிறது. தற்போது கண்ணன்- ஐஸ்வர்யா செய்த வேலையால் கதிரை போலீஸ் கைது செய்துள்ளது. இதனால் அண்ணன் தம்பிகள் சேர்ந்து நகைநட்டை எல்லாம் விற்று 5 லட்சத்தை ரெடி பண்ணி இப்போது கதிரை சிறையில் இருந்து வெளியே கொண்டு வந்திருக்கின்றனர். இந்த நிலையில் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் பல வருடங்களாக ஜீவா-மீனா தம்பதியரின் குழந்தைக்காக நடித்து வரும் கயல் பாப்பா […]

மத்திய கிழக்கு

தரையிறங்க முற்பட்ட எகிப்து ஏர் விமானத்தின் டயர் வெடித்ததால் பரபரப்பு!

  • May 28, 2023
  • 0 Comments

சவுதி அரேபியாவில் தரையிறங்க முற்பட்ட எகிப்து ஏர் விமானத்தின் டயர் வெடித்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இன்று (27) அதிகாலை கெய்ரோ சர்வதேச விமான நிலையத்தில் இருந்து MS643 என்ற விமானம் சவுதி அரேபியாவின் ஜெட்டாவில் உள்ள கிங் அப்துல்லாஜிஸ்  சர்வதேச விமான நிலையத்தில் தரையிறங்க முற்பட்டது. இதன்போது எதிர்பாராத விதமாக விமானத்தின் டயர் வெடித்ததால் பயணிகள் அதிர்சியடைந்துள்ளனர். இருப்பினும் குறித்த விமானம் பாதுகாப்பாக தரையிறக்கப்பட்டதாக விமான நிறுவனம் தெரிவித்துள்ளது. பிரச்சனைக்கு என்ன காரணம் என்பதை விமான நிறுவனம் […]

ஐரோப்பா

ரஷ்ய எல்லை பாதுகாப்பை பலப்படுத்த புட்டின் உத்தரவு!

  • May 28, 2023
  • 0 Comments

உக்ரைன மீது ரஷிய படைகள் போர் தாக்குதல் நடத்தி வருகிறது. இப்போர் ஒரு ஆண்டுக்கும் மேலாக நீடித்து கொண்டிருக்கிறது. இதில் சில நகரங்களை ரஷியா கைப்பற்றியது. உக்ரைனுக்கு ஆதரவாக அமெரிக்கா, மேற்கத்திய நாடுகள் ஆயுத உதவிகளை செய்து வருகின்றன. இதனால் ரஷிய படைகளுக்கு எதிராக உக்ரைன் ராணுவம் சண்டையிட்டு வருகிறது. ரஷியா வீசும் ஏவுகணை மற்றும் டிரோன்களை உக்ரைன் சுட்டு வீழ்த்தி வருகிறது. மேலும் ரஷிய எல்லை பகுதியில் உள்ள கிராமங்களில் தாக்குதல் நடத்தப்பட்டன. நேற்று மாஸ்கோவுக்கு […]

ஐரோப்பா

ஈரானுக்கு 50 ஆண்டுகளுக்கு தடை விதிக்குமாறு கோரிக்கை!

  • May 28, 2023
  • 0 Comments

ஈரானுக்கு 50 ஆண்டுகளுக்கு தடை விதிக்குமாறு உக்ரைன் நாடாளுமன்றத்திடம் ஜெலென்ஸ்கி கோரிக்கை விடுத்துள்ளார் இதன்படி ஈரானிய வர்த்தகம், முதலீடுகள் அதேபோல் பரிமாற்ற தொழில்நுட்பங்கள் மற்றும் உக்ரைனில் இருந்து ஈரானிய சொத்துக்களை திரும்பப் பெறுவது ஆகியவையும் உள்ளடங்கும் என அந்நாட்டு ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது. உக்ரைன் பாராளுமன்றம் சட்டமாக்குவதற்கு மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்க வேண்டும், இருப்பினும்  பாராளுமன்றம் இன்னும் வாக்கெடுப்பை திட்டமிடவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது. ஈரான், தொடர்ச்சியாக ரஷ்யாவிற்கு ட்ரோன்களை வழங்கி வருவதாக குற்றம் சாட்டுகிறது. இந்த நிலையிலேயே […]

வட அமெரிக்கா

நர மாமிசம் சாப்பிட வைக்க திட்டமிட்ட குடும்பத்தினருக்கு இளைஞர் செய்த செயல்!

  • May 28, 2023
  • 0 Comments

அமெரிக்காவில் குடும்பத்தினர் நர மாமிசம் சாப்பிட வைக்க திட்டமிட்டதால், அவர்களை கொடூரமாக கொலை செய்த இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார். அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் 18 வயது இளைஞர் ஒருவர், தனது சொந்த குடும்பத்தினரை கொலை செய்த குற்றத்திற்காக, சில தினங்களுக்கு முன்னர் கைது செய்யப்பட்டார்.சீசர் ஓலால்டே என்ற அந்த 18 வயது இளைஞர் தனது பெற்றோர், சகோதரி மற்றும் 5 வயது சகோதரன் முதற்கொண்டு, அனைவரையும் துப்பாக்கியால் சுட்டுக் கொலை செய்துள்ளார். கடந்த மே 23ம் திகதி […]

ஐரோப்பா

ஒரே நாளில் 400 ரஷ்ய வீரர்கள் கொல்லப்பட்டதாக உக்ரைன் அறிவிப்பு!

  • May 28, 2023
  • 0 Comments

உக்ரைன் – ரஷ்ய போர் ஒரு வருடத்தை கடந்து நடைபெற்று வருகின்ற நிலையில், நேற்றைய தினம் குறைந்தது 400 ரஷ்ய வீரர்கள் கொல்லப்பட்டதாக உக்ரைன் கூறியுள்ளது. போர் தொடங்கியதில் இருந்து இதுவரை 206,600 ரஷ்ய வீரர்கள் கொல்லப்பட்டுள்ளதாக உக்ரைன் அறிவித்துள்ளது. ரஷ்ய இழப்புகள் பற்றிய தினசரி புதுப்பிப்பில், உக்ரேனிய பாதுகாப்பு அமைச்சகம் 3,797 டாங்கிகள் மற்றும் 2,993 ட்ரோன்களையும் அழித்ததாகக் கூறியுள்ளது.

ஐரோப்பா

போரை ஆதரிப்பதற்காக ரஷ்யர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அறிவித்தல்!

  • May 28, 2023
  • 0 Comments

போரை ஆதரிப்பதற்காக ரஷ்யர்கள் வாரத்தில் ஆறு நாள் வேலை செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக இங்கிலாந்து பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது. இது குறித்து கிரெம்ளினிடம் மனு கொடுத்துள்ளதாகவும் இங்கிலாந்து பாதுகாப்பு அமைச்சகம் மேலும் கூறியுள்ளது. போரை ஆதரிப்பதற்காக ரஷ்யர்கள் தீவிரமாக தியாகங்களைச் செய்ய ஊக்குவிக்கப்படுகிறார்கள், எனத் தெரிவிக்கப்படுவதுடன்,  குடிமக்கள் ஒவ்வொரு நாளும் வெடிமருந்து தொழிற்சாலைகளில் கூடுதலாக இரண்டு மணிநேரம் வேலை செய்ய பணிக்கப்படுகிறார்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மத்திய கிழக்கு

துருக்கி நாட்டில் அதிபர் தேர்தல்..

  • May 28, 2023
  • 0 Comments

துருக்கி நாட்டில் அதிபராக ரீசெப் தயீப் எர்டோகன் பதவி வகித்து வருகிறார். நீண்ட காலம் அந்த பதவியில் பதவி வகித்து வரும் சூழலில், 600 இடங்களை கொண்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அதிபரை தேர்ந்தெடுக்கும் தேர்தல் இன்று தொடங்கி நடந்து வருகிறது. எர்டோகனை எதிர்த்து எதிர்க்கட்சி வேட்பாளராக கெமல் கிலிக்டாரொகுலு போட்டியிடுகிறார். நாட்டில் மக்கள் வாக்களிப்பதற்காக, மொத்தம் 1 லட்சத்து 91 ஆயிரத்து 885 வாக்கு பெட்டிகள் அமைக்கப்பட்டு உள்ளன.இன்று மாலை 5 மணிவரை மக்கள் வாக்களிக்கும் […]

பொழுதுபோக்கு

எதிர்பார்த்ததை விட மகத்தான வெற்றி!! வித்தியாசமான முறையில் கொண்டாடிய விஜய் ஆண்டனி

  • May 28, 2023
  • 0 Comments

தமிழ் திரையுலகில் முன்னணி இசையமைப்பாளராக வலம் வந்த விஜய் ஆண்டனி, தற்போது முழுநேர நடிகராக மாறிவிட்டார். இவர் நடிப்பில் அண்மையில் ரிலீஸ் ஆன திரைப்படம் பிச்சைக்காரன் 2 மூலம் இயக்குனராகவும் அவதாரம் எடுத்தார். உலகம் முழுவதும் 1500க்கும் மேற்பட்ட திரைகளில் இப்படம் வெளியானது. பிச்சைக்காரன் படத்தின் முதல் பாகத்திற்கு இணையாக இப்படம் இல்லாவிட்டாலும், பேமிலி ஆடியன்ஸை கவரும் விதமாக கதையம்சம் அமைந்திருந்ததால், கலவையான விமர்சனங்கள் வந்தாலும், இப்படம் பாக்ஸ் ஆபிஸில் வசூல் மழை பொழிந்து வருகிறது. குறிப்பாக […]

You cannot copy content of this page

Skip to content